Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

ஹீரோயின்களின் பாதங்களை பூமியில் பதியவிடாமல், அரை அடி உயரத்தில் தேவதைகளாக்குபவை ஹை ஹீல்ஸ். ஆனால், செருப்புகூட இல்லாமல் வெறும் கால்களுடன் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடந்து அதிரவைத்தார் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ். `நடிகைகள் ஹை ஹீல்ஸ் அணிந்துதான் ரெட் கார்ப்பெட்டில் நடக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜூலியா இப்படி வந்தார்' என மீடியா சொல்ல, ‘கணுக்காலில் சுளுக்குப்பா... அதான்' என சிம்பிளாக முடித்துவிட்டார் பிரெட்டி வுமன்!

பிட்ஸ் பிரேக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`அஸாருதினின் முழு அனுமதியுடன் எடுக்கப்பட்ட `அஸார்' படத்தில் பொய்கள் அதிகம்' என டென்ஷனில் எகிறுகிறது கிரிக்கெட் ரசிகர் கூட்டம். `அஸாருதின், மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டார்' என முதன்முதலில் சொன்னவர் தென்ஆப்பிரிக்க கேப்டன் ஹான்சி க்ரோனியே. ஆனால், படத்தில் புக்கி ஒருவர் சொல்வதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. மேட்ச் ஃபிக்ஸிங் நடந்ததாகச் சொல்லப்படும் மேட்சில், நடுவரின் தவறான தீர்ப்பால் அஸாருதின் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆவதுபோல காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில், அந்த மேட்ச் ஃபிக்ஸிங் ஆட்டத்தில் அஸாருதின் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேலும், இந்தப் போட்டிகளின்போது உண்மையிலேயே இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது சச்சின் டெண்டுல்கர். ஆனால், படத்தில் அஸாருதின் கேப்டனாகக் காட்டப்பட்டிருக்கிறார் எனக் கடுப்பாகிறார்கள் ரசிகர்கள்.

பிட்ஸ் பிரேக்

மிழ், தெலுங்கு சினிமாவில் யார் ஹிட் ஹாட் ஹீரோயின் என்பதில் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும்தான் போட்டி. சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நயன்தாரா நடிக்க இருந்த நிலையில், அந்த வாய்ப்பு அப்படியே இப்போது அனுஷ்காவுக்குத் திரும்பியிருக்கிறது. நயன்தாரா, தெலுங்கில் `பாபா பங்காரம்', தமிழில் `இருமுகன்', `கஷ்மோரா' என பிஸியாக இருக்க, அனுஷ்காவோ `பாகுபலி -2', `பக்மதி' என பிஸியாகப் பறக்கிறார். இருவருமே இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள்!

பிட்ஸ் பிரேக்

பாலிவுட்டின் மோசமான படம், மோசமான நடிகர் - நடிகைகளுக்கு வழங்கப்படும் விருது ‘கன்டா அவார்ட்ஸ்’. 2015-ம் ஆண்டின் மிக மோசமான படமாக சல்மான் கான் நடித்த ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’வும், மோசமான நடிகராக ‘தில்வாலே’ படத்தில் நடித்த ஷாரூக் கானும், மோசமான நடிகையாக ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’ படத்தில் நடித்த சோனம் கபூரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மோசமான நடிகர் சிறப்பு விருது என `பாம்பே வெல்வட்' படத்தில் நடித்த கரண் ஜோகருக்கு!

பிட்ஸ் பிரேக்

பிரபல பாடகர் சோனு நிகாமின் `பிச்சைக்காரன்' வேடம், சமீபத்திய ஆன்லைன் வைரல். யூ டியூப் சேனல் ஒன்றின் வீடியோவுக்காக மும்பையின் ஜுஹு-வில் பிச்சைக்காரர்போல மேக்கப் போட்டு, சோனு நிகாம் ஹர்மோனியத்துடன் தெருவில் அமர்ந்து பாட ஆரம்பித்தார். `ஒரு பிச்சைக்காரர் இவ்வளவு சுத்தமாகப் பாடுகிறாரே!' எனக் கூட்டம் கூடிவிட்டது. கடைசி வரை அவர் சோனு நிகாம் என யாருக்கும் தெரியவில்லை. `ஒருநாள் நான் நானாக இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இந்த வேடம். ஓர் இளைஞன் என் கையைப் பிடித்து `அங்கிள், நீங்க காலையில சாப்டீங்களா?' எனக் கேட்டதோடு, என் கையில் 12 ரூபாயைத் திணித்ததை என்னால் மறக்கவே முடியாது.  என நெகிழ்கிறார்.

பிட்ஸ் பிரேக்

நெக்லஸ் டால் தமன்னா! அதுவும் ‘சோக்கர்’ வகை நெக்லஸ்கள் என்றால் பேபிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘சின்ன வயதில் இருந்தே எனக்கு நெக்லஸ் மீது பைத்தியம். ஆனால், இடையில் நெக்லஸ்களை பெண்கள் விரும்பி அணியாதது வருத்தமாக இருந்தது. இப்போது மீண்டும் நெக்லஸ் ட்ரெண்ட் திரும்புவதில் ஐ'ம் ஹேப்பி’ என நெக்கைக் காட்டிச் சிரிக்கிறார் தமன்னா!