Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

Published:Updated:
வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்
வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

சூப், செரிமானத்தின் நண்பன். விருந்துக்கு முன்பு உணவு மேசையில் வைக்கப்படும் முதல் தொடக்கம்.  சூப், நாவின் சுவை மொட்டுகளை சுவை அறியத் தயார்படுத்துவதுடன் பசி உணர்வைத் தூண்டவும் செய்கிறது. சூப்பை மிதமான சூட்டில் அளவாக அருந்திய பின் உணவைச் சாப்பிடலாம். இதனால், உண்ணும் உணவை செரிப்பதற்கான திரவங்கள் சுரந்து உடல் தயார் நிலையில் இருக்கும். 

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டயட்டில் இருப்பவர்களுக்கு சூப் ஒரு முக்கியமான திரவ உணவு. சூப் தயாரிக்கும் முன் அதற்கான ஸ்டாக்கைத் தயார்செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சூப் தயாரிப்பில் தண்ணீருக்குப் பதில் சத்துக்கள் அடங்கிய ஸ்டாக்கைப் பயன்படுத்துவதால், சத்துக்களோடு கூடுதல் சுவையும் கிடைக்கும். சத்தான, சுவையான சூப்களை சமையல்கலை நிபுணர் ராஜகுமாரி செய்துகாட்ட, அதன் பலன்களைப் பட்டியலிடுகிறார், டயட்டீஷியன் சாஹித்யப்ரியா.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

வெஜிடபிள் ஸ்டாக்

தேவையானவை: பெரிய வெங்காயம் - ஒன்று, கேரட், தக்காளி - தலா 2, பூண்டு - 3 பற்கள், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - சிறிதளவு, தண்ணீர் - 4 கப். (இதனுடன் வெள்ளரி, முட்டைக்கோஸ், இஞ்சி, குடமிளகாய், மல்லித்தழை, கீரைகள் சிலவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்) உப்பு - தேவைக்கேற்ப.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, காய்கறிகள் சேர்த்து அடுப்பை சிம்மில்வைத்து வேகவிட வேண்டும். காய்கறிகளில் உள்ள சாறுகள் அனைத்தும் நீரில் இறங்கி இருக்கும். நீர் பாதியாக வற்றியதும்  இறக்கி வடிகட்டி, நீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே, வெஜிடபிள் ஸ்டாக். இதை எல்லாவித வெஜிடபிள் சூப்களிலும் பயன்படுத்தலாம். காய்கறிச் சக்கையை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தக்காளி - கேரட் சூப்

தேவையானவை: நறுக்கிய தக்காளி - 2, கேரட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, பால் - கால் டம்ளர், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு - 2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெயைப் போட்டு சூடானதும் வெங்காயம், கேரட் போட்டு வதக்க வேண்டும். பின்னர், தக்காளியை வதக்கி, பிரியாணி இலையைச் சேர்த்து இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். கொதித்ததும் இறக்கி, ஆறியதும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு, அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பால், மிளகுத்தூள், சோளமாவைக் கரைத்து அடுப்பில்வைத்து ஒரு கொதி வந்ததும் புதினா இலைகளைத் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, கே, பொட்டாசியம், ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் மக்னீசியம் நிறைந்தது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வராமல் காக்கிறது. கேரட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் பார்வைத்திறனை மேம்படுத்தும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நல்லது.

கேரட் சூப்

தேவையானவை: கேரட் - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சோளமாவு - ஒரு டீஸ்பூன், அரிந்த மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: கேரட்டை அரிந்து, வேகவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் வெண்ணெய், மிளகுத்தூளைப் போட்டு வதக்கி, ஒரு கப் நீர் விடவும். ஒரு கொதிவந்ததும் அரைத்த கேரட் விழுதினைப் போட்டுக் கலக்கி, சோளமாவைக் கரைத்து ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, பி8, சி, கே நிறைந்தது. பார்வைத்திறனை மேம்படுத்தும்.  ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும். மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களை சீராகத் தூண்டி பக்கவாதத்தைத் தடுக்கிறது.

