Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/Carfires:

8 கி.மீ நடந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துட்டுப் போறது பெருமை இல்லை சென்றாயன்ஸ். 68 வருஷம் ஆகியும் அவங்களுக்கு ரோடு போட்டுக்கொடுக்க முடியாததை நெனச்சு வெட்கப்படுவோம்.

facebook.com/guru.shree.16:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வரப்ப பாட்டில்களை பதுக்கிவெக்கிற மாதிரி, தேர்தலுக்காக காடுவெட்டி குருவைப் பதுக்கிவெச்சிருக்கு பா.ம.க.

facebook.com/naadodi.ilakkiyan:

``ஏங்க... சாமிக்கு பூ வாங்கிட்டு வாங்க!''

``ம்''

``அப்படியே எனக்கும்.''

``அதான் முதல்லயே சொல்லிட்டியே!''

``???''

``நீதானே எனக்கு சாமி'' ‪#இலக்கிய_இல்லறம்‬

facebook.com/yuvathamizh:

இப்போது நான் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனம், எனக்கு எட்டாவது நிறுவனம். முந்தைய ஏழு நிறுவனங்களிலும் இனிப்பும் கசப்பும் கலந்த நிறைய அனுபவங்கள் உள்ளன. அவற்றில் மூன்று நிறுவனங்களில் சம்பளப் பாக்கிகூட உண்டு. கடைசியாக வெளிவந்த நிறுவனம், எனக்கு அறுபது ஆயிரம் ரூபாய் தரவேண்டும். சில நிறுவனங்களின் நிர்வாகம், எனக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. சில ஊழியர்களோடு கருத்துவேறுபாடு இருந்திருக்கிறது. ஏழு நிறுவனங்களில் இருந்தும் விலகியபோது, ஏழு விதமான காரணங்கள் இருந்திருக்கின்றன. இரண்டே நிறுவனங்களில்தான் அவர்களிடம் இருந்து விடைகொடுத்து மகிழ்ச்சியாக வெளியேற முடிந்தது.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிறுவனங்களைப் பற்றியோ, இங்கு பணியாற்றிய சகப்பணியாளர்களைப் பற்றியோ எங்குமே பொதுவெளியில் தவறான முறையில் எதையும் பேச மாட்டேன். வேண்டுமானால், இனிமையான விஷயங்களைப் பெருமையாகப் பகிர்ந்து கொள்வது உண்டு. இந்தத் தன்மையை அடிப்படையான `job ethics' என்றும் நம்புகிறேன்.

ஒரு நிறுவனத்தில் நமக்கு வேலை போய்விட்டால், அடுத்த நிறுவனம் நம் திறமையை மதித்து அழைத்து வேலை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஜால்ரா அடித்தோ, பழைய நிறுவனத்தை இகழ்வதின் மூலம் புதிய நிறுவனத்தை அசத்தியோ வேலைக்குச் சேருவோமேயானால் அந்த வேலைக்குப் பெயரே வேறு. எந்த வகையிலும் நம்பகத்தன்மையே இல்லாத ஒரு மனிதரை யாரும் மனமுவந்து மதிப்பது இல்லை.

காசு எப்போ வேணும்னாலும், எவ்வளவு வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் பாஸ்... நாம மண்டையைப் போட்டப் பிறகு ‘நல்ல மனுஷன் போய் சேர்ந்துட்டானே!’ங்கிற ஃபீலிங்கை நாலு பேரிடமாவது ஏற்படுத்துறதுதான் லைஃப்லயே டஃப் டாஸ்க்கு

வலைபாயுதே

twitter.com/deebanece: பல வருஷங்களுக்குப் பிறகு இப்பதான் எங்க ஏரியா கவுன்சிலரைப் பார்த்தேன். பாவம், அவர்கூட தவ வாழ்வு வாழ்வாருபோல... பளபளனு இருக்காப்ல.

twitter.com/Baashhu: தேர்தலுக்கு எத்தனையோ கோடி செலவு பண்றானுவ, அந்த மெஷினை மறைக்க இன்னும் அட்டைப்பெட்டியைக் கிழிச்சு வெச்சிருக்கானுவ!

