Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

ன்றைய இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஹேர் ஸ்டைல்ஸ் இவைதான்.

சில ஸ்டைல்களைப் பார்த்தால் அதிர்கிறது... இருந்தாலும், மனதைரியத்தோடு முயற்சி செய்துபாருங்கள்... அசத்தலாம்!

MANBUN

விகடன் சாய்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹைஃபை சாமியார் லுக் விரும்புபவர்களுக்கு ஏற்ற கெத்து கெட்டப் இது. தலையைச் சுற்றி ஒரே அளவில் நிறைய முடி வளர்த்துக் கொண்டு, அத்தனை முடிகளையும் அள்ளி முடிந்து, `பன்’போல உச்சந்தலையில் ஒரு கொண்டை வைத்துக்கொண்டால் அதுதான் ‘மேன்பன்’. லியோனார்டோ டிகாப்ரியோ தொடங்கி டேவிட் பெக்கம் வரை, பிரபலங்கள் பலரும் முயற்சிசெய்து பார்த்த கரடுமுரடு காட்டு லுக் இது. இந்தக் கொண்டை சாமியார் கட்டிங்குக்கு தாடியும் மீசையும் கட்டாயம். சிக்ஸ்பேக் இருந்தால் சிறப்போ சிறப்பு!

Caesar

விகடன் சாய்ஸ்

எந்நேரமும் தலை கலையாமல் பார்க்க பக்கா ஜென்டில்மேன்போல் இருக்க நினைக்கும் வெண்காலர் வேட்டையன்களுக்கு இந்த ஹேர்கட் இஷ்டமானது. முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இல்லாமல் கொட்ட ஆரம்பித்து, சன்னமாகிக்கொண்டிருக்கிறவர்கள் இந்த ஸ்டைலை முயற்சிசெய்யலாம். தலை முழுக்க ஒரே அளவில் ஷார்ட்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஜெல் போட்டு லேசாகக் களைத்துவிட்டால் போதுமானது. முன்தலை வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டதால், முடியை ஷார்ட்டாக்கி மொத்தத்தையும் முன்னால் இழுத்துவிட்டுக்கொள்ளும் இந்த ஸ்டைல், ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீஸருடையது. அதுதான் இப்போ ட்ரெண்ட்! ஹாலிவுட் ‘தல’ ஜார்ஜ் க்ளூனிக்குப் பிடித்த ஸ்டைல் இது!

Pompadour

விகடன் சாய்ஸ்

நம் தாத்தா காலத்தில் ஃபேமஸாக இருந்த ராக் ஸ்டார் ‘எல்விஸ் ப்ரெஸ்லி’ ஸ்டைல். தலையைச் சுற்றிலும் ஷார்ட்டாக வெட்டிவிட்டு, நடுவிலும் பின்னாலும் மட்டும் நீண்ட முடியை சீராக்கி, நேராக்கிக்கொண்டால் அதுதான் ‘போம்படோர்’. இதன் சிறப்பே முன்னால் நீண்டுநிற்கும் முடியை அப்படியே கொத்தாகத் தூக்கி, பின்னால் வாரிக்கொள்வதுதான். ஷைனிங்கான முடி உள்ளோருக்கு ஏற்ற அதிரடியான ஸ்டைல் இது. உச்சந்தலை முடி குறைந்தபட்சம் ஆறு இன்ச்சாவது இருக்கவேண்டியது அவசியம். இது உங்களுக்கு மெஜெஸ்டிக்கான க்ளாசிக் லுக் தருவது நிச்சயம்!

FADE

விகடன் சாய்ஸ்

இப்போது ட்ரெண்டில் இருக்கக்கூடிய பல ஸ்டைல்களுக்கும் தாத்தா இதுதான். நடு மண்டையில் நிறைய முடியைத் தக்கவைத்துக்கொண்டு, அப்படியே குறைத்துக் குறைத்து இரண்டு பக்கங்களிலும் பின்னாலும் சுத்தமாக ஜீரோ சைஸுக்கு முடியை வெட்டிக்கொள்வது. இதிலேயே லோ, மிட், ஹை... எனப் பலவிதங்கள் உண்டு. அதனால் கல்லூரி மாணவர்கள் முதல் வங்கிக் கணக்கர்கள் வரை, எவரும் இதை வைத்துக்கொள்ள முடியும். உங்கள் வசதிக்கு ஏற்ப, தலையின் இருபுறங்களிலும் முழுமையாக மழித்துக்கொள்ளலாம் அல்லது ட்ரிம் செய்துகொள்ளலாம். மத்திய மண்டையில், மிக அதிக நீளமாகவோ அல்லது ஓரளவு நீளமாகவோ வைத்துக்கொண்டு, அதை ஒருபுறமாகப் படிய வாரிக்கொள்ளவும் இயலும்!

Sidepart

விகடன் சாய்ஸ்

கிளாசிக் ஹேர்ஸ்டைல் இது. ஒரு முடிகூட மிஸ்ஸாகாமல் ஸ்கேல் வைத்து அளந்ததுபோல வகிடு எடுத்து, படிய வாரி, பெர்ஃபெக்‌ஷன் காட்டினால் அதுதான் சைட்பார்ட். அதில் சமீபத்திய புதுமை... இரண்டு பக்கங்களிலும் முடிந்தவரை மிகக் குறைந்த அளவுக்கு முடியைக் குறைத்துக்கொள்வது. நல்லபிள்ளையாக தினமும் ஆபீஸ் போகிற அராத்துப் பையன்களுக்கு ஏற்ற ஸ்டைல் இது.
ஜெல் போட்டு படிய வாரி அலுவலகம் போய்விட்டு வந்து, ஊர் சுற்றக் கிளம்பும்போது, அதை லேசாகக் கலைத்துவிட்டால் கொஞ்சம் முரட்டு லுக் கிடைக்கும்.

டூ இன் ஒன்னாகப் பயன்படுத்தலாம். லேசான கோஹ்லி ஸ்டைல் தாடியும் வைத்துக்கொண்டால் எங்கும் அசத்தலாம்!