பீட்ரூட் சூப்

தேவையானவை:
பீட்ரூட் - ஒன்று, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு - 2 டீஸ்பூன், கார்ன் ஃபிளேக்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி அரிந்து, நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவைத்து மைய அரைக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் கார்ன் ஃபிளேக்ஸை வறுத்துத் தனியே வைக்க வேண்டும். பின்னர், அதே வாணலியில், மிளகுத்தூளைப் போட்டு, அரை கப் நீர் விட்டு ஒரு கொதிவிட வேண்டும். இதில், பீட்ரூட் விழுது, அரை கப் நீர் விட்டு கரைத்த சோளமாவைச் சேர்த்து, மேலும் ஒரு கொதிவந்ததும் இறக்கிவிடவும். பரிமாறும் முன் கார்ன் ஃபிளேக்ஸ் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்:  ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கார்ப்போஹைட்ரேட், புரோட்டின், நார்ச்சத்து நிறைந்தது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்துவதால், சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.

வெங்காய சூப்

தேவையானவை:
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4, பூண்டுப் பற்கள் - 4, பச்சைமிளகாய் - 2, கெட்டியான தேங்காய்பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,  நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமாகச் சேர்ந்தது - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோளமாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு  மல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

காலிஃபிளவர்-துவரம் பருப்பு சூப்

தேவையானவை: துவரம் பருப்பு - கால் கப், சுத்தம் செய்த காலிஃபிளவர் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சைமிளகாய் - 3, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், நசுக்கிய பட்டை, சோம்பு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிந்த புதினா இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேக வைத்து தனியே வைக்க வேண்டும். காலிஃபிளவரை உப்பு சேர்த்த நீரில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், காலிஃபிளவர், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து, நான்கு கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். பிறகு, காய்கறிகளை மத்தால் மசித்து, மிளகுத்தூள், சோளமாவுக் கரைசல், துவரம் பருப்பு, அரை கப் நீர் விட்டுக் கலந்து அடுப்பில் வைத்து ஓரிரு கொதி வந்ததும் மசாலா தூள், புதினாத்தழையைத் தூவி இறக்க வேண்டும்.

குறிப்பு: தக்காளியை வதக்கும் முன் மேல் தோலை உரித்துவிட்டு, அரிந்து வதக்க வேண்டும். ஹெவியான இந்த சூப்பை காலை டிஃபனுக்குப் பதிலாகப் பருகலாம். ஒரு மணி நேரம் வரை பசி தாங்கும்.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

பலன்கள்: புரதம் நிறைந்தது. ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பிறக்கும் குழந்தையை நியூரல் டியூப் பிரச்னைகளில் இருந்து காக்கிறது.  கோலின் நிறைந்துள்ளதால், தசை வளர்ச்சிக்கும் மூளை செல்களின் வளர்ச்சிக்கும் நல்லது. நினைவுத்திறனை மேம்படுத்தும்.

முட்டைக்கோஸ் சூப்

தேவையானவை: பொடியாக அரிந்த முட்டைக்கோஸ்  - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு, மிளகுத்தூள்- தலா 2 டீஸ்பூன், பால் - அரை கப்,  பிரெட்துண்டுகள்  - சிறிதளவு, மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்துத் தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸை வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில், பால், சோளமாவு கரைசலைச் சேர்த்து, அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். பரிமாறும் முன் பிரெட் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் கே நிறைந்துள்ளது. அல்சைமர் எனும் மறதிநோயைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், மார்பகம், குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பாதுகாக்கும்.