twitter.com/mani_kuttans: பேங்க்ல வேகமா வேலை செய்யுறது, பணம் எண்ணுற மெஷின் மட்டும்தான். 

twitter.com/arattaigirl:
பழக்கடையில ஒரு அம்மா.... `ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?' - கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

twitter.com/unmaivilambbi
: எல்லோர் அலைபேசியிலும் உள்ளது... முன்பு ஒருகாலத்தில் எல்லாமுமாக இருந்த ஒரு நபரின் தொலைபேசி எண்.

twitter.com/navi_n: நாம் கழுவி வைத்தப் பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்.

twitter.com/iLagaan: அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி முடி வெட்டுறதும் முடிவெடுக்கிறதும் ரொம்பக் கஷ்டம்!

twitter.com/mekalapugazh: கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால், நிறையத் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்.

twitter.com/writernaayon: நவக்கிரகங்கள் ஆண்களாக இருக்கும்போதே நம்மை இப்படி ஆட்டுவிக்கின்றனவே, அவை பெண்களாக இருந்திருந்தால்..!

twitter.com/chevazhagan1: ரெண்டு கொசுவத்தியைத் தனித்தனியாப் பிரிக்கிறதுக்கு நான் படுறபாடு இருக்கே... ஸ்ஸப்பா!  எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் பிரிச்சாங்களோ!

வலைபாயுதே

twitter.com/i_Soruba: வருடத்துக்கு ஒன்று இரண்டு முறை மட்டும் போக நேர்கிற சொந்த ஊரில் முதலில் வியக்கவைப்பது சட்டென வளர்ந்து நிற்கும் அக்கம்பக்கத்துக் குழந்தைகள்.

twitter.com/VignaSuresh: `எல்லாரும் தூங்குறாங்க. இப்ப பேச முடியாது' என்பது மற்றவர்களுக்கான பிரச்னை.

`இன்னும் யாரும் தூங்கல. இப்ப பேச முடியாது' என்பது காதலர் பிரச்னை.

twitter.com/ThePayon:  `தென்னந்தோப்பு' என எழுதினால் சாதா நடை. `தேங்காவனம்' என எழுதினால் கவித்துவம்!

twitter.com/meenadmr: ஃபேஸ்புக், ட்விட்டர், எஸ்.எம்.எஸ் பார்க்காமல், செல்போன் கையில் இருப்பதை மறந்து ஒரு சினிமா பார்த்தால் அது நல்ல படம்.

twitter.com/arattaigirl: கடன் கேட்பதைவிட... திரும்பப் பெறத்தான் அதிக ஆயத்தப்பொய்கள் தேவைப்படுகின்றன!

twitter.com/su_boss2: ஓட்டு போடாதவங்க காரணத்தை பேப்பர்ல எழுதி VAO-கிட்டயும் RI-கிட்டயும் கையெழுத்து வாங்கி கலெக்டர் ஆபீஸ்ல கொடுக்கணும்னு சொன்னா போதும், 100 சதவிகித வாக்குப்பதிவு.

twitter.com/pshiva475:  பேப்பர்காரன்: சார்... பழைய பேப்பர் இருந்தா கொடுங்க.

நம்மாளு: மனைவி ஊருக்குப் போயிட்டாப்பா.

பே.காரன்: அப்படின்னா ஒளிச்சுவெச்சிருக்கிற பாட்டலையாவது கொடுங்க சார்.

twitter.com/gpradeesh:  சென்னை விமான நிலைய கூரையைவிட அதிகமா உடைஞ்சது, கார்த்திக் கட்சியாத்தான் இருக்கும். இன்னிக்கு நாலு பேரு பிச்சுட்டுப் போயி தனியா கடை போட்ருக்கானுக!

வலைபாயுதே

facebook.com/ashoker.1409:

பூரண மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் குடிப்பழக்கத்துக்கான சிகிச்சை மையங்கள் எத்தனை, எங்கு தொடங்கப்படும்? தெரியாது.

