அறிவிப்புகள்
Published:Updated:

ஷாப்பிங் போகலாமா..?

ஷாப்பிங் போகலாமா..?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாப்பிங் போகலாமா..?

ஏர் கூலர் வாங்கப்போகிறீர்களா?!

ஷாப்பிங் போகலாமா..?

டுத்துகிறது வெயில். ஏ.சி வாங்க நினைத்து, பட்ஜெட் காரணங்களுக்காக யோசிப்பவர்களுக்கும், ஏ.சி குளிர் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும் அடுத்த சாய்ஸாக இருப்பது, ஏர் கூலர். அதை வாங்கும்போதும், வாங்கிய பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், சென்னை, `வசந்த் அண்ட் கோ'வின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த விஜய்சங்கர்.

‘‘ஏ.சி-யும் ஏர் கூலரும் வேறு வேறு என்பதை முதலில் உணர வேண்டும். ஒரு டேபிள் ஃபேன் குளிர் காற்று தந்தால் எப்படியிருக்கும்... அதுதான் ஏர் கூலர். ஏ.சி போல, ஆன் செய்துவிட்டு, அறை கூலிங் ஆனதும் ஆஃப் செய்துவிட்டாலும் அந்தக் கூலிங் அறையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஏர்கூலரை ஆன் செய்யும்போது மட்டுமே காற்று வரும். அதுவும், ஜில் காற்று எடுத்தவுடன் வராது. கூலரில் தண்ணீர் ஊற்றி, அதில் இருக்கும் உட் அல்லது பேட் நனைந்தபின்தான் ஜில்லென்ற காற்று வரும். இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் ஏர் கூலர் வாங்கினால், ‘ஏ.சி மாதிரி இல்லையே’ என்ற ஏமாற்றம் ஏற்படும்.

மாடல்கள் ஆறு

ஷாப்பிங் போகலாமா..?

ஏர் கூலரில், சைஸைப் பொறுத்து ஆறு மாடல்கள் உள்ளன. எந்த பிராண்ட் என்றாலும் 12 லிட்டர் முதல் 70 லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்ட இந்த ஆறு மாடல்கள்தான் கிடைக்கும். ஒரு நபர் என்றால் 12 லிட்டர் போதும். இரண்டு பேருக்கு 15 அல்லது 20 லிட்டர் தேவைப்படலாம். அதற்கும் மேலான நபர்கள் உள்ள வீடுகளுக்கு அதற்கேற்ற கொள்ளளவில் வாங்கிக்கொள்ளலாம். 5,500 முதல் 15,000 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும் இந்த மாடல்களில், ஒரு வருட வாரன்டியும், டோர் சர்வீஸும் உண்டு. 

செக் பண்ணுங்க!

பொதுவாக, ஏர் கூலர் வாங்கும்போது ஃபேன் சரியாக சுற்றுகிறதா என்பதையும், ரிமோட்டுடன் கூடிய ஏர் கூலர் வாங்கும்போது, ரிமோட் வேலை செய்கிறதா என்பதையும் `செக்' செய்து வாங்கவும்.  

பராமரிப்பு

ஷாப்பிங் போகலாமா..?

• ஏர் கூலரில் தண்ணீர் ஊற்றிப் பயன்படுத்தும்போது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரை மாற்றவும். குழந்தைகள், கர்ப்பிணிகள், வீசிங் பிரச்னை உள்ளவர்கள் எனில், இதைத் தவறாது கடைப்பிடிக்கவும். அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை தண்ணீரை வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் கூடாது. தண்ணீரில் ஐஸ் க்யூப்கள் சேர்த்தால், காற்று கூடுதல் குளிர்ச்சியுடன் கிடைக்கும். ஏர் கூலரை, தண்ணீர் ஊற்றாமல், டேபிள் ஃபேன் போலவும் பயன்படுத்தலாம்.

• ஏர் கூலரில் நல்ல தண்ணீர் ஊற்றுவதுதான் நல்லது. உப்புத் தண்ணீரைத் தவிர்க் கவும். இல்லையெனில் பிரச்னைகள் ஏற்படலாம். ஏதோ ஒரு நாள் முடியாத பட்சத்தில் மட்டும் உப்புத் தண்ணீர் பயன்படுத்தலாம்... தொடர்ந்து  உப்புத் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது.

• கூலரில் இருக்கும் உட் அல்லது பேட் நனையும்போதுதான், ஜில்லென்ற காற்று வரும் என்று பார்த்தோம். அது வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். எனவே, அதை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, மீண்டும் மெஷினில் பொருத்த வேண்டும்.

ஷாப்பிங் போகலாமா..?

• எலெக்ட்ரானிக்ஸ் பொருள் என்பதால் ஏர் கூலரை நீண்ட நாள்கள் பயன்படுத்தாமல் வைத்துவிட்டு, திடீரென்று ஒருநாள் பயன்படுத்தினால் இயக்கக்கோளாறு ஏற்படலாம். எனவே, கோடை முடிந்த பின்னும், மற்ற பருவநிலைகளில் சீலிங் ஃபேன்களுக்குப் பதிலாக, ஏர் கூலரின் ஃபேனை மட்டுமாவது ரன் செய்து தொடர்ந்து பயன்படுத்தவும்.’’ 

கூலாகுங்கள்... கோடையில்!

கே.அபிநயா, படங்கள்:மீ.நிவேதன்