Published:Updated:

''எப்படி பெயர் மாற்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்!'' - சணல்குமார் சசிதரண்

''எப்படி பெயர் மாற்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்!'' - சணல்குமார் சசிதரண்
''எப்படி பெயர் மாற்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்!'' - சணல்குமார் சசிதரண்

''எப்படி பெயர் மாற்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்!'' - சணல்குமார் சசிதரண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``படத்தின் தலைப்பும், கதையும் ஒன்றோடு ஒன்றிணைந்தது.  சமூகம், பெண்களை ஒரு பக்கம் கடவுளாகக் கொண்டாடிக்கொண்டு, மறுபக்கம் எப்படி கொடூரமாக நடத்துகிறது என்பதை பேசியிருக்கிறது செக்ஸி துர்கா. எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் ஏற்படுத்தாது. எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என்று எந்த பெயரில் மாற்றினாலும் அது செக்ஸி துர்காவாகத்தான் தொடரும்.”

- ’பத்மாவத்’ திரைப்படத்திற்கும், அதில் நடித்த நடிகர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தபோது இப்படிச் சொன்னார் இயக்குநர் சனல்குமார் சசிதரன். 'ஒழிவுதெவசத்தே களி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் மாநில எல்லைகளைக் கடந்து கவனிக்கவைத்தவர் சணல்குமார் சசிதரன். இவரின் அடுத்தப்படம்தான் 'எஸ்.துர்கா.'

கோவாவில் 48 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘செக்ஸி துர்கா’வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதில் வரும் துர்கா என்ற பெயர் இந்துக்கடவுளை குறிப்பதாகவும், செக்ஸி துர்கா என்பது துர்க்கையை இழிவுப்படுத்தும் நோக்கில் உள்ளதாகவும், இதனாலேயே பாஜக ஆளும் கோவாவில் இது திரையிடப்படுவது தடுக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. படத்தின் பெயர் ‘எஸ்.துர்கா’ என மாற்றப்பட்ட பிறகும் திரையிடப்படாமல், அதற்கெதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. அதன்பிறகு, 21 இடங்களில் ஒலித்தடுப்புடன் (Mute) படத்தைத் தணிக்கை செய்திருக்கிறது சென்சார் போர்டு.

Hivos Tiger விருது உட்பட பல சர்வதேச விருதுகளைக் குவித்து, சர்ச்சைகளைச் சந்தித்த ‘எஸ்.துர்கா’ இந்த மாதம் 23-ம் தேதி வெளியாகிறது. வழக்கமான திரைப்பட விநியோக முறையைப்போல் இல்லாமல், புதிய விநியோக முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ‘எஸ்.துர்கா’ குழு. சிறு சிறு திரைநலன் சங்கங்களும், சினிமா ப்ரியர்களும் சேர்ந்து ப்ரோமோஷன் வேலைகளிலும், திரையரங்க அனுமதியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனால் ப்ரோமோஷன் தொடங்கப்பட,  பல குழுக்களை அமைத்து தெருக்கூத்து நாடகங்களில் வழியாக இப்படத்தை மக்களிடம் சேர்த்து வருகிறது கழ்சா ஃபிலிம் ஃபோரம் அமைப்பு.                                                                                                                                   

ரசிகர்களையே மூலதனமாகக் கொண்ட இந்த விநியோக முறையைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக, இத்தகைய ஆர்ட் ஃபிலிம்களுடைய போஸ்டர்களை தெருக்களில் பார்க்கமுடியாது. மெட்ரோ நகரங்களைத் தவிர, வேறு எங்கும் இத்தகைய திரைப்படங்களின் சுவடு தெரியாது. தொலைக்காட்சிகளின் தாக்கம் அதிகமடைந்ததால் நிகழ்ந்த மாற்றம் அது. ஸ்வயம்வரம், கொடியேட்டம் போன்ற கலைப்படங்களுக்கு திரளாக கூடிய கூட்டத்தின் காலத்தை நாம் இழந்துவிட்டோம். இருந்தாலும் ஆட்டம் இன்னும் முடியவில்லை. கேரளாவில், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை, சிறு சிறு குழுக்களாக, இத்தகைய கலை திரைப்படங்களின் ரசிகர்கள் ஒன்று கூடி, திரையரங்க அனுமதியை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். ’செக்சி துர்கா’வைப் பொறுத்த வரை ரசிகர்களே பங்காளர்கள். இப்படத்தின் மூலமாக வரும் வருவாயில் 10 சதவிகிதம் தொகை இக்குழுக்களுக்கு அளிக்க இருக்கிறோம்” என்றார்.

'' ’எஸ் துர்கா’ எனப் பெயர் மாற்றத்திற்கு பிறகு சர்ச்சைகள் ஓய்ந்திருக்கிறதா?''

''சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, படத்தைத் தடைசெய்ய நினைத்தார்கள். அவர்கள் பக்தர்கள் கிடையாது. இறை நம்பிக்கை கொண்டவர்களை நாங்கள் இழிவுபடுத்தவில்லை. இறைவி துர்கையையும் இழிவுபடுத்தவில்லை. நதிகளுக்கும், கடவுள்களுக்கும் பெண்களின் பெயரை வைத்துக்கொண்டு, நிஜத்தில் பெண்களை எப்படிப் பார்க்கிறது சமூகம் என்னும் கேள்வியை ‘செக்ஸி துர்கா’ எழுப்புவாள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு