Published:Updated:

கிச்சன் கிச்சா!

கிச்சன் கிச்சா!
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கிச்சா!

பா.விஜயலட்சுமி

கிச்சன் கிச்சா!

பா.விஜயலட்சுமி

Published:Updated:
கிச்சன் கிச்சா!
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கிச்சா!
கிச்சன் கிச்சா!

ர்ணாகுளத்தைச் சேர்ந்த குட்டிப் பையன் சாரி... சாரி... குட்டி சமையல்காரர் நிகல் ராஜுக்கு வயது ஆறு. ஆனால், ‘கிச்சா டியூப்’ என்னும் யூடியூப் சேனல்வைத்து வைரல் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறான் பையன்.  கிச்சாவின்  சமையலுக்கு சர்வதேச லெவல் ரசிகர்கள்!

குட்டிக் கிச்சாவின் தந்தை ராஜகோபால் விளம்பர நிறுவனம் ஒன்றின் கிளைத்தலைவர். அம்மா ரூபியோ, மிகவும் பிஸியான கேக் தயாரிப்பாளர். அம்மாவுடன் சேர்ந்து சமையலில் ஆர்வமடைந்த