இந்தியாவுக்கும் ஜிம்னாஸ் டிக்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மாற்றி எழுதியிருக்கிறார் தீபா கர்மாக்கர்.

22 வயது இளம் தாரகை. இந்த ஆண்டு பிரேசிலில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றிருக்கும் முதல் இந்தியப் பெண்.

ஜிம்னாஸ்டிக்கில், `Produnova’ பிரிவு மிகவும் சவாலானது. அந்தரத்தில் இரண்டு முறை பல்டி அடித்து, தரையில் நிலையாக கால் ஊன்றி நிற்கவேண்டும். உலகிலேயே இதுவரை ஐந்து பேர் மட்டுமே இதைச் சரியாகச் செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் தீபா. `தவறான ஒரு மூவ்மென்ட் உயிரையே பறித்துவிடும். ஆனாலும் நான் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு பயிற்சி எடுத்தேன். இன்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறேன்’ என்கிற தீபாவுக்கு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான் குறிக்கோள்.

மிகவும் பின்தங்கிய வடகிழக்கு மாநிலமான திரிபுரா, அகர்தலாவைச் சேர்ந்தவர் தீபா. இவரின் அப்பா துலால், பளு தூக்குதல் பயிற்சியாளர். அகர்தலா பெண்களிடையே, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு மிகவும் பிரபலம். எனவே தன் மகளை ஜிம்னாஸ்டிக்ஸில் சேர்த்தார் துலால்.

``நான் முதல்முறை சென்ற பயிற்சி மையத்தில், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கான எந்த ஓர் உபகரணமும் இல்லை. ஜிம்னாஸ்டிக் டேபிள்கூட அங்கு கிடையாது. ஒரு பாயின் மீது மற்றொரு பாயை வைத்து ஜிம்னாஸ்டிக் டேபிள் செய்து பயிற்சிபெறுவோம். மழைக்காலங்களில், பயிற்சி மையம் வெள்ளத்தில் மிதக்கும். சுற்றிலும் எலிகளும் கரப்பான்பூச்சிகளும் சுற்றும். அந்த நிலையிலும் நாங்கள் பயிற்சியை விட்டுவிடவில்லை.

என் பயிற்சியாளர் நந்தியும் என் அப்பாவும் என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். நான் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட பெரிதாகப் பாராட்டுவார்கள். என் மீதே எனக்குப் பெரிய நம்பிக்கையை வரவைத்தார்கள். அதுதான் என்னை இன்று சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக மாற்றியிருக்கிறது’' என்கிறார் தீபா கர்மாக்கர்.

2011-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட தீபா, ஐந்து தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றிதான் தீபாவின் மீது கவனத்தைக் கொண்டுவந்தது. 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் தீபாவுடையது. ஜப்பானில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் வெண்கலப் பதக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் கொஞ்சம் சறுக்கினார். அந்தப் போட்டியில் இவருக்கு 5-வது இடம்தான் கிடைத்தது. பிரேசில் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏதாவது ஒரு பதக்கம் வென்றாக வேண்டும். தீபா 5-வது இடம் பிடித்ததால், ஒலிம்பிக்குக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். ‘வைல்டு கார்டு’ முறையில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும் என்கிற சூழல். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதி தகுதிப்போட்டியில் வெற்றிபெற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார் தீபா.

‘‘2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் பயிற்சியாளர் நந்தி என்னிடம் 'Produnova' பிரிவு பற்றி சொன்னார். நான் எங்களுடைய பயிற்சி மையத்தில் ஆண்கள் இந்த ஜிம்னாஸ்டிக் பிரிவில் பயிற்சிபெறுவதைப் பார்த்திருக்கிறேன். இது மிகவும் கஷ்டம். அந்தரத்தில் இரண்டு பல்டிகள் அடித்து கீழே இறங்கும்போது உடலின் எடை இருமடங்காக இருக்கும். உதாரணத்துக்கு உடல் எடை 45 கிலோ என்றால், பல்டி அடித்து இறங்கும்போது 90 கிலோ எடை கால்களுக்கு வரும். அப்போது பேலன்ஸ் செய்து நிற்பது மிகவும் சிரமம். கொஞ்சம் தவறினாலும் கழுத்துதான் முதலில் பாதிக்கும். இது உயிருக்கே ஆபத்தில் முடியும். ஆனால், பயிற்சியாளர் சொன்னபோது, எனக்கும் `ஏன் முயற்சி செய்யக் கூடாது?' எனத் தோன்றியது. ஓ.கே சொல்லிவிட்டேன். ஆனால் பயிற்சியாளர் நந்தி, எனக்கு இதில் பயிற்சியே கொடுக்கவில்லை. தயங்கியபடியே இருந்தார். நாங்கள் காமென்வெல்த் போட்டிக்கு இங்கிலாந்து செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னர்தான் நந்தி 'Produnova'-வில் பயிற்சிகொடுத்தார்’’ என்கிறார் தீபா கர்மாக்கர்.

‘‘முறையான பயிற்சிகளுக்குப் பிறகு காமென்வெல்த் போட்டிகளுக்குப் போனோம். இறுதிப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர் 'Produnova' ஜிம்னாஸ்டிக்கை என்னுடைய மற்ற வீரர்கள் முன்னர் தீபாவைச் செய்துகாட்டச் சொன்னேன். அப்போது தரையில் தீபாவால் சரியாக நிற்க முடியவில்லை. கணுக்காலில் சுளுக்கும் ஏற்பட்டது. வலிநிவாரணி மருந்துகள் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினார் தீபா. அப்போது என்னிடம் ‘கவலைப்படாதீங்க. நான் நிச்சயம் ஜெயிப்பேன்’ எனச் சொன்னார். முதல் ஓட்டத்திலேயே அங்கு இருந்தவர்கள் எல்லோரையும் வியக்கவைத்தவர், இரண்டாவது ஓட்டத்தில் Produnova-வை பெர்ஃபெக்ட்டாகச் செய்துமுடித்தார். இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பிரிவில் சாதனை படைத்திருக்கிறார் என்பதை, அங்கு இருந்தவர்களால் மட்டும் அல்ல, என்னாலும் நம்ப முடியவில்லை. தீபாவின் தன்னம்பிக்கைதான் அவரை ஒவ்வொரு கட்டத்திலும் உயர்த்தியிருக்கிறது’’ என்கிறார் பயிற்சியாளர் நந்தி.

இப்போது 'Produnova' பிரிவில், உலகிலேயே அதிகமான ஸ்கோர் வைத்திருப்பவர் தீபா.

‘‘காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதும் என்னுடைய ஊர் மக்கள் என்னை பெரிய செலிபிரிட்டி ஆக்கிவிட்டனர். நான் வெளியே போகும்போது எல்லாம், என்னை போட்டோ எடுப்பார்கள்; என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்குவார்கள். திரிபுரா மக்கள், எனக்கு அதிகமான அன்பைக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அதே அன்பைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். அது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கப்பதக்கம் வாங்குவதாகத்தான் இருக்கும்’' என்கிறார் தீபா.

லட்சியம் நிச்சயம் வெல்லும்!