Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

மாறும் காலத்துக்கு ஏற்ப நம் வீடுகளுக்கான தேவைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஸ்மார்ட் வீடுகளில் இருக்கவேண்டிய டெக்கீ சமாசாரங்கள் இவை. அனைத்துமே சின்னத் தேடலில், இணையக் கடைகளில் இலகுவாகப் பிடித்துவிடக்கூடியவை!

தலையணை ரிமோட் (PILLOW REMOTE)

விகடன் சாய்ஸ்

டி.வி ஓடிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவோம். அது அதன் போக்கில் கத்திக்கொண்டிருக்க, தூக்கத்தில் இருந்து விழித்து ரிமோட்டை அவசரமாகத் தேடுவோம்... கிடைக்காது. அர்த்தராத்திரியில் ஏ.சி-யைக் குறைத்துவைக்கலாம் என ரிமோட்டைத் தேடுவோம், கிடைக்காது. அப்படிப்பட்ட ரிமோட் மறதிக்காரர்களுக்கு ஏற்றது இந்தத் தலையணை ரிமோட். உங்கள் தலையணைதான் ரிமோட் கன்ட்ரோல். இதை வைத்தே டி.வி., ஏ.சி., ஃப்ரிட்ஜ் என எதையும் இயக்கலாம். ஆன், ஆஃப் செய்து... வேண்டியதைக் கூட்டிக் குறைக்கலாம். விலை 2,500 முதல் 3,000 ரூபாய் வரை!
 

சோலார் பவர் பேங்க் (SOLAR POWER BANK)

விகடன் சாய்ஸ்

 டிராவல் மேனியாக்களின் டார்லிங் இந்த கேட்ஜெட். மின்வெட்டுத் தேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒன்று. ஒரு ஹார்ட் டிஸ்க் சைஸில் இருக்கும் இது, சூரிய ஒளியில் சார்ஜ் ஆகக்கூடியது. எந்த நேரமும் தெருத்தெருவாகச் சுற்றித் திரிகிற சில்வண்டுகளுக்கும் நாடோடிகளுக்கும் பிசினஸ் புலிகளுக்கும் ஏற்றது. டூப்ளிகேட் சந்தையில் இது நிறையக் கிடைப்பதால், நல்லதாகப் பார்த்து வாங்கவேண்டும். விலை 1,000 ரூபாயில் இருந்து
1,500 ரூபாய்க்குள்!

க்ரோம் காஸ்ட்  (CHROME CAST)

விகடன் சாய்ஸ்

உங்களுடைய ஹெச்.டி  டி.வி-யில் பார்த்த சேனலையே பார்த்துப் பார்த்து வெறுப்பாக இருக்கிறதா? உங்களுக்கு ஏற்றது இந்த க்ரோம் காஸ்ட். பென்டிரைவ் சைஸில் இருக்கும் இந்தக் கருவியை உங்கள் ஹெச்.டி டி.வி-யில் மாட்டிவிட்டால் போதும். உங்களுடைய மொபைலில், லேப்டாப்பில், டேப்லெட்டில், டெஸ்க் டாப்பில் இருக்கும் ஆப்ஸ்களையும், ஆடியோ வீடியோ போட்டோக் களையும், வீடியோ ஸ்டீரிமிங்கு களையும் டி.வி-யிலேயே பார்க்கலாம். விலை 2,400 ரூபாய்.

ஸ்மார்ட் சுவிட்ச் (SMART SWITCH)

விகடன் சாய்ஸ்

வெத்தலை டப்பாபோல் இருக்கும் இந்தக் கருவியை, உங்கள் வீட்டுச் சுவரில் மாட்டிவிட வேண்டும். அத்துடன் வீட்டில் உள்ள மின்விளக்குகள், ஃபேன், ஏ.சி... போன்றவற்றின் சுவிட்ச்களை இணைத்து விட வேண்டும். வீட்டைப் பூட்டிவைத்து  விட்டு வெளியே போன பின்னும், `லைட் எல்லாம் ஆஃப் பண்ணோமா?' என டவுட்டாக இருந்தாலோ அல்லது பெட்ரூமில் இருந்தபடி கிச்சன் லைட்டை ஆஃப் பண்ண நினைத்தாலோ, உங்கள் மொபைலில் இருந்தே இந்த சுவிட்ச்களை இயக்கலாம். விலை 4,000 முதல் 5,000 ரூபாய் வரை.

ரோபோ வேக்யூம் க்ளீனர் (ROBOT VACCUM CLEANER)

விகடன் சாய்ஸ்

`வீட்டைச் சுத்தம் பண்ணி மாளவில்லை' என வருத்தப்படுகிறவர்களுக்கு ஏற்றது இந்த மின் துடைப்பான். ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் அங்கும் இங்கும் அதுவாகவே சுற்றி அலைந்து திரிந்து, வீட்டின் மூலைமுடுக்குகள் எல்லாம் சுத்தம் செய்துவிடக்கூடிய சூப்பர் கருவி இது. வீடு கூட்டும் இந்த எந்திரனின் விலை, 12 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை நீள்கிறது!