Published:Updated:

“த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

   “த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, ச.ஆனந்தப்பிரியா, படம்: பா.காளிமுத்து

“த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, ச.ஆனந்தப்பிரியா, படம்: பா.காளிமுத்து

Published:Updated:
   “த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”
   “த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

``சிம்பிளா கேட்டா சிறப்பா பதில் சொல்லிடுவேன்'' - சின்னதாகச் சிரிக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி.

``கேள்விகளை அள்ளிப் போடுங்க... சமைச்சுடலாம். ஸாரி... ஜமாய்ச்சுடலாம்” என்று ஃபுல் எனர்ஜியுடன் தயாரானார் செஃப் தாமு.

``ஜி.கே-ல நான் கொஞ்சம் இல்லை, ரொம்ப வீக் ஜி” - இது காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா.

``மியூஸிக் பற்றிக் கேட்டீங்கன்னா, 100 மார்க் ஸ்கோர் பண்ணிடுவேன், வேற ஏதாவதுனா நான் எஸ்கேப்தான். பார்த்து கேளுங்க பாஸ்!'' - பரபரக்கிறார் பாடகி ஹரிணி.

``தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு விளம்பரங்களிலும் நடித்த பாட்டி நடிகையின் பெயர் என்ன?''

விடை: கஸ்தூரி.

மதன் கார்க்கி: ``சமீபத்துல யாரோ ஒருத்தர் இதைப் பற்றிப் பேசிட்டு இருந்தாங்க. `ஒரே ஆள் கோக், பெப்சி போன்ற ரெண்டு பிராண்டுலயும் விளம்பரம் பண்ணாங்கன்னா எப்படி இருக்கும்?'னு நானே சில சமயம் யோசிச்சு இருக்கேன். அப்படி நடந்த விஷயம்தான் இந்த விளம்பரம். அந்தப் பாட்டி பேரு `க'-ல ஆரம்பிக்கும். காஞ்சனா பாட்டியா அல்லது கஸ்தூரி பாட்டியானு ஞாபகம் இல்லையே.''

செஃப் தாமு: ``ஓவர் இனிப்பும் நிறையக் கசப்பும் எப்படி சிலருக்கு ஆகாதோ... அப்படித்தான் எனக்கும் இந்த பாலிட்டிக்ஸே ஆகாது. இருந்தாலும் சிக்கிக்கிட்டேனே, பதில் சொல்லிடுறேன். அந்தப் பாட்டி பேர் கஸ்தூரி. அவங்களை நடிக்கச் சொல்லி கேட்டதால, நடிச்சிருக்காங்க. இதுல ஒண்ணும் தப்பு இல்லையே!”

பூர்ணிமா: ``அந்த விளம்பரத்தை நான் பார்த்தேனே. அந்தப் பாட்டி மேல நான் தப்பு சொல்ல மாட்டேன். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை வைச்சு விளம்பரம் எடுக்கிறவங்கதான் சரியா விசாரிச்சு இருக்கணும். இது பிரச்னை ஆனதும், அந்தப் பாட்டி மேல குத்தம் சொன்னா எப்படி? பட், அந்தப் பாட்டி ரொம்ப க்யூட்!”

   “த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹரிணி: ``நான் சின்ன வயசுல இருந்தே டி.வி பார்க்கிறது ரொம்ப ரொம்ப கம்மி. இந்த நியூஸ் எங்கேயோ கேட்டேனே! யாரோ பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா, பேரு தெரியலையே.''

`` ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ போட்டியை, மீண்டும் நடத்தவிருக்கும் நடிகர் யார்?''

விடை: அர்விந்த் சுவாமி

மதன் கார்க்கி:
பட்டெனப் பதில் வருகிறது ``அர்விந்த் சுவாமி. `இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமா?'னு ஆரம்பத்துல என்கிட்டயும் கேட்டாங்க. நேரமின்மை காரணமா `பண்ண முடியாது'னு சொல்லிட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச டி.வி ஷோ.''

செஃப் தாமு: ``சூர்யாவா? அவரு இல்லையா... ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் கொடுத்தா, என் நண்பர்கிட்ட கேட்டு உப்பு, மிளகா போட்டுச் சொல்லிடுவேன். போன் எ ப்ரெண்ட்கூட கிடையாதா?''

பூர்ணிமா:
``செகண்ட் சீஸனுக்கும் சூர்யாவேதான் இருக்கும். சரியா?” என்றவர் விடை கேட்டதும், “அர்விந்த் சுவாமி சார் ரொம்ப இன்டலிஜென்ட். நிச்சயமா இந்த ஷோவில் அவரோட பெஸ்ட்டைத் தருவார்.”

ஹரிணி
: ``இந்தியில அமிதாப் பச்சன் நடத்தினார். இங்கே கடைசியா சூர்யா நடத்தினார். இப்ப யார் நடத்தப்போறார்னு தெரியலையே. நீங்க மியூஸிக் பற்றி கேள்வி வெச்சிருக்கீங்களா... இல்லையா?'' என, சோக ஸ்மைலியைக் காட்டுகிறார்.

``த்ரிஷா, சமீபத்தில் எத்தனையாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்?''

விடை: 33

மதன் கார்க்கி: ``நான் த்ரிஷாவுக்கு `வான் எங்கும் நீ மின்ன...'னு ஒரே ஒரு பாட்டுதான் எழுதியிருக்கேன். நாங்க சந்திச்சதுகூட கிடையாது. இதுக்கு நான் கெஸ் பண்ணித்தான் பதில் சொல்ல முடியும். (யோசிக்கிறார்) அவங்களுக்கு 35 வயசா?'' பதிலைக் கேட்டதும் ``அய்யோ... நான் ரெண்டு வருஷம் கூட்டிச் சொல்லிட்டேனே. இதுக்காக நான் த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன். ஸாரி த்ரிஷா.''

செஃப் தாமு: ``சமைக்கிறதுல எது, எவ்வளவு கிராம் போடலாம்னு கேட்டா, கரெக்ட்டா புட்டுப்புட்டு வெச்சிருவேன். இப்படி ஹீரோயின் வயசு எல்லாம் கேட்டா, என்னங்க சொல்வேன்?” என விடாமல் சிரிக்கிறார். ``இருந்தாலும் த்ரிஷா என் ஃபேவரிட் ஹீரோயின். அவங்களுக்கு 36 வயதினிலே நடக்கலாம்’’ என்று ஒரே போடாகப் போட்டார்.

   “த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

பூர்ணிமா: ``எனக்கும் த்ரிஷாவுக்கும் அவ்வளவு பழக்கம் இல்லை. ஆனா, அவங்க ரொம்ப யங்கா இருக்காங்கன்னா, அதுக்குப் பின்னாடி ஜிம் வொர்க் அவுட்தான் காரணமா இருக்கணும். சரி, அவங்களுக்கு 34 வயசு இருக்குமா?'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும் ``ஐ... நான் கிட்டத்தட்ட சரியான பதிலைச் சொல்லிருக்கேன். எனக்கு மார்க் போட்டே ஆகணும்.”

ஹரிணி: ``நான் த்ரிஷாவுக்காகப் பல பாடல்கள் பாடியிருக்கேன். த்ரிஷா எப்போதும் யூத். அவங்களுக்கு வயசு 27 இருக்குமா?'' என நம்மிடம் கேட்க (கலாய்க்காமல் சீரியஸாக பதில் சொல்லுங்க என்றதும்) ``ஹா... ஹா... கூல்ப்பா... 35... 34... 33... சரி, ஃபைனலா 32 வைச்சுக்கோங்க. எனிவே த்ரிஷாவுக்கு பிலேட்டட் பர்த்டே விஷஸ்.''

``ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை நீக்கச் சொல்லி சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானவர் யார்?''

விடை: சுப்பிரமணியன் சுவாமி.

மதன் கார்க்கி: ``ஹா... ஹா... எனக்குத் தெரிஞ்சு சுப்பிரமணியன் சுவாமிதான் அடிக்கடி சர்ச்சையில சிக்குவார். அவர் தானே?'' எனக் கேட்டு பலமாகச் சிரிக்கிறார்.

செஃப் தாமு: ``தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிதான் இப்படிச் சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன். ஆனா, அவருக்கும் இவருக்கும் என்ன பிரச்னைனு தெரியலையே'' என எதையோ யோசித்தவர் ``லக்கானி, இல்லைங்க. வைகோதான். ஏதோ ஒரு மீட்டிங்ல சொன்ன மாதிரி சின்னதா ஒரு ஞாபகம் இருக்கு.”

   “த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

பூர்ணிமா: ``சிதம்பரம் இப்படிச் சொல்லியிருக்கலாம். எனக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம். இப்படி அரசியல் கேள்வியா கேட்டா எப்பிடி ப்ரோ?''

ஹரிணி : ``எனக்கு ரிசர்வ் பேங்க் மட்டும்தான் தெரியும். அங்கே அக்கவுன்ட் ஓப்பன் பண்ண முடியாதுனு தெரியும். ஆனா, அது எங்கே இருக்குனுகூடத் தெரியாது. நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்.''

``ஜெயலலிதா, எத்தனை முறை இந்தத் தேர்தலுக்காக ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்தார்?''

விடை: 14

மதன் கார்க்கி: ``இப்ப டைம் ரொம்ப முக்கியமான ஒரு ஃபேக்ட். அனைத்து மக்களையும் சந்தித்துப் பேசலாம்னு நினைப்பது நல்ல விஷயம்தான். எப்படி வேகமாக கவர் பண்ணி, நிறையப் பேர் அவங்களோட பிரசாரத்தைக் கேட்கணும்னு நினைக்கிறாங்க. இதை கணிதத்துல `optimization problem'னு சொல்வாங்க. அவங்களுக்கு அவங்க குறிக்கோளை அடையணும். அதுக்காக இந்த ஹெலிகாப்டர்ல பறந்து போய்ப் பிரசாரம் செய்திருக்கலாம். ஆனா, எத்தனை முறை பறந்தாங்கனு எண்ணலையே!''

செஃப் தாமு: சிரித்தவர், ``நான் ஏதோ அமைதியா சமைச்சுக் கொடுத்துட்டு, சந்தோஷமா இருக்கேன். என்கிட்ட ஏங்க இப்படி? அவங்க நிறைய இடங்களுக்கு ஹெலிகாப்டரில் போன மாதிரியே தெரியலையே. திருநெல்வேலி அப்புறம் இன்னும் ரெண்டு மூணு இடத்துக்குப் போனாங்க. சரியா?”

பூர்ணிமா: ``நோ ஐடியா. ஒரு கெஸ்ல சொன்னா, 20 முறை பறந்திருப் பாங்க. அவங்க அவங்களோட வசதிக்கு ஏற்ற மாதிரி ஹெலிகாப்டரில் பிரசாரம் பண்றாங்க. இதெல்லாம் நமக்குப் பழகிருச்சு.''
 
ஹரிணி:
``கடைசி வரைக்கும் நீங்க மியூஸிக் தவிர மத்த எல்லாத்தையும் கேட்டுட்டீங்க. இந்தக் கேள்விக்கு, என் குலதெய்வத்து மேல ப்ராமிஸா எனக்குப் பதில் தெரியலைங்க'' என்றவர், நம்மிடம் நைஸாக ``ஜி... நான் வாங்கின ஸ்கோரை மட்டும் பப்ளிக்கா  போட்டுடாதீங்க... ப்ளீஸ்'' எனச் சிரிக்கிறார்!