Published:Updated:

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.விஜயலட்சுமி

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.விஜயலட்சுமி

Published:Updated:
ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

``டம்பு சரியில்லைன்னு கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருந்தேன். அதனால சில கேள்விகளுக்குப் பதில் தெரியாமல்கூட இருக்கலாம். பரவாயில்லையா?’’ எனக் கேட்டு ஜாலி மூடுக்குத் தாவுகிறார் எழுத்தாளர் ஞாநி

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

``ஸ்கூல் - காலேஜ்ல எல்லாம் நான்தான் ஃபர்ஸ்ட் மார்க். இப்ப பாருங்க உங்க கேள்விகளுக்கு எல்லாம் சரியா பதில்சொல்லி 100 மார்க் ஸ்கோர் பண்ணப்போறேன்’’ - உற்சாகமாகிறார் `இசையருவி' நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுமையா.

``எத்தனை கேள்விகள் இருந்தாலும் 15 நிமிஷத்துல முடிச்சுடுங்க... அதுக்கு மேல போனா நான் `பெப்பே'தான்” - கலகலக்கிறார் ’சரவணன் மீனாட்சி' கவின்.

``க்ளினிக்ல வேலையா இருந்தேன். இப்போ ஃப்ரீ. என்ன வேணும்னாலும் கேளுங்க. ஜாலியா சொல்ல ட்ரை பண்றேன்'' - இது மருத்துவர் கு.சிவராமன்

“எடக்குமடக்கா கேட்டு மாட்டிவிட்டுடாதீங்க ஜி. சிம்பிளா கேளுங்க... சூப்பரா பதில் சொல்றேன்’’ என டிட்பிட்டாகவே பேசுகிறார் `விஜய் டிவி’ நந்தினி.

“ராசாளி என்றால் என்ன அர்த்தம்?”

விடை : கழுகில் ஒரு வகை

ஞாநி : ``அது ஒரு வகையான கழுகு. இப்போ ஏ.ஆர்.ரஹ்மான் ட்யூன்போட்ட லேட்டஸ்ட் பாட்டு... சரியா?’’

சுமையா : ``ராசாளியா? புது வார்த்தையா இருக்கே... தெரியலையேங்க. சரி, நீங்க `ஆந்தைக்கு பகலில் கண்ணுதெரியுமா... நைட் கண்ணு தெரியுமா’னுலாம் கேட்க மாட்டீங்களா?'' எனச் செல்லமாகச் சிணுங்கியவரிடம் பதிலை சொன்னதும், ``அடடா... ஆமாங்க.

ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டை எப்படி மறந்தேன்?!’’ 

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

கவின்: ``ஏதோ வேற மொழியில வர்ற கெட்ட வார்த்தைபோலவே இருக்கே...'' என்றவரிடம் ``தமிழ்தாங்க’’ என்றதும், “அய்யோ... தமிழா? இதுக்கு வேற திட்டுவாங்களே...'' என
டீப் திங்கிங் மோடுக்குப் போகிறார்.

கு.சிவராமன் : ``ரஸ்தாளினு கேட்டு இருந்தீங்கனா சும்மா ரெண்டு மணி நேரம் அந்தப் பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்னனு சொல்லிருப்பேன். தமிழ் இலக்கியத்துல ஒரு வகை கழுகை ராஜாளினு சொல்வாங்க... இதானே சரியான பதில்?’’

நந்தினி : ``ராசாத்தியா? ஓ...ராசாலியா? இப்பதான் பாட்டு கேட்டேன். ஆனா அர்த்தம் தெரியலையே. ஹீரோன்னா ராசா... பொண்ணுக்கு லீயா இருக்குமோ?'' 

“ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள்?”

விடை: 33

ஞாநி : ``முதலில் ஒட்டுமொத்தமாக அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். அடுத்து 4 பேர் சேர்த்தாங்க. ஆக மொத்தம் 26 பேர்... சரியா? அட பதில் இது இல்லையா? தம்பி... அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. இன்னும் எவ்வளவு பேர் புதுசாக வருவாங்கனு பொறுத்திருந்து பாருங்க.’’

சுமையா : ``தி.மு.க 98 தொகுதிகளில் ஜெயிச்சாங்கனு மட்டும்தான் எனக்குத் தெரியும். எத்தனை மினிஸ்டர்ஸ்னு எல்லாம் தெரியாதுங்க.''

கவின் : ``அமைச்சர்கள் எல்லாரும் அரசியல் தீமுக்குக் கீழேதானே வருவாங்க. எனக்கு அரசியல் பத்தி எதுவுமே தெரியாதுங்களே. ஒரு குத்துமதிப்பா சொல்றேன்... ஒரு 45 அமைச்சர்கள் இருப்பாங்களா... இல்ல... இல்ல ரவுண்டா 30 பேர்னு எழுதிடுங்க.''

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

கு.சிவராமன் : ``ம்ம்ம்... இப்பதான் படிச்சேன். முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் 32 அமைச்சர்கள் சரியா?''

நந்தினி : தொடர்ந்து கேள்வியை இரண்டு முறை கேட்டவர், ``எத்தனை மினிஸ்டர்னுதானே கேள்வி... (யோசிக்கிறார்) 200, 300 இருப்பாங்களாங்களா? ஒரு தொகுதில 10 அமைச்சர்கள் இருப்பாங்கனு யாரோ சொன்னாங்க. ஆனா பதில் என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கே ஆர்வமா இருக்கு... சொல்லுங்களேன்?’’

“தமிழகத்தில் இப்போது எத்தனை மணி நேரம் டாஸ்மாக் இயங்குகிறது?”

விடை: 10 மணி நேரம்

ஞாநி: ``மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரைக்கும் செயல்பாடு. அப்ப 10 மணி நேரம் டாஸ்மாக் இயங்குது.’’

சுமையா: சிரித்தவர்... ``இது செம மேட்டர். டாஸ்மாக் கடை நேரத்தை காலையில் 2 மணி நேரம் குறைச்சிருக்காங்க. ஆக டோட்டலா  10 மணி நேரம் செயல்படுது. தமிழ்நாட்டுல டாஸ்மாக்கை மூடணும் என்ற கொள்கையில்தான் நான் இருக்கேன் என்பதால், இந்தப் பதில் தெரிஞ்சதுங்க.’’

 கவின்: “அய்ய்ய்.... எனக்கு பதில் தெரியுமே. 12 டூ 10. மொத்தம் 10 மணி நேரம். சரியா?”

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

கு.சிவராமன்: மனத்துக்குள்ளயே கணக்கு போட்டவர்... ``10 மணி நேரம் இயங்குகிறது. இந்த வாரம் ரொம்ப சுலபமான கேள்விகளா கேட்குறீங்களே பிரதர்.''

நந்தினி:
“என்னடா இந்தப் பொண்ணு இதுக்கெல்லாம் ஆன்சர் பண்ணுதுனு நினைச்சுடாதீங்க. அஃபீஷியலா 12 மணிநேரம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா பல இடங்கள்ல 24 ஹவர்ஸும் டாஸ்மாக் பிசியாத்தான் இருக்கு.”

“விஜயகாந்த், அன்புமணி போட்டியிட்ட தொகுதிகளில் அவர்கள் எத்தனையாவது இடம் பிடித்தார்கள்?”

விடை: அன்புமணி - 2, விஜயகாந்த் - 3

ஞாநி : ``ரெண்டு பேருமே அவங்க போட்டியிட்ட தொகுதிகளில் 5-வது இடம்தான் பிடிச்சாங்க. என்ன... பதில் சரிதானே?''

சுமையா : ``அன்புமணியும் விஜயகாந்த்தும் தோத்துட்டாங்க. அப்ப ரெண்டு பேரும் கடைசி இடத்தைத்தான் பிடிச்சிருப்பாங்க.’’

கவின்: “அவங்க எங்க போட்டியிட்டாங்கனே எனக்குத் தெரியாதே. ரிசல்ட் வந்த அன்னைக்கு நான் டி.வி-யே பார்க்கலை. அதனால யாரு ஜெயிச்சாங்க... யாரு தோத்தாங்கனு எனக்குத் தெரியாது.’’

கு.சிவராமன் : ``இந்தக் கேள்வி எனக்கு ரொம்ப ஈஸி. அன்புமணிக்கு இரண்டாவது இடம். விஜயகாந்துக்கு மூன்றாவது இடம்.''

ஒரு தொகுதிக்கு 10 அமைச்சர்கள்?!

நந்தினி: “எனக்கு தமிழ்நாட்டில் தெரிஞ்ச பார்ட்டின்னா அது தி.மு.க, அ.தி.மு.க-தான்.  அன்புமணியை எனக்குத் தெரியாது.   விஜயகாந்தைத் தெரியும். அவருதான் செம அலப்பரையைக் குடுப்பாரே...”

“ரமணனுக்கு அடுத்தபடியாக தமிழக வானிலை மையத்தின் தற்போதைய இயக்குநர் யார்?”

விடை: பாலச்சந்திரன்

ஞாநி : யோசிக்கிறார்... ``ஜெயச்சந்திரனா? இல்ல தம்பி... ஏதோ `சந்திரன்'னு முடியுமே. ஜெயச் சந்திரனா... பாலச்சந்திரனா... ஒரே குழப்பமா இருக்கு.’’

சுமையா : அதிர்ச்சியாகிறார்... ``என்னது ரமணன் சார் அதுக்குள்ள ரிட்டையர்டு ஆகிட்டாரா? இந்த விஷயம் நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். யார் வந்தாலும் ரமணன் சார் இடத்தைப் பிடிக்க முடியாது. `இனிமேல் மழை வந்தால் என்னை மாதிரி ஸ்கூல் பசங்களுக்கு, யார் லீவு குடுப்பாங்க?’னு தெரியலையே.’’

கவின்: “ஆக்சுவலா `நிலாவுல ரெண்டாவதா காலடி எடுத்துவெச்சது யாரு?’னு கேட்டா யாருக்கும் தெரியாதுல... அந்த மாதிரிதான் ரமணன் சார் போனப்புறம் அடுத்து யாரு வந்தாங்கனு நான் தெரிஞ்சுக்கலை. ரொம்ப சாமர்த்தியமாகப் பதில் சொன்னாலாம் மார்க் தர மாட்டீங்களா பாஸ்?”

கு.சிவராமன்
: ``போனவாரம்தான் டி.வி-ல பார்தேன். `ரமணன் சார் உட்கார்ந்த அதே சேர்ல பின்னாடி போட்டிருக்கும் டவலைக்கூட மாத்தாம உட்கார்ந்திருக்கார் பாலச்சந்திரன்’னு எல்லாரும் கிண்டல் பண்ணிட்டிருந்தோம்.’’

நந்தினி
: “எனக்குத் தெரிஞ்சு ரமணன் சாரே இருந்திருந்தா நல்லாயிருக்கும். அவருக்கு அடுத்து யாரு? அடடா உலகத்தில் நடக்கிற எந்த விஷயமும் எனக்குத் தெரியமாட்டேங்குதே!''