மஞ்சள் பூசணி சூப்

தேவையானவை: மஞ்சள் பூசணி - 250 கிராம், குடமிளகாய் - ஒன்று, பச்சைமிளகாய் - ஒன்று, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பிரெட் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு பற்கள் - 3, மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: பூசணிக்காயைத் துருவிக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு, பிரெட் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்க வேண்டும். அதே வாணலியில் பூண்டு, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பூசணித் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட்டு, முக்கால் பதம் வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து, குடமிளகாயைப் பொடியாக அரிந்து சேர்க்க வேண்டும். இதனுடன், சோள மாவுக் கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி, மல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும். பரிமாறும் முன்பு பிரெட் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:
கலோரி குறைவு என்பதால், எடை குறைய நினைப்பவர்கள் பருகலாம். ஒரு கப் மஞ்சள் பூசணி சூப்பில் ஒருநாள் தேவைக்கான முழுமையான வைட்டமின் ஏ உள்ளது.  புற்றுநோய், கண்நோய்களில் இருந்து காக்கிறது.

தக்காளி - பயத்தம் பருப்பு சூப்

தேவையானவை: தக்காளி - 2, பயத்தம் பருப்பு - 50 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: பயத்தம் பருப்பைக் குழைய வேகவிட வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, சோம்பு சேர்த்து வதக்கி, மூன்று கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் அரைத்து வடிகட்டி, பயத்தம் பருப்பை மேலும் அரை கப் நீர் விட்டுக் கரைத்து, சோளமாவைத் தனியாகக் கரைத்து இதில் சேர்க்க வேண்டும். இதை, அடுப்பில் வைத்து ஒரு கொதிவந்ததும் இறக்கி மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: புரதம், வைட்டமின்கள், தாதுப்புக்கள் நிறைந்தது. தக்காளி, பயத்தம் பருப்புடன் சேர்வதால், உடலில் இரும்புச்சத்து கிரகிப்பதை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆஸ்துமா, புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.

பசலைக்கீரை சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - அரை கப், குழைய வேகவைத்த பயத்தம் பருப்பு - 5 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பூண்டுப்பற்கள் - 3, தக்காளி - 2, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: தக்காளியின் தோலை உரித்துப் பொடியாக நறுக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு வெங்காயம், பூண்டுடன் பசலைக்கீரையைச் சேர்த்து வதக்க வேண்டும். இதில், நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து லேசாக வதக்கி, இரண்டு கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும், வேகவைத்த பயத்தம் பருப்பு, சோளமாவுக் கரைசலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். கொதித்ததும், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கிப் பரிமாறலாம்.

பலன்கள்: குறைந்த கொழுப்புச்சத்தும் கொலஸ்ட்ராலும் கொண்டது. கூந்தல், சருமம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தசோகையைப் போக்கும்.  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.

கோல்டன் சூப்

தேவையானவை:
கேரட் - 2, தக்காளி - 2, வெங்காயம் - ஒன்று, பிரியாணி இலை - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, பிரியாணி இலையைச் சேர்த்து வதக்கி, இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் பிரியாணி இலையை எடுத்து விட்டு மீதியை மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் சோளமாவைக் கரைத்து மிளகுத்தூள் சேர்த்து அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி புதினா இலைகளைத் தூவி எலுமிச்சை சாற்றினைச் சேர்த்துப் பரிமாறலாம்.

பலன்கள்:
பிரியாணி இலையில் நியாசின், பைரிடாக்சின், பேன்டோதெனிக் அமிலம், ரிபோஃபிளேவின், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும். எலுமிச்சை சேர்க்கப்படுவதால் எடைக்குறைப்புக்கு உதவும். செரிமானம் மேம்படும். மலச்சிக்கலைப் போக்கும்.  பைல்ஸ், பெப்டிக் அல்சர், ஜீரண மண்டலக் கோளாறுகள், கவுட், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மூலிகை சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரை - ஒரு கப், வாழைத்தண்டு - கால் கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பால் - கால் கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மோர் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஓமவல்லி அல்லது கற்பூரவள்ளி இலை - 3  டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாழைத்தண்டை நறுக்கி, மோரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். வாய் அகன்ற பாத்திரத்தில் வாழைத்தண்டைப் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். பாதி வெந்ததும் முடக்கத்தான் கீரை, உப்பு, மிளகு, சீரகம், இஞ்சி சேர்ந்து, மேலும் ஒரு கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் ஓமவல்லி இலைகளைச் சேர்க்க வேண்டும். வெந்ததும் இறக்கி, அரைத்து வடிகட்டி, பால், சோளமாவுக் கரைசலைச் சேர்த்து அடுப்பில்வைத்து ஒரு கொதிவந்ததும் இறக்க வேண்டும்.

