Published:Updated:

தெலுங்கானா விவகாரம்: மக்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, பிப்.23,2011

தனி தெலுங்கானா விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டதால், மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ##~~##

மக்களவை இன்று கூடியதும் தெலுங்கானா தனி மாநில விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மக்களவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் தொடர்ந்து அமளி நிலவியதால் பகல் 12 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோதும் இதே பிரச்னையை முன்வைத்து கடுமையான அமளி நிலவியதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, தெலுங்கானா தனி மாநிலம் கோரி தெலுங்கானா கூட்டு போராட்டக்குழு அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால், ஆந்திராவில் இன்று இரண்டாவது நாளாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.