Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

படங்கள்:ஆ.முத்துக்குமார்

இன்பாக்ஸ்

படங்கள்:ஆ.முத்துக்குமார்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• அ.தி.மு.க பிரசாரங்களில் எப்போதுமே ஆட்டம் - பாட்டத்துக்குக் குறைவிருக்காது. பிரசார மேடைகளில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்-கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த முறை ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் பிரசாரத்தின்போது கொஞ்சம் ஹைடெக்காக ஹிப்ஹாப் டான்ஸுக்கு ஏற்பாடுசெய்திருந்தனர் வடசென்னை அ.தி.மு.க.வினர். ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை', `தங்கத்தாமரையே வருக வருக’ பாடல்களுக்கு இடையே குத்துப்பாடல்களுக்கும் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது ஹிப்ஹாப் டீம். புது வியூகமா இருக்கே!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• ‘ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது, அவருக்கு ஒரு ரூபாய்கூட சொத்து கிடையாது. ஆனால், தற்போது 120 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனு தாக்கல்செய்திருக்கிறார். இதனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவார். முதலமைச்சர் ஆகமாட்டார். சசிகலாதான் முதலமைச்சர் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள `அம்மா உணவகம்’, `அம்மா பள்ளிக்கூடம்’, `அம்மா ஸ்கூட்டர்’ போல விரைவில் அம்மாவுக்கு ஜெயிலும் வரும்’ என சுப்ரமணியன் சுவாமி பேச, பக்கத்தில் அப்பாவியாக நின்றுகொண்டிருந்த பா.ஜ.க வேட்பாளர், `கடைசி வரைக்கும் `நாம ஜெயிப்போம்'னு சொல்லவே மாட்டேங்கிறாரே...' எனக் குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தார். இவருக்கு பேச்சுல கண்டம்!

இன்பாக்ஸ்

• மதுரை, கோவை பிரசாரங்களை முடித்துக்கொண்டு சென்னை வந்த ராகுல்காந்தி கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தை, வேகம். சென்னை மதுரவாயலில் இரவு 8 மணிக்குத் தொடங்கவேண்டிய கூட்டத்துக்கு 9.45 மணிக்குத்தான் வந்தார் ராகுல். ‘மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமாக வந்தது. சென்னை விமானநிலையம் வந்ததும் கார் டிரைவரிடம் `வேகம்... வேகம்...' என்று சொல்லிக்கொண்டே வந்தேன். அதனால்தான் 10 மணிக்கு முன்னாள் வர முடிந்தது’ எனச் சிரித்தபடி சொன்னார் ராகுல். மதுரவாயலில் சரியாக பத்தே நிமிடங்கள் மட்டுமே பேசினார். பேசும்போது ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என எல்லோரின் பெயருக்குப் பின்னாலுமே மறக்காமல்ஜி சேர்த்துக்கொண்டார். ‘5000 ரூபாய்க்கு இலவசங்கள் கொடுத்துவிட்டு, மதுக்கடைகள் மூலம் உங்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாயைப் பறித்துக்கொள்கிறார் ஜெயாஜி’ என்று சொல்லிவிட்டு தமிழில் வணக்கம் போட்டார் ராகுல். ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்!

இன்பாக்ஸ்

• வில்லிப்புத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் முத்துக்குமார்தான், கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதில், தமிழத்தின் இளம்வேட்பாளர்.

32 வயது முத்துக்குமார் சென்னை எம்.ஐ.டி-யில் பி.டெக் முடித்து அமெரிக்காவின் கெல்லாக் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். ஜப்பானில் மாதம் 6 லட்ச ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த முத்துக்குமாரை, ÿவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட அழைத்துவந்திருக்கிறார் கிருஷ்ணசாமி. ‘கோவில்பட்டிதான் என் சொந்த ஊர். நான் மட்டும் நல்லா சம்பாதிச்சு, சொகுசா இருந்தாபோதுமா? என் மக்கள் இன்னும் கஷ்டப்படுறாங்களே? அதான் அண்ணண் சொன்னதும் ஜப்பானில் இருந்து  கிளம்பிட்டேன்’ என்கிறார் முத்துக்குமார். படித்தவர், பண்பாளர், இளைஞர்!