பலன்கள்: முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கான மிகச்சிறந்த தீர்வு. கற்பூரவல்லி சளி, இருமல்,வாய்ப்புண்கள், சருமப் பாதிப்புகள், ஆஸ்துமா, ஜீரணமின்மை பிரச்னைகளைக் குணமாக்கும். வாழைத்தண்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

மில்க் வெஜ் சூப்


தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 6 துண்டு, காலிஃபிளவர் - 2 துண்டு, வெங்காயம் - ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், செலரி இலை - ஒரு துண்டு, பால் - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, அதில் காலிஃபிளவரைப் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு, காலிஃபிளவரை கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், வெங்காயம், செலரி இலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு காலிஃபிளவர், கேரட், பீன்ஸ், வெங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, வெந்ததும் பொடியாக நறுக்கிய செலரி இலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பாலில் சோளமாவைக் கரைத்து ஊற்றி, மேலும் சில நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:
வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.  சிறிதளவு புரதம் உள்ளது. முட்டைக்கோஸ் மற்றும் செலரியில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது மூளை செல்களைத் தூண்டி சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நினைவுத்திறனை மேம்படுத்தும். ரத்தம் உறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்தும்.

இத்தாலியன் சூப்

தேவையானவை: பாஸ்தா - அரை கப், வெங்காயம் - ஒன்று, சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கேரட், நறுக்கிய செலரி இலை - தலா அரை கப், பூண்டு - 2 பற்கள், தக்காளி - 2, மிளகுத்தூள் - 3 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, நறுக்கிய கேரட், செலரி சேர்த்து வதக்கி ஒரு கப் நீர் விட்டு உப்பு சேர்க்க வேண்டும். தக்காளியை ஐந்து நிமிடங்கள் வெந்நீரில் போட்டு எடுத்து, தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, கொதிக்கும் கலவையில் பாஸ்தாவுடன் சேர்த்து வேகவிட வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவும். வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கி சீஸைத் துருவிச் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: பாஸ்தா, கார்போஹைட்ரேட் நிறைந்தது. வளரும் குழந்தைகள் மற்றும் உடல் மெலிந்தவர்களுக்குக் கொடுக்கலாம். காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்கு வலுவூட்டும்.

கார்ன் சூப்

தேவையானவை:
மக்காச்சோளம் - ஒரு கப், வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, வெஜிடபிள்ஸ்டாக் - 2 கப், பால் - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இரண்டு கப் வெஜிடபிள் ஸ்டாக், சோளம், உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட வேண்டும். வெந்து ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பாலை ஊற்றி சோளமாவைக் கரைத்து அடுப்பில் வைத்து மிளகுத்தூளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஃப்ரெஷ் கிரீமைக் கலந்து பரிமாறலாம்.

பலன்கள்:
கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து நிறைந்தது. உடலுக்கு வலுவூட்டும்.  மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், தாமிரச்சத்துக்கள் நிறைந்தது. ஃபெரூலிக் ஆசிட் (Ferulic acid) எனப்படும் பாலிஃபீனால் நிறைந்தது.

பனீர் சூப்

தேவையானவை: தக்காளி - 3, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பனீர் துண்டுகள் - கால் கப், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, பனீரைப் பொரித்துத் தனியே வைக்க வேண்டும். ஒரு கப் வெந்நீரில் தக்காளியைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, தோலை உரித்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீரில் சோளமாவைக் கரைத்து, உப்பு, தக்காளி அரைத்த விழுதினையும் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றி, ஒரு கொதிவிட வேண்டும். கொதித்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கி மல்லித்தழையைக் கலந்துவிடவும். பரிமாறும் முன் பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்: புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பாதிக்காது என்பதால், சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக்கொள்ளலாம். செரிமானத்துக்கு நல்லது.

