Published:Updated:

என் ஊர் !

சி.காவேரி மாணிக்கம், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

என் ஊர் !

சி.காவேரி மாணிக்கம், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

''ஒரு காலத்தில் மரங்கள் நிறைந்த பகுதி இது. சிறுவனாக இருந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வீடுகளே இருந்தன. செடி, கொடி, மரங்கள் என ஏரியாவே காடு போல இருக்கும். இன்று மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வாங்க குண்டுமணி நிலம்கூட இல்லாமல் எல்லாம் கட்டடங்களாகி விட்டன!' - தான் வளர்ந்த சாலிகிராமம்  பற்றி சொல்லத் தொடங்குகிறார் நடிகர் ஆதி.

'சாலிகிராமம் எம்.ஜி.ஆர். தெரு வீட்டில்தான் முதலில் வாடகைக்குக் குடிவந்தோம். அப்போது நான்காவது படித்துக்கொண்டு இருந்தேன். சுற்றிலும் விதவிதமான மரங்கள், இரவில் கிரீச்சிடும் பூச்சிகள், கீச்...கீச் எனச் சத்தமிடும் சிட்டுக்குருவிகள் என தமிழகத் தலைநகரில் இருக் கிறோம் என்ற உணர்வே வராது. அந்த அளவுக்கு நகரத்தின் சாயல் இன்றி அசல் கிராமத்தில்வாழ்வது போன்றே இருக்கும். இப்போது மரங்களும் இல்லை; குருவி, பூச்சிகளின் சத்தமும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர் !

வாடகைக்குக் குடிவந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே தெருவில் சொந்தமாக வீடு வாங்கிக் குடியேறினோம். கபடி விளையாடுவது, மாஞ்சா  விடுவது, திருட்டு மாங்காய் பறிப்பது என சேட்டை யும் வேட்டையுமாகப் பொழுதுகள் கழியும். காத்தாடி மாஞ்சாவை நாங்களே தயார் செய்வோம். யாருடைய

என் ஊர் !

பட்டத்தை யார் அறுப்பது என்று கடும் போட்டி. அறுந்து காற்றில் பறக்கும் காற்றாடியின் பின்னால் தலைதெறிக்க ஓடுவோம். வழியில் எந்த வாகனம் வருகிறது, மேடு பள்ளம் இருக்கிறதா, முள் குத்துகிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாக நினைவில்லை. திருட்டு மாங்காயின் சுவைக்கு நான் அடிமை. அதுவும் பின் வீட்டு மா மர குண்டு மாங்காய்கள்தான் என் ஃபேவரைட். ரொம்பப் புளிப்பாக இருக்கும். வீட்டில் இருந்து எடுத்து வந்த உப்பில் தொட்டுக் கடித்தால், உச்சி வரை புளிப்பு ஏறும். பல்லெல்லாம் பயங்கரமாகக் கூசும். இதைச் சொல்லும்போதே இப்போதும் என் நாக்கில் எச்சில் ஊறுகிறது.

என் ஊர் !
என் ஊர் !

 இப்போது நான் குடியிருக்கும் கே.கே. சாலை அபார்ட்மென்ட் இருக்கும் இடம் அப்போது வயல்வெளியாக இருந்தது. வயல்களுக்கு நடுவே சிறு குளம் ஒன்று இருந்தது. மழைக் காலத்தில் அந்தக் குளம் நிரம்பி வழியும். அந்தச் சமயங்களில் மீன்பிடிக்கத் தூண்டிலோடு கிளம்பிவிடுவோம். அதேபோல் அப்போது எல்லா காலி இடங்களையும் கிரிக்கெட் கிரவுண்டுகளாக மாற்றி இருந்தோம்.இப்போது அந்த கிரவுண்ட்டுகள் எல்லாம் ஃப்ளாட்டுகளாக மாறி நிற்கின்றன. ஆனால், இன்றைய சிறுவர்கள் வீடியோ கேம்ஸுக்கும், டி.வி-க்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டனர்.

என் ஊர் !

அப்போது பொருட்கள் வாங்க 'காமாட்சி ஸ்டோர்ஸ்’ என்ற ஒரே கடைதான். அங்கு கிடைக்காத பொருட்களை வடபழனி போய் வாங்கி வருவோம். அருணாச்சலம் சாலையில் உள்ள அருணாச் சலம் ஸ்டுடியோ என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். அங்கு ஒரு அரச மர செட் போட்டு இருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட முக்கால்வாசிப் படங்களில் இது தவறாமல் இடம் பிடிக்கும். கவுண்டமணி-செந்தில் காமெடி, பாண்டியராஜன், சத்யராஜ் சார் என பல படங்களின் ஷூட்டிங்கைப் பார்த்திருக்கிறேன்.  

என் ஊர் !

இன்று அந்த ஸ்டுடியோவே இல்லை. ஆனால் ஸ்டுடியோ பிள்ளையார் கோயில் மட்டும் இன்றும் இருக்கிறது. நான் பள்ளிக்குச் செல்லும் வழியில் தினமும் அந்தப் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் செல்வேன். அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் குடும்பத்தினர் அனைவருக்குமே அந்தப் பிள்ளையார் இஷ்டம். சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றையும் அவரிடம் பகிர்ந்துகொள்வோம். இங்கு ஸ்டுடியோ இருந்ததற்கான ஒரே அடையாளம் அந்த பிள்ளையார் மட்டும்தான்!''