Published:Updated:

“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”
“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

``தமிழகம் முழக்க தி.மு.க அலை வீசுது. இந்த அம்மாவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிட்டாங்க. நானும் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், ஜாலியா பேசியே கொஞ்ச நாள் ஆச்சு. கேளுங்க...’’ - தயாராகிறார் திருச்சுழி தி.மு.க வேட்பாளர் தங்கம் தென்னரசு.

``திருவாடனை தொகுதி முழுக்க மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்கிறேன். இந்தத் தொகுதியில் என் வெற்றி பிரகாசமா இருக்கு. ஆனால், தமிழக அளவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்னு தெரியலை. மதில் மேல் பூனை மாதிரி இருக்கு...’’ என்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்

``இதுக்குக் கொஞ்சம் ஜாலியா பதில் சொல்லணுமே. நான் சீரியஸான ஆளாச்சே. பரவாயில்லையா?’’ - நம்மை முந்திக்கொண்டு கேள்வி கேட்டுச் சிரிக்கிறார் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை.

``நீங்க எத்தனை கேள்விகள் வேணாலும் கேளுங்க. அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு  சொல்லிக்கிறேன். நான் நல்லாயிருக்கேன். யாரும் என்னைவெச்சு புரளி கிளப்பாதீங்க... ப்ளீஸ்’’ என்கிறார் நடிகர் செந்தில்.

`` `விலையில்லா கைப்பேசி' என்பது எந்தக் கட்சியின் வாக்குறுதி?’’

விடை : அ.இ.அ.தி.மு.க.

தங்கம் தென்னரசு: ``இலவசங்கள் என்ற வார்த்தையைச் சொல்லாமல் `விலையில்லா' என்ற வார்த்தையைக் கண்டுபிடித்த கட்சி அது. அவங்க வார்த்தைகளுக்குள் புகுந்து கொள்ளலாம். ஆனால், அறிக்கையில் இருப்பது அனைத்துமே இலவசங்கள்தான். மக்கள் எல்லாம் அவங்க அறிக்கையைப் பார்த்து கோபமா இருக்காங்க.''

ஜான் பாண்டியன் : ``இப்ப கோயில்ல பிச்சை எடுக்கிற பிச்சைகாரன்கிட்டகூட மொபைல் போன் இருக்கு. `இன்னைக்கு இந்தக் கோயில்ல விசேஷம்ப்பா. இங்க வந்துடு, நல்ல கலெக்‌ஷன் பண்ணலாம்'னு பிச்சை எடுக்கிற இடத்தை ஃபிக்ஸ் பண்றான். மக்களுக்கு இப்ப மொபைல் போனா தேவை? கடனில் இருக்கும் அரசாங்கம் விலையில்லா கைப்பேசி எல்லாம் கொடுத்தா, மீண்டும் பிச்சைதான் எடுக்கணும். எனக்கு நீங்க மார்க் கொடுக்காட்டியும் பரவாயில்லை, அந்தக் கட்சி பேரு சொல்ல விரும்பலை.''

நிர்மலா கொற்றவை: ``கருணாநிதி, இலவசத் தொலைக்காட்சியைக் கொடுத்து எதையும் யோசிக்காம, `டி.வி பாரு சந்தோஷமா இரு'னு சொன்னார். இப்ப இவங்க கைபேசி கொடுத்து, வெளியில ஒரு உலகம் இருக்கிறதையே மறக்கடிக்கப்பார்க்கிறாங்க. மொபைல் கொடுத்தால் தினமும் இந்த அம்மா போன் போட்டு `நான் உங்கள் அன்புச் சகோதரி'னு பேசலாம். அதுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.''

“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

செந்தில்: ``நம்ம கட்சி. அம்மா கட்சி. அ.தி.மு.க கட்சிதான். அம்மா ஏன் தெரியுமா விலையில்லா கைப்பேசி அறிவிச் சாங்க? ஒரு பெண்ணு வயலுக்குப் போய் விவசாயம் செஞ்சுட்டு இருக்கு. அந்தப் பொண்ணு புருஷன்கூடப் பேசணும்னா, அம்மா கொடுத்த போன்ல ஒரு கால் போட்டா போதும். அவன் வேற எங்கேயாவது போனா, எங்க இருக்கான்னு தெரிஞ்சுட்டு, அடிச்சு இழுத்துட்டு வந்துடலாம். இப்படி பல நல்ல காரணங்களுக்காகத்தான் அம்மா அறிவிச்சிருக்காங்க. இது ஒரு மகத்தான திட்டம்.''

``சமீபத்தில் மதுரை இளைய ஆதினமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் பெயர் என்ன?"

விடை: திருநாவுக்கரசு.

தங்கம் தென்னரசு: ``ஹா... ஹா... இது எல்லாம் உங்களுக்கே அநியாயமா இல்லையா? எவ்வளவு சூடா பிரசாரம் நடந்துட்டு இருக்கு? நீங்க இளைய ஆதினம் பேரு கேக்கிறீங்களே? ஆனா, இந்தத் தேர்தல் சமயத்துல ஏன் இவரை இளைய ஆதினமாக நியமிச்சாங்க என்பதற்கு பெரிய அரசியல் காரணம் இருக்கு. ஒரு அரசியல் கட்சியும் இந்த முடிவுக்குப் பின்னாடி இருக்குனு கேள்விப்பட்டேன்.''

