Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

•   ராகுல் டிராவிட்தான் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஜூனியர் கிரிக்கெட் டீமின் பயிற்சியாளர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய ஏ மற்றும் ஜூனியர் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் டிராவிட். இந்த ஓர் ஆண்டில் மட்டும் அவருக்கு 2.62 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டி.வி வர்ணனையாளரான சுனில் கவாஸ்கருக்கு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு மட்டும் 90 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியிருக்கிறது பி.சி.சி.ஐ. காஸ்ட்லி கேம்!

•   ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு, பெல்ஜியம் போலீஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிக்கைதான் கடந்த வார ஆன்லைன் வைரல். ஃபேஸ்புக்கில் பல ஆண்டுகளாக இருந்த `லைக்’ பட்டனோடு சமீபத்தில் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக புதிய பட்டன்களையும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், `இந்த பட்டன்களைப் பயன்படுத்த வேண்டாம்' என, தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது பெல்ஜியம் போலீஸ். `ஃபேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளைவைத்து நம்மைப் பற்றி அறிந்துகொள்ளும் ஃபேஸ்புக் நிறுவனம், நம்மை வகைப்படுத்திக்கொண்டு நமக்கு ஏற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் சம்பாதிக்கிறது. மனநிலையை அறிந்து மார்க்கெட்டிங் செய்வதை இது மேலும் எளிதாக்குகிறது. எனவே, உங்கள் தனி உரிமையைப் பாதுகாக்க விரும்பினால், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்’ என எச்சரித்துள்ளது. புத்திசாலி போலீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

•   அஜித் - விஜய் என இருவருமே இந்த முறை சம்மரைக் கொண்டாடியது லண்டனில்தான். ஒவ்வொரு வருடமும் சம்மருக்கு, லண்டனில் உள்ள மனைவி சங்கீதாவின் வீட்டுக்குப் போவது விஜய்யின் வழக்கம். இந்த முறையும் விஜய் லண்டன் போக, அவருக்கு முன்னரே லண்டனுக்குப் பறந்துவிட்டார் அஜித். கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறையை லண்டனில் கொண்டாடிய தல-தளபதிகள் வாக்களிப்பதற்காக மீண்டும் சென்னை பறந்துவந்துவிட்டார்கள்! சின்சியர் சிட்டிசன்ஸ்!

இன்பாக்ஸ்

•   சன்னி லியோனி ஃபேஷன் டிசைனராகவும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் உடுத்தும் ஆடைகள் பெரும்பாலும் அவரே டிசைன் செய்தவை. சமீபத்தில் பெர்ஃப்யூம் விளம்பரம் ஒன்றில் தங்க நிற உடையில் தகதகத்தவர், ‘இது நானே டிசைன் செய்தது. எனது மனதில் எப்போதும் ஒரே தீம்தான்... ராயல்டி. இளவரசி, அரசக் குடும்பப் பெண்கள் உடுத்தும் உடையின் கம்பீரத்தோடு தான் நான் என் உடைகளை டிசைன் செய்வேன்' என்கிறார் சன்னி. ராணி மகாராணி!

இன்பாக்ஸ்

•   ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன், தீபிகா படுகோன் எடுத்துக்கொண்ட படம், `இதுவரை இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வாங்கிய படம்' என்ற சாதனை படைத்திருக்கிறது. வின் டீசலுடன் இணைந்து `XXX-ரிட்டன் ஆஃப் ஸாண்டர் கேஜ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் தீபிகா படுகோன்.  அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படம் இது. இன்ஸ்டாகிராமில் பொதுவாக லைக்ஸ் வாங்குவது கடினம். தீபிகாவின் இந்த போட்டோ மூன்று லட்சம் லைக்ஸைத் தாண்டியிருக்கிறது. லைக்ஸ் பேபி!

இன்பாக்ஸ்

•   கோலிவுட்டின் லேட்டஸ்ட் க்யூட் ஹீரோயின் ரித்திகா சிங். `இறுதிச்சுற்று' படத்தில் பாக்ஸராகக் கலக்கிய ரித்திகாவின் கால்ஷீட்டுக்காகத்தான் காத்திருக்கின்றன கோலிவுட்
கம்பெனிகள். `காக்காமுட்டை' இயக்குநர் மணிகண்டனின் படத்தில் நடித்துவரும் ரித்திகா, `சிறுத்தை' சிவா இயக்கும் அஜித்தின் அடுத்த படத்திலும் நடிக்கிறார். யார் ஹீரோவாக இருந்தாலும் ரித்திகா சிங் கதை கேட்டு, பிறகு அவரது அம்மா-அப்பா இருவரும் கதைகேட்ட பிறகே ஓ.கே சொல்கிறார் ரித்திகா! தெளிவுச்சுற்று!

•   தொடர்ந்து ஆறாவது முறையாக நாக் அவுட் முறையில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். சமீபத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆன்டர்செஜ் சோல்ட் ராவை எதிர்த்து மோதினார் விஜேந்தர். இந்தப் போட்டி எட்டு ரவுண்டுகள் கொண்டது என அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது ரவுண்டிலேயே நாக் அவுட் பன்ச்சுகள் மூலம் சோல்ட்ராவை வீழ்த்தினார் விஜேந்தர். இதன்மூலம் தொழில்முறையிலான பாக்ஸிங்கில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத வீரர் என்பது மட்டும் அல்ல, தொடர்ந்து நாக் அவுட் முறையில் வெற்றிபெறும் வீரராகவும் சாதனை படைத்துவருகிறார் விஜேந்தர். பன்ச் மன்னன்!