முருங்கைக்காய் சூப்

தேவையானவை: முருங்கைக்காய் - 3, தக்காளி - ஒன்று, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பற்கள், சோம்பு - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லி, புதினா - தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - அரை மூடி, உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: இஞ்சி, பூண்டு இரண்டையும் கொரகொரப்பாகத் தட்டிக்கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் மூன்று கப் நீர் விட்டு உப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து முருங்கைக்காய், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு சேர்த்து வேகவிட வேண்டும். பிறகு, முருங்கைக்காயின் தோலை உரித்து, சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைக் கரண்டியால் நன்கு மசித்து, மேலும் ஒரு கப் நீர் ஊற்றி வடிகட்டி, நீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரில் முருங்கைக்காயின் சதைப்பகுதியைச் சேர்த்து சோள மாவுக் கரைசலைச் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும்போது, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி புதினா, மல்லியைத் தூவி, எலுமிச்சைச்சாறு பிழிந்து, கலந்து பரிமாறலாம்.

பலன்கள்: 
இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் நிறைந்துள்ளன. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். ரத்தசோகையைப் போக்கும்.

ஓட்ஸ் சூப்


தேவையானவை:
ஓட்ஸ் - அரை கப், சிறிய வெங்காயம் - 4, தக்காளி - 2, கேரட் - ஒன்று, பச்சைமிளகாய் - 2, மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு - 2 டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கேரட்டை வதக்கி, தோல் நீக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கி, ஓட்ஸையும் சேர்த்து இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து சோளமாவைக் கரைத்து ஊற்றி, மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி எலுமிச்சைச்சாறு பிழிந்து நன்றாகக் கலந்து பரிமாறலாம்.

பலன்கள்:  ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும்.  இதயப் பிரச்னைகளை சீராக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

சுண்டைக்காய் சூப்

தேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் - அரை கப், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், மோர் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வேக வைத்த பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - கால் கப், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு பொடியாக நறுக்கிய சுண்டைக்காயுடன் வாழைத்தண்டையும் சேர்த்து வதக்கி இரண்டு கப் நீர், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் பயத்தம் பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு கரண்டியால் நன்றாக மசித்த பிறகு, தேங்காய்ப்பாலில் சோளமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்க வேண்டும். மல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.

பலன்கள்: சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த உற்பத்தியை மேம்படுத்தும். பயத்தம் பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலுக்கு வலுவூட்டும். வாழைத்தண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறுநீரகக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் சூப்

தேவையானவை: உலர்திராட்சை, பொடியாக நறுக்கிய பேரீச்சை - கால் கப், ஊறவைத்து, தோல்நீக்கி பொடித்த பாதாம், பிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன், வெஜிடபிள் ஸ்டாக் - ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றி, உலர் பழங்கள், நட்ஸ்கள் போட்டு ஓரிரு கொதி வந்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து, சோளமாவைக் கரைத்து ஊற்றி, மீண்டும் ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கி, ஃப்ரெஷ் கிரீம் சேர்த்துக் கலந்து பரிமாற வேண்டும்.

பலன்கள்:
உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தசோகையைப் போக்கும்.

பச்சைப்பட்டாணி சூப்

தேவையானவை: பச்சைப்பட்டாணி - அரை கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு ஏற்ப, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கார்ன் ஃபிளேக்ஸ் - 4 டேபிள்ஸ்பூன், பால் - கால் கப்.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் கார்ன் ஃபிளேக்ஸை வறுத்துத் தனியே வைக்க வேண்டும். பட்டாணி, கேரட் துருவலை வதக்கி இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். வெந்ததும் இறக்கி ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன், பால், சோள மாவைக் கரைத்து, ஒரு கொதி வந்தவுடன் மிளகுத்தூள் தூவி இறக்கி, பரிமாறும் முன் கார்ன் ஃபிளேக்ஸ் சேர்த்துப் பரிமாறலாம்.