ஜான் பாண்டியன் : ``ஆதினத்துக்கு வேற வேலை கிடையாது. ஆன்மிக வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்வார். அ.தி.மு.க-வில் வேட்பாளரை அடிக்கடி மாத்துவாங்க. இவரு இளைய ஆதினத்தை மாத்துறாரு. அவ்வளவுதான் வித்தியாசம்.''

நிர்மலா கொற்றவை: ``நாங்க எல்லாம் இதைவிட்டு ரொம்பத் தூரத்துல விலகியிருக்கும் ஆட்கள். நடுவுல ஒரு ஆதினத்தை நியமிச்சு பல சர்ச்சைகளில் சிக்கி டைவர்ஸ் பண்ணிட்டுப் பிரிஞ்சாங்க. மீண்டும் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்களா என்ன... இல்லையா? நல்ல வேலை மக்கள் தப்பிச் சுட்டாங்க.''

செந்தில் : ``ஆதீனம் எனக்கு நல்ல நண்பர். என் நகைச் சுவைப் படங்கள் அனைத் தையும் பார்த்திருக்கார். நேர்ல சந்திச்சா, அதை யெல்லாம் சொல்லிச் சிரிப்பார். அவர் யாரை இளைய ஆதினமாக நியமிச்சாலும் அது சரியாத்தான் இருக்கும்.''

“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

`தமிழ்நாடு சட்டமனறத் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்' என்று சொன்ன நடிகர் யார்?

விடை: கமல் ஹாசன்.

 தங்கம் தென்னரசு: ``ஏன் சார் இப்படி எல்லாம் சொல்றாங்க?'' என்று நம்மிடம் கேள்வியைக் கேட்டவர், ``எந்த நடிகர் வாக்களிக்கிறாங்களோ இல்லையோ, கமல் ஹாசன் கண்டிப்பா வாக்களிப்பார். ரஜினிகாந்த் ஒட்டு போட மிஸ் பண்ண மாட்டார். சூர்யாவும் தேர்தல் விழிப்புஉணர்வு பிரசாரத்துல வர்றார். ஆங்... பிடிச்சுட்டேன். விஷால்தான் `ஓட்டு போட மாட்டேன்'னு சொன்னவர். சரியா?'' என்றரிடம் பதிலைச் சொன்னதும் பதறுகிறார். ``அவரா அப்படிச் சொன்னார்? நம்பவே முடியலைங்க.''

ஜான் பாண்டியன் :
``கமல்தான் இப்படிச் சொன்னவர். காரணம், இந்தத் தமிழகக் கட்சிகள் மேல உள்ள நம்பிக்கைபோய்டுச்சு. யார் வந்தாலும், தமிழக மக்களுக்கு நல்லது நடக்காது. அதுனால எதுக்கு வாக்களிக்கணும்னு சொல்லியிருக்கார். சரியா தம்பி?''

நிர்மலா கொற்றவை: ``நடிகரா இருந்தா என்ன, யாரா இருந்தால் என்ன? அவங்க எந்தக் கொள்கையில் செயல்படுறாங்க என்பதுதான் முக்கியம். நான் நடிகர்கள் பற்றிய செய்திகளை எல்லாம் அவ்வளவாக ஃபாலோ பண்ணுவது கிடையாது.''

செந்தில் : ``இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை தம்பி. அது அந்தந்த நடிகர் நடிகையோட விருப்பங்கள். அதைப் பத்தி நான் என்ன சொல்லுறது? ஆனா, ஒரு நடிகர் கண்டிப்பா வாக்களிக்கப்போவார். அதுவும் அம்மாவுக்குத்தான் வாக்களிப்பார். அந்த நடிகர் யாருன்னா, இந்த செந்தில்தான். எப்படி தம்பி நம்ம தமாஷ்?''

``அங்கீகாரம் பெற்ற கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில், இலவசங்களே அறிவிக்காத கட்சி எது?''

விடை: காங்கிரஸ்

தங்கம் தென்னரசு: ``தமிழகத் தேர்தல் களத்திலேயே நிற்காத ஏதாவது ஒரு கட்சியாத்தான் இருக்கணும். என் அனுமானம் டி.ஆரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம். சரியா சார்?'' என்றவர், பதிலைக் கேட்டு மீண்டும் பதறுகிறார். ``அட, நம்ம தோழமைக் கட்சி. வேற ஏதாவது கட்சின்னாகூட கூடுதலா பதில் சொல்வேன். காங்கிரஸ்னால இந்தப் பதில் போதும்.''

ஜான் பாண்டியன் :
``சந்தேகமே வேண்டாம். நாங்கதான். இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாத்துறதை எதிர்க்கிறோம். இதை மக்களிடம் சொல்லித்தான் நான் வாக்கு கேட்டுட்டு வர்றேன்.'' 

“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்!”

நிர்மலா கொற்றவை: ``அரசியலே ஒரு ஏமாத்து வேலை. அதுல இலவசங்கள் இன்னும் கூடுதல் ஏமாத்து வேலை. தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்காத கட்சி பா.ம.க-னு நினைக்கிறேன்.''

செந்தில்: ``அ.தி.மு.க கட்சிதான்'' (கேள்வியை மீண்டும் சொன்னதும்) ``அட... நீங்க எத்தனை தடவை கேள்விகேட்டாலும் பதில் ஒண்ணுதான் தம்பி. நாங்க இலவசங்கள் அறிவிக்கலை. மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம். (பார்ரா) இது எப்படி இலவசமாகும்? இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகள், திட்டங்கள் எல்லாம் புரட்சித் தலைவி அம்மாவுக்குத்தான் வரும். அம்மா வாழ்க. பதில் சரியா?''