அறிவிப்புகள்
Published:Updated:

பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்!

பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும்  பாதிக்கப்பட்ட பெண்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்!

டானிக் ஸ்டோரி

பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும்  பாதிக்கப்பட்ட பெண்!

‘நாரி ஷக்தி' (Nari Shakthi) விருது... பெண்ணின் வலிமையைப் போற்றி வழங்கப்படும் மத்திய அரசின் விருது. 2015-ம் ஆண்டுக்கான நாரி ஷக்தி விருதை, பல துறைகளில் சாதனை படைத்ததற்காக இந்திய ஜனாதிபதியிடமிருந்து பெற்றவர் வாசு ப்ரிம்லானி. பல துறைகளில் முத்திரை பதித்த வாசு ப்ரிம்லானி, பெண்களின் மல்டி டாஸ்க்கிங் திறனுக்கு ஒரு மிகச்சிறந்த நம்பிக்கை உதாரணம்; கொடுமையான தன் கடந்த கால வாழ்வில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடிப் பறந்து, சிகரத்தில் அமர்ந்த பறவை.

டெல்லியில் பிறந்தவர் வாசு ப்ரிம்லானி. ஐந்து வயதான போது குடும்பத்துக்குப் பரிச்சயமான ஒரு நபரால் இரண்டு ஆண்டுகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். வளர வளர அந்தக் கறுப்பு பக்கங்கள் மட்டும் மனதின் அடியில் தங்கி அவரை சித்ரவதை செய்துகொண்டே இருந்தன. இது போன்ற மன உறுத்தல்களுக்கு வடிகாலாக பலரும் கையை அறுத்துக்கொள்வதில் இருந்து மாடியில் இருந்து குதிப்பது வரை பல முடிவுகளை நாடுவார்கள். ஆனால், வாசு ப்ரிம்லானி சற்றே  மாற்றி யோசித்தார்.

இதைப்  பற்றி பேசும்போது மிகவும் நிதானமாகவே வார்த்தைகள் கோக்கிறார்... ``நான் சற்று மாறுபட்டு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். அது விளையாட்டில் பல வெற்றிகள், சாகசங்கள் என்று என்னைச் செலுத்தியது. அதுக்குக் கிடைத்த பாராட்டுகள் என் காயங்களுக்கு மருந்தாக அமைந்தன. இருந்தாலும், அந்த கோர நினைவுகளில் இருந்து முழுவதுமாக மீள எனக்கு 30 ஆண்டுகள் ஆனது’’ என்று சொல்லும் வாசு ப்ரிம்லானி, தன் 21 வயதில் அமெரிக்கா சென்றுள்ளார். அங்குதான் அவர் சிறகுகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தார். 

பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும்  பாதிக்கப்பட்ட பெண்!

‘‘அமெரிக்காவில், சுற்றுச்சூழல் செயல் பாட்டாளராக பல ஆண்டுகள் பணியாற்றினேன். சிறப்பான செயல்பாட்டுக்காக அந்நாட்டு அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அங்கு நான் பயின்ற சோமாடிக் தெரபிதான் (Somatic Therapy) வாழ்வில் நான் இந்நிலைக்கு வர முக்கியக் காரணம். சோமாடிக் தெரபி என்பது, ஒருவரின் மனமும் உடலும் ஒரு தீய சம்பவத்தால் பாதிப்பு அடைந்திருக்கும்போது, அதனை மூச்சுப் பயிற்சி, தேகப் பயிற்சி, இசை, நடனம் என பல மனமகிழ் நிகழ்வுகளால் சீர்செய்வது. எனக்கு அட்வென்ச்சர் மிகவும் பிடிக்கும். எனவே, மலை ஏறுதல், டைகோ தற்காப்புக்கலை, நீச்சல், பைக் ரேஸிங், பசிஃபிக் சமுத்திரத்தில் டால்ஃபின்களோடு நீந்துவது என்று பல சாகசக் களங்களிலும் இறங்கித் திளைத்தேன்’’ என்பவர்,  நகைச்சுவையிலும் இறங்கியிருக்கிறார்.

‘‘பெண்களின் ஸ்டாண்ட் அப் காமெடி அமெரிக்காவில் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் நானும் முத்திரை பதித்தேன். 17 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பியபோது, இங்கு ஆண்களை மட்டுமே ஸ்டாண்ட் அப் காமெடியன்களாகப் பார்த்துப் பழகிய மக்கள், ஒரு பெண்ணான என் பெர்ஃபார்மன்ஸை முதலில் ஏற்கத் தயங்கினர். ஆனால், என்னில் இருந்து தொடங்கி இன்று பல பெண்கள்

பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும்  பாதிக்கப்பட்ட பெண்!

இங்கு ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்குவது சந்தோஷமாக உள்ளது’’ என்று சொல்பவரின் தனிச்சிறப்பு, நகைச்சுவையில் சமூகக் கருத்துக்களைக் கலந்து தருவது.

‘‘நகைச்சுவையாகவும், எளிமையாகவும் பேசுவதன் மூலம்... பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேசத் தயங்கும் விஷயங்களையும் விவாதிக்கக் கூடாத தலைப்பாக பெற்றோர்களும் பிள்ளைகளும் பார்ப்பதை இயன்ற அளவுக்கு மாற்றுகிறேன்’’ எனச் சொல்லும் வாசு ப்ரிம்லானியின் விளையாட்டு புரொஃபைலும் அசத்தல். 2016-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஹாஃப் அயர்ன்மேன் ட்ரையத்லான் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றார்.

பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும்  பாதிக்கப்பட்ட பெண்!

‘‘தற்போது மேடை நாடகங்கள், ஸ்டாண்ட் அப் காமெடி, கல்லூரிகளில் மோடிவேஷனல் ஸ்பீக்கர், சோமாடிக் தெரபி என்று மல்டி டாஸ்க்கிங்கில் மகிழ்ச்சியோடு விரைந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக, பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை சோமாடிக் தெரபி மூலமாக மீட்பதை மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் செய்துவருகிறேன். அதுமட்டுமல்லாமல், பாலியல் கொடுமைகள் செய்த ஆண்களை அந்தப் பாதையில் இருந்து நல்வழிப்படுத்தி, அவர்களின் குற்ற உணர்ச்சியில் இருந்து மீட்டு, அவர்கள் தங்களுக்குச் சீரான வாழ்க்கை அமைத்துக்கொள்ள உதவுகிறேன். காரணம், ஒரு குற்றவாளியைத் திருத்தாவிட்டால், அவன் மேலும் பலரின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடுவான். அவன் திருந்த உதவுவதே, பல பெண்களை ஆபத்தில் இருந்து காக்கும் வழியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்!’’

- வாசு ப்ரிம்லானி முடித்தபோது, அந்த விருதுப் பெண்ணின் ஆளுமை ரசிக்கவைத்தது!

ச.சந்திரமௌலி