சிகிச்சை மையங்களுக்கு எனத் தனியாக இடம் தேடாமல், காலி செய்யப்படும் டாஸ்மாக் பார்களில் தொடங்கப்பட வேண்டும். அதாவது, டாஸ்மாக் இருந்த இடங்களில் சிகிச்சை மையங்கள்!
நம் குடிமகன்களுக்கு இது ஒரு nostalgia-வாக இருக்கும் இல்லையா? ;) ``டெய்லி மூணாவது டேபிள்ல சரக்கடிச்சாதான் மப்பேறும்பானே... அவந்தான் அந்த மூணாவது பெட்ல கெடக்குறான்!'' :)))
இப்படி அமைப்பதால் ஒன்று, சிகிச்சை மையங்களைத் தேடி அலையவேண்டி இருக்காது. இரண்டாவது, மது என்பது கெட்ட பழக்கம் என்ற எண்ணத்தையும் அதைப் பொதுவெளியில் எடுத்துக்கொள்வதில் இருந்த தயக்கத்தையும் அடித்து நொறுக்கிய அந்தப் பரவலாக்கப்பட்ட இடங்களிலேயே அதற்கான சிகிச்சை அளிப்பது என்பது அரசின் அறம் சார்ந்த நிலைமாறுதலாக இருக்கும்.

மூன்றாவதாக, ஒரு பழக்கத்துக்கு அடிமையான பின்னர், தொடர்ந்து அங்கு செல்ல பழக்கப்பட்ட கால்கள், சிகிச்சைக்கு என புதிய இடம் செல்ல மறுக்கும் அல்லது தயங்கும். அதே இடத்தில் சிகிச்சை என்பது உளவியல்ரீதியாக நல்ல பலன் அளிக்கக்கூடும்.

டாஸ்மாக் இருந்த இடத்தில் சிகிச்சை மையம் என்பதன் இன்னொரு உட்கருத்து, அத்தனை எண்ணிக்கையில் சிகிச்சை மையங்கள் தேவைப்படுகின்றன என்பதுதான். அத்தனை மருத்துவர்கள், பணியாளர்கள் சாத்தியமா என்பது எல்லாம் தீர்க்க முடியாத பிரச்னை ஒன்றும் அல்ல. ஏனெனில், மது விற்பதற்கே பட்டதாரிகளைப் பயன்படுத்தியவர்கள் நாம்!

facebook.com/saravanan.chandran.77:


இந்தத் தேர்தலில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். சொல்லிவைத்தாற்போல, அத்தனை பேரும் `விவசாயத்தை, விவசாயியைப் பாதுகாப்போம்!' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், `தமிழ்ச் சமூக வாழ்வில் விவசாயிக்கு என்னவிதமான இடத்தைக் கொடுத்திருக்கிறோம்?' எனக் கேள்வி எழுப்பிப்பாருங்கள். நம் வீட்டுப் பெண்களை ஒரு வணிகருக்குச் சம்பந்தம் பேசுகிறோம். அல்லது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற தொழில் சார்ந்த ஊழியர்களுக்குச் சம்பந்தம் பேசுகிறோம். பணம் படைத்தவராக இருந்தாலும், ஒரு விவசாயிக்குத் திருமணம் செய்துகொடுப்போமா? ஆக, பணம் பிரச்னை அல்ல. அது இரண்டாம்பட்சம்தான். மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கும் விவசாயியைவிட எட்டாயிரம் சம்பாதிக்கும் ஓர் ஊழியருக்குத்தான் முன்னுரிமை தருகிறோம். தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை மனநிலையே விவசாயத்துக்கு எதிராகவே இருக்கிறது. இந்தச் சமூக ஆழ்மனது, அரசியல் கட்சிகளின் மீது மட்டும் பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கிறது. இதைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டிருக் கிறேன். பச்சைத் துண்டு, பச்சைத் தலைப்பாகை எல்லாம் பம்மாத்து வேலைகள்தான்.

facebook.com/kirthikat:

ஓர் அங்கமாக வாழ்ந்த அந்தக் கிராமத்துத் தெருக்களில் அந்நியமாக, ஆச்சர்யமாக அவர்கள் பார்க்கும்படி நடந்து போவது வேரை விட்ட செடிகளின் விதி.