Published:Updated:

இவங்களும் பிரபலங்கள்தான்!

இவங்களும் பிரபலங்கள்தான்!
இவங்களும் பிரபலங்கள்தான்!

இவங்களும் பிரபலங்கள்தான்!

இவங்களும் பிரபலங்கள்தான்!

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’னு சொல்வாங்க. (அது யாருன்னுதான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்). அப்படி நாம் கொண்டாடும் நம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைத் துணைகளைப் பற்றிப் பார்ப்போமா...

கீதா பாஸ்ரா: இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் மனைவி. இங்கிலாந்து நாட்டில் இந்தியப் பெற்றோர்களுக்கு பிறந்த இவர் நடிப்புக் கலை பயின்றவர். ‘தில் தியா ஹை’, ‘தி ட்ரெய்ன்’ என சில பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். பல நாட்களாகவே ‘லவ் பண்றாய்ங்களா, இல்லையா?’ என மக்களைக் குழப்பி மண்டை காய வைத்தவர்கள், ஒருவழியாக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஹேசல் கீச்: ஹேசலை நம்மில் பல பேர் பார்த்திருப்போம். ‘செய் ஏதாவது செய்’ எனப் பாடியே ‘பில்லா’ படத்தில் அஜித்தின் துப்பாக்கியை ஆட்டையைப் போடுவாரே அவரேதான் இவர். இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து அப்பாவுக்கும், மொரிஷியன் அம்மாவுக்கும் பிறந்த ஹேசலுக்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை நம் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங். வாழ்த்துக்கள் யுவி.

இவங்களும் பிரபலங்கள்தான்!

ஆயிஷா முகர்ஜி: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியப் பெண்ணான ஆயிஷாதான் இந்திய அணியின் ஓப்பனர் ‘முறுக்கு மீசை’ தவானின் துணைவி. தவானை விட கிட்டத்தட்ட பத்து வயது மூத்தவரான ஆயிஷா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். ஹர்பஜன் சிங்தான் தவானுக்கு ஆயிஷாவை முகநூல் மூலமாக அறிமுகப்படுத்தினார். இருவரும் சில ஆண்டுகள் ஒருவரை ஒருவர் காதலித்து, 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, இன்று மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள்.

சாக்‌ஷி:
தோனியைத் தெரியும் எல்லோருக்குமே சாக்‌ஷியையும் தெரிந்திருக்கும். சாக்‌ஷியும் தோனியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தச் சமயம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கும் சாக்‌ஷி, கொல்கத்தாவின் தாஜ் பெங்கால் ஹோட்டலில் ட்ரெய்னியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

இவங்களும் பிரபலங்கள்தான்!

ரித்திகா சஜ்தேஹ்: அதிரடி ஓப்பனர் ரோஹித் சர்மாவின் மனைவி. மும்பைப் பெண்ணான இவர் விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு விளையாட்டு மேலாளரும்கூட. ரோஹித் சர்மாவும் இவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தோனிக்கும் சாக்‌ஷிக்கும் நடந்தது போலவே இவர்களுக்கும் நட்பு, காதலாக மாற சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

தீபிகா பல்லிகல்:
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி. தீபிகா பல்லிகல் சென்னையில் பிறந்த ஒரு கேரள குடும்பத்தைச் சேர்ந்த பெண். எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலம் படித்தவர். அது மட்டுமல்ல, 24 வயதே ஆன சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர். ஸ்குவாஷ் வீராங்கனைகள் தரவரிசையில் டாப்10-ல் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் எனப் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. தினேஷ் கார்த்திக் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்துப் பெற்றவர்.

இவங்களும் பிரபலங்கள்தான்!

ப்ரியங்கா சௌத்ரி:  இந்திய அணியின் பிரபல ஆட்டக்காரர், சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னாவின் மனைவி. ப்ரியங்காவும், ரெய்னாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் (நீங்களுமா?). ரெய்னாவின் தாயாருக்கு ப்ரியங்காவை ரொம்பவே பிடித்துப்போக  ரெய்னாவின் அம்மா ஆசைப்பட்டது போலவே, இருவருக்கும் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு வரை நெதர்லாந்து நாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தார் ப்ரியங்கா.

மயந்தி லாங்கர்:
ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி. உண்மையிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஸ்டூவர்டை விட மயந்தியை நன்றாகவே தெரியும். பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளைத் தொலைகாட்சியில் தொகுத்து வழங்குவதே விளையாட்டு ஊடகவியலாளரான மயந்திதான்.

-ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு