Published:Updated:

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

`பரிசல்

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

`பரிசல்

Published:Updated:
கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

நீங்கள் வெளியே கிளம்பும்போது, ‘என்னை மறந்துட்டீங்க... வெளியே மழை வர்ற மாதிரி இருக்கு’ என்று குடை உங்களைக் கூப்பிடுகிறது.  நீங்கள் கார் ஓட்டும்போது, பக்கத்தில் பாப்பா  அமர்ந்திருக்கும் ஸீட், ‘ஹலோ... குட்டிப்பாப்பா பயப்படுது. ஸ்பீடை கொஞ்சம் குறைங்க’ என உங்களுக்கு அட்வைஸ்  செய்கிறது என்றால் எப்படி இருக்கும்?

இது சும்மா சாம்பிள் சார். இந்த வருடம் கன்ஸ்யூமர் & எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில், `2016-ம் ஆண்டில் உலகையே கலக்கப்போகும் புதிய வகை கேட்ஜெட்ஸ்' என பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

•  ` `கபாலி'னா கன்னத்துல மரு வெச்சு, லுங்கி கட்டிக்கிட்டு, கையால வாயைப் பொத்திக்கிட்டு   `சொல்லுங்க எஜமான்'னு வந்து நிப்பானே... அந்தக் கபாலினு நினைச்சியாடா?' என ரஜினி கேட்பதுபோல, கேட்ஜெட் என்றால் கைக்கு அடக்கமாக இருப்பது மட்டும் இல்லை பாஸ். ஒயின் தயாரிக்கும் ஸ்மார்ட் கிச்சன் கேட்ஜெட், இப்போதே வெளிநாட்டில் பிரபலம். அதைப்போல ஸ்மார்ட் ஃப்ரிட்ஜ்தான் 2016-ம் ஆண்டு நிறைய வீடுகளை ஆக்கிரமிக்கப்போகிறது. தேவையான கூலிங்கில் தண்ணீர், தேவையான அளவுகளில் ஐஸ் க்யூப் என படு ஸ்மார்ட்டாக வேலைசெய்கிறது இந்த ஃப்ரிட்ஜ்.

இதன் கதவில் இருக்கும் எல்.இ.டி-யில் உங்கள் வீட்டு டி.வி-யை இணைத்துவிட்டால், ஃப்ரிட்ஜிலேயே தெய்வமகளில் அண்ணியார் மிரட்டுவதைப் பார்க்கலாம், பாட்டு கேட்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஃப்ரிட்ஜில் ரிஜிஸ்டர் செய்துகொண்டால், வேறு எங்கோ இருக்கும் பையன் அவன் போட்டோவை க்ளிக் பண்ணி ‘எனக்கு சப்பாத்தி வேண்டாம்மா' (அல்லது வேண்டாம்ப்பா!) என ஃப்ரிட்ஜ் கதவிலேயே நோட்ஸ் எழுதலாம்.

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

•   வானிலை ரமணன் ரிட்டையர் ஆகிவிட்ட குறையைத் தீர்க்கவருகிறது அடுத்த படைப்பு. இப்போது எல்லாம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனிலேயே, `வெளியே மழையா... வெயிலா?' எனப் பார்க்கிறோம். ஆனாலும் வெயிலில் கருகாமல், மழையில் நனையாமல் இருப்பது இல்லை. உங்களுக்காகத்தான் வந்திருக்கிறது Oombrella. வெளியில் நிலவும் வெப்பம், ஈரப்பதம், காற்று எல்லாவற்றையும் கணக்கிடும் சின்ன டிவைஸ் அடங்கிய குடை. இதை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். நண்பர்களோடு சேர்ந்து இதை சோஷியல் நெட்வொர்க்காகவும் பயன்படுத்த முடியும். ‘கவிதா... நீ வர்ற வழியில மழை வந்தாலும் வரும்’ என அஞ்சு மார்க் வாங்கலாம். அப்படி நீங்கள் சொல்லாவிட்டாலும், கவிதா குடை இல்லாமல் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் நடந்தாலே, ‘என்னை விட்டுட்டுப் போறியேம்மா’ என அவர் ஸ்மார்ட்போனுக்கே மெசேஜ் வரும்.

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

•   உங்கள் உடல் வெப்பநிலையை இரண்டு நொடிகளில் கணக்கிட்டு, உங்கள் போனில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளும் வசதிகொண்ட ‘வைதிங்ஸ் தெர்மோ’ அடுத்த கேட்ஜெட். ‘டாக்டர்கிட்ட போகணும் போலிருக்கே’ என இதனுடன் இன்ஸ்டால் செய்யும் ஆப் உங்களுக்கு அறிவுறுத்தவும் செய்யும்.

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

•   குழந்தை வளர்ப்பு கேட்ஜெட்களில் இது இரண்டும்தான் டாப் என்கிறார்கள். ஒன்று, குழந்தைகளுக்கான கார் ஸீட். இதை காரில், ஸீட்டின் மீது பொருத்தினால் அதுவே சரியாக இருக்கிறதா... இல்லையா எனச் சொல்வதோடு, பயணத்தின்போதும் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு பற்றி அவ்வப்போது சொல்லும். 

அடுத்தது, சின்ன சாக்ஸ். வீட்டில் குழந்தை தூங்கும்போது இதை ஒரு காலில் மாட்டிவிட்டீர்கள் என்றால், குழந்தையின் நிம்மதியான உறக்கம் கலைந்தால் உங்கள் போனில் `அலெர்ட்' கொடுத்து எழுப்பிவிடும். குழந்தையின் இதயத்துடிப்பு, அது சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவைக்கூட அது கணக்கிடும் என்பதால், குழந்தைக்கும் உங்களுக்கும் நிம்மதியான உறக்கம் கேரன்டி!

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

•   நீங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டியைத் தெரிந்துவைத்திருக்கிறீர்களா... இல்லையா என்றெல்லாம் தெரியாது. ஆனால், இதுதான் நம் வாழ்வின் அங்கமாகப்போகிறது என்கிறார்கள் டெக் புலிகள். `பாக்கெட் வி.ஆர்’ என போன் கேஸ் போலவே அமைந்திருக்கும் இந்தச் சமாசாரத்தை மடக்கி, உங்கள் போனிலேயே மாட்டிக்கொண்டு படம் பார்க்கலாம்.

கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!

•   பெட்பாட். செல்லப்பிராணிகளின் அல்ட்டிமேட் கேட்ஜெட் இது. நீங்கள் வீட்டைவிட்டு வரும்போது நாய்க்குட்டி / பூனைக்குட்டிக்கான உணவை இதில் நிரப்பிவிட வேண்டும். உங்கள் நாய்க்குட்டியையோ, பூனைக்குட்டியையோ இதில் இருக்கும் கேமராவின் முன் நிற்கவைத்து, முகத்தையும் பெயரையும் பதிவுசெய்துவிட்டால், உங்கள் போன் உங்களுக்கு அலர்ட் கொடுக்கும்போது நீங்கள் இங்கு இருந்தே ஒரு பட்டனை அழுத்தினால், இந்த கேட்ஜெட் ‘ஹாய் டைகர்!’ எனச் சத்தமாக நாய்க்குட்டியைக் கூப்பிடும். அது முன்னே வந்து நின்றதும் நீங்கள் உங்கள் போனில் இன்னொரு பட்டனைத் தட்டினால், அதற்கான உணவு டபக்கென விழும்.