பலன்கள்:
வைட்டமின் பி1, பி2, பி6, கே நிறைந்தது. பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

சம்மர் சூப்

தேவையானவை:
வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப், பெரிய வெங்காயம் - ஒன்று, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், சேமியா - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் சேமியாவை வறுத்துத் தனியே வைக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், கேரட் துருவலை வதக்கி, வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றி உப்பு சிறிதளவு சேர்த்து வேகவிட வேண்டும். முக்கால் பதத்துக்கு வெந்ததும், சேமியா சேர்த்து வேகவிட வேண்டும். எல்லாம் வெந்ததும் சோளமாவைக் கரைத்து ஊற்றி, ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கி மல்லித்தழையைத் தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்:
சம்மர் சூப்பில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. டீஹைட்ரேஸனைத் தடுத்து உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. கோடை காலத்தில் அன்றாடம் பருக ஏற்ற சூப் இது.

ஸ்பெஷல் மசாலா சூப்

தேவையானவை:
பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பற்கள், தக்காளி, பச்சைமிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு எல்லாமாகச் சேர்ந்து வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தது - அரை டீஸ்பூன், எலுமிச்சைசாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா, மல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா  - 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: சோயாவை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி வைக்க வேண்டும். தக்காளியை வெந்நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கழித்து, தோலை உரித்து, மிக்ஸியில் அரைத்து வைக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் சின்ன வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, இரண்டு கப் நீர், மசாலா பொருட்கள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். வெந்ததும் தக்காளி அரைத்த விழுதில் சோளமாவைக் கரைத்து ஊற்ற வேண்டும். ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி, சோயா சேர்த்து இறக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா, மல்லி இலைகளையும் சேர்த்துக் கலந்துவிடவும்.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

பலன்கள்: பட்டை, சோம்பு, கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை, புற்றுநோயைத் தடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) மற்றும் வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டும் என்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

மல்லி - புதினா சூப்

தேவையானவை:
சுத்தம் செய்து நறுக்கிய புதினா, கொத்தமல்லி - தலா அரை கப், உருளை, தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம், சோம்பு வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தது - 2 டீஸ்பூன், பால் - அரை கப், சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் துண்டுகள் நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்துவைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, இரண்டு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். பாதி வெந்ததும் நறுக்கிய, புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு விழுது மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வேகவிட வேண்டும். பிறகு, மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பால் சேர்த்து, சோளமாவைக் கரைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். பரிமாறும்போது, பிரெட் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்: மல்லி, வாய்ப்புண், அல்சர், குடல்புண்களுக்கு அருமருந்து. கோடை காலத்தில் சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் காக்கும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். புதினா செரிமானத்தை மேம்படுத்தும்.

வெங்காயத்தாள் சூப்

தேவையானவை: வெங்காயத்தாளையும் அதில் உள்ள வெங்காயத்தையும் சேர்த்து நறுக்கியது - ஒரு கப், வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் - அரை கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாளை வதக்கி, ஒரு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தேங்காய்ப்பாலில் சோளமாவைக் கரைத்து ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, கே நிறைந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.  ஜீரணமண்டலப் பிரச்னைகளைக் குணமாக்கும்.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும்.

மஷ்ரூம் சூப்

தேவையானவை:
நறுக்கிய காளான், வெஜிடபிள் ஸ்டாக் - தலா ஒரு கப், வெண்ணெய், ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு, எலுமிச்சைச்சாறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு, சூடானதும் நறுக்கிய காளான்களைப் போட்டு வதக்க வேண்டும். வெஜிடபிள் ஸ்டாக், சிறிதளவு உப்பு சேர்த்து காளானை வேகவிடவும். வெந்ததும், பாலில் சோளமாவைக் கரைத்து ஊற்றி, ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து, ஃப்ரெஷ் கிரீம் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பலன்கள்:
இது, அதிக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கும். எடை குறைக்க நினைப்போருக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

மிக்ஸுடு வெஜிடபிள் சூப்


தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - அரை கப், நறுக்கிய சுரைக்காய், வெள்ளைப்பூசணி - தலா கால் கப், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி - ஒன்று, பால் - ஒரு கப், சோளமாவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் கீரை, அனைத்துக் காய்கறிகளையும் வதக்கி, இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். முக்கால் பதம் வெந்ததும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகுத்தூளும் சேர்க்க வேண்டும். முழுதுமாக வெந்ததும் இறக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பால் சேர்த்து, சோளமாவைக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.

பலன்கள்: கோடைக்குத் தேவையான எலக்ட்ரோலைட்களான சோடியம், பொட்டாசியம் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். கூந்தலுக்கு வலுவூட்டும். இளநரை, முடி உதிர்தலைத் தடுக்கும். கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்புகள், பற்கள் வலுப்படும்.

ஸ்வீட் கார்ன் தக்காளி சூப்

தேவையானவை: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப், தக்காளி, பச்சைமிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சோளமாவு - தலா 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் நீரை வடிகட்டித் தனியே வைக்க வேண்டும். தக்காளியை வெந்நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து, தோலை உரித்துப் பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த தக்காளி, பச்சைமிளகாய் விழுதினைச் சேர்த்து, வெந்த சோளத்தையும் சேர்த்து ஒரு கொதிவிட வேண்டும். வடிகட்டிய நீரில் சோளமாவைக் கரைத்து ஊற்றி, மேலும் ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கி, மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: துத்தநாகம், மக்னீசியம், இரும்பு, தாமிரம் நிறைந்தது. தயமின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், ஃபோலேட்ஸ், ரிபோஃப்ளேவின், பைரிடாக்ஸின் போன்ற பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைந்தது. புற்றுநோயைத் தடுக்கும். முதுமையைத் தாமதப்படுத்தும்.

சீஸ் சூப்

தேவையானவை: சீஸ் க்யூப் - 3, வெள்ளரிக்காய் - ஒன்று, வெங்காயம் - ஒன்று, குடமிளகாய் - அரை (பாதி அளவு), பால் - அரை கப், வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், வெள்ளரிக்காய் சேர்த்து வதக்கி, உப்பு, இரண்டு கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்ததும் வடிகட்டி, நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய நீர், பால், சோளமாவைச் சேர்த்து ஒரு கொதிவிட வேண்டும். சீஸையும் துருவிச் சேர்த்து, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

பலன்கள்: கலோரியும் புரதமும் நிறைந்த சூப் இது. கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி12 நிறைந்தது. சருமத்தைப் பொலிவாக்கும். முதுமையான தோற்றத்தைப் போக்கும். கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும். மெனோபாஸ் பிரச்னைகளைச் சீராக்கும்.

தக்காளி சூப்


தேவையானவை: கனிந்த தக்காளி - 3, பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு பற்கள் - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

செய்முறை: வெந்நீரில் தக்காளிப் பழங்களைப் போட்டு 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு, தக்காளியின் தோலை நீக்கி, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். ஒரு வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். ஓரிரு கொதி வந்ததும், அரைத்த தக்காளி விழுதைச் சேர்ந்து, மிளகுத்தூள் சேர்த்து சோளமாவை இரண்டு டேபிள்ஸ்பூன் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்:
வைட்டமின் ஏ, சி, இ,கே, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. பார்வைத்திறனை மேம்படுத்தும். ப்ராஸ்டேட், நுரையீரல், குடல் புற்றுநோயைத் தடுக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

- இளங்கோ கிருஷ்ணன்

படங்கள்: எம்.உசேன், மீ.நிவேதன்

வீட்டிலேயே செய்யலாம்! தினம் ஒரு சூப்

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism