Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/myaraat:

கல்விக்குக் கடன்... வேலை கிடைக்கலையாம்... கடன் தள்ளுபடி. இதைப் போல பேப்பர் டிகிரி ஹோல்டர்களை அரசு செலவில், தனியார் கல்லூரிகள் பயன்பெரும் வகையில் உருவாக்கி என்ன பயன்?

கல்விக் கடன்கள் தள்ளுபடிசெய்யும் நிதியைவைத்து, அரசு பல கல்லூரிகளைக் கட்டி இலவசக் கல்வி அளிக்கலாம். அப்படிச் செய்தால், தனியார் கல்லூரிகள் எப்படிப் பிழைப்பது, பிறகு எப்படி அவர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவது?

ஆக , உண்மையாக நடப்பது... அரசு, மாணவனுக்குக் கடன்கொடுப்பதுபோல தனியாருக்கு பல கோடி ரூபாயைத் தாரைவார்ப்பது. பிறகு மாணவனால் கல்விக்கடன் கட்ட முடியவில்லை எனத் தள்ளுபடி செய்வது!

facebook.com/Paranirajan Sathyamoorthi: இந்த ஆன்லைன் ஷாப்பிங்களில், அநியாயத்துக்கு காம்போ ஆஃபர் சஜஸ்ட் பண்றாய்ங்க. ஒரு ஸ்டெபிலைசர் வாங்கணும்னு தேடுனா, கூட ஒரு 50 இன்ச் டி.வி-யும் சேர்த்து வாங்குங்கனு தூண்டில் போடுறாய்ங்க. # அடேய்... அது 50 ஆயிரம்டா!

facebook.com/தமிழ்ப் பிரபா :

மருத்துவர் நோயாளியிடம் காட்டும் கரிசனம் என்பது, அவரால் வசூலிக்கப்படும் ஆலோசனைத் தொகையைப் (Consulting Fees) பொருத்தே அமைகிறது. ஐந்நூறு ரூபாய்க்கு மேல் என்றால், நாடி ஜோசியம் பார்க்கும் விதமாக கையைப் பிடித்து, குடும்ப நலம் எல்லாம் விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். `ஐந்நூறு ரூபாய் ஆயிற்றே ஐந்து நிமிடத்தில் அனுப்பிவிடக் கூடாது’ என்று நேரம் போக்க பல `மெடிக்கல் டெர்ம்’களைச் சொல்லி, கண்களை ரத்தச் சிவப்பாக்கி அனுப்புகிறார்கள்.

கன்சல்டிங் ஃபீஸ் இருநூறு ரூபாய்க்குள் என்றால் எதிர்கேள்வியே கேட்டுவிடக் கூடாது. ஒருமுறை, தோல் மருத்துவர் ஒருவரைச் சந்தித்தேன். பிரச்னையைச் சொன்ன மாத்திரத்தில் பொறுப்பான பத்திரிகை நிருபர்போல பேப்பர் பேனா எடுத்து, காகிதத்தில் மருந்து மாத்திரைகளை எழுத ஆரம்பித்தார். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நான் `டாக்டர் இதுல எந்தெந்த மெடிசன் எது எதை க்யூர் பண்றதுக்கு... சொன்னா நல்லா இருக்கும்’ என நன்கொடை கேட்பதுபோல கேட்டேன். `ஏன்... சொன்னாதான் வாங்கிப்போடுவீங்களா? டாக்டர்ஸ் மேல நம்பிக்கை வைங்க சார். சந்தேகம்தான் இருக்கிறதுல பெரிய வியாதி’ என்றார். `என்னடா வந்ததுக்கு இன்னொரு வியாதியை வேறு அறிமுகப்படுத்திட்டாரே...’ என்ற திடீர் கவலையைவிட அவர் குரல் உயர்த்திய விதம், எனக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. பதிலுக்குக் கோபப்பட்டு அவரை எரிச்சலூட்டினால் `மாற்று மருந்தை எழுதிக்கொடுத்து உயிருக்கு பங்கம் விளையவைப்பாரோ?’ என்ற கேள்வி தொக்கிநின்றதால், அவரிடம் சீட்டை வாங்கி நூற்றிருபது ரூபாய்க் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். எனக்கு இதுபோல `க்ளீனிக் அனுபவங்கள்’ நிறைய உள்ளன. இதனால் எனக்கு ஏதோ நாள்பட்ட வியாதி இருப்பதாக நண்பர்கள் நினைக்க வேண்டாம். ஒரு நாளுக்கு ஐந்து தடவைக்கு மேல் தும்மினால்கூட, பயந்துபோய் க்ளீனிக் நோக்கி ஓடும் உயிர்ப் பயம் உள்ள ஜீவராசி நான்.

வலைபாயுதே

`இந்த மருந்து எதுக்கு டாக்டர், இந்த நோய் எதுனலா வருது, இனியும் இது வராம இருக்க என்ன பண்ணனும்?’... போன்ற கேள்விகள் கேட்டால், மருத்துவர்கள் ஏன் சினம்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவை எல்லாம் ஒரு நோயாளிக்கு உரிய அடிப்படை உரிமை என சுவரில் எழுதி ஒட்டிவைத்தால் மட்டும் போதுமா? ஆனால், அது என்ன ரகசியமோ மருத்துவப் பிரதிநிகளிடம் கலகலவென, கல்யாண வீட்டில் இருப்பதுபோல் பேசுகிறார்கள். எல்லா மருத்துவரையும் குறையாகச் சொல்லவில்லை. காருண்யம் மிக்கவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அல்லது `நீயா? நானா?’வில் பேசுகிறார்கள். மற்ற துறைகளிலும் தங்கள் கருத்துகளைக் கூறி முத்திரைப் பதிக்கிறார்கள். நான் சாடுவது மற்றவர்களைத்தான்!

twitter.com/ikrthik: கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!

twitter.com/vandavaalam: என் செல்போனை நான் ஆஃப் செஞ்சுவெச்சாத்தான் எனக்கு தவ வாழ்க்கை!

facebook.com/Guru Srini: வாழைப்பூ பொரியல் செய்யத் தேவையான பொருட்களில் முக்கியமானது... கணவன். :-) # எவன்டா கண்டுபிடிச்சது!

twitter.com/kamalcinema: ஓட்டு போட்டு முடிந்தவுடன் செடி ஒன்று வையுங்கள் # அஞ்சாவது வருஷம் யார் அதிகப் பலன் கொடுத்திருக்காங்கன்னு பார்ப்போம்!

twitter.com/sure_an: உங்கள் ஆடம்பரத் தேவைகளை இலவசமாகத் தருகிறார்கள் என்றால், உங்கள் அடிப்படைத் தேவைகளைப் பறித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று அர்த்தம்!

twitter.com/puthi_yavan: ஒரு குழந்தை சத்தியம் வாங்கும்போது காட் ப்ராமிஸ் கேட்ட பிறகு, மதர் ப்ராமிஸ் கேட்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இல்லை!

வலைபாயுதே

twitter.com/Elanthenral: வேலைசெய்துகொண்டே பயிர்களுக்கு தாலாட்டு பாடுகிறாள் பெண். தொட்டிலில் தூங்கும் அவள் பிள்ளைக்கு காற்று வீசி சேவகம் செய்கிறது மரம்!

twitter.com/Prazannaa: டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா? நான் பால் குடிச்சு முடிக்கிறவரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா? # மகளதிகாரம்!

twitter.com/thoatta:
தரப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், வழங்கப்படும், அமைக்கப்படும், உயர்த்தப்படும், ஆனாலும், கடைசியில தமிழ்நாடு கஷ்டப்படும். ;-/

twitter.com/Koothaadi: நாம் நேசிக்கும் ஒரு புத்தகத்தை யாரேனும் படிப்பதைப் பார்க்கையில், அந்தப் புத்தகம், நமக்கு ஒருவரைப் பரிந்துரைப்பதுபோல் உள்ளது!

twitter.com/Baashhu: தமிழ்நாட்டுல எல்லாருடைய செல்போன்லயும் இருக்கிற ஒரு கான்டாக்ட் நேம் `Amma’தான்!

twitter.com/kumarfaculty: சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டபோது வாகனம்; தற்போது உடற்பயிற்சிக் கருவி!

twitter.com/arvenky: ஆயிரம் கோடி சொத்தைக்கூடவெச்சு காப்பாத்திடலாம். ஆனா, ஒரு லோயர் பெர்த்தை கடைசி வரை காப்பாத்துறது இருக்கே # உஸ்ஸப்பா!

twitter.com/RacketOfficial : கேப்டன்னா மத்த பிளேயர்ஸை முன்னாடி எறக்கிவிட்டு, மேட்ச் முடியும்போது வின்னிங் ஷாட் அடிக்கிறவன்னு நினைச்சியா? # கோஹ்லிடா!

twitter.com/vinodhkrs : முன்னர் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அழகான நினைவுகளை மட்டுமே விட்டுச்செல்வார்கள். இப்போது மொபைல் சார்ஜரையும் விட்டுச் செல்கிறார்கள்!

twitter.com/Itz_rajez : பேருந்தின் கடைசி ஸீட்டைப்போலவே வாழ்க்கை. திடீர் திடீர்னு தூக்கியடிச்சுருது!

வலைபாயுதே

twitter.com/manipmp : `அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா’ பாடல் செல்போன் நோண்டுபவர்களைப் பார்த்து தொலைநோக்குச் சிந்தனையில் எழுதப்பட்டது!

twitter.com/rannjjii: மொபைலை, சர்வீஸ் சென்டரில் கொடுத்துட்டு வெளியே உக்காரும்போது, தலைப்பிரசவத்துக்கு மனைவியை ICU வார்டில் சேர்த்த புருஷன் ஃபீலிங் வருது!

twitter.com/vinodhkrs : settled என்றால் சொந்த வீடு கார் எல்லாம் இருக்குனு அர்த்தம். well settled என்றால், அதுக்கு வாங்கின எல்லா லோன்களையும் அடைச்சிட்டோம்னு அர்த்தம்!

twitter.com/kthirumani : நான் முட்டை சாப்புடுவேன். மத்தபடி சைவம்.

நான் கொஞ்சம் பொறுமையா இருந்து, அது வளர்ந்த அப்புறம் சாப்பிடுவேன். மத்தபடி நானும் சைவம்தான்!

facebook.com/Suba Barathi:

தினந்தோறும் tableல் படியும் தூசியைப் பார்த்தால், நம் உடலுக்குள் எவ்வளவு சென்றிருக்குமோ என அச்சமாக இருக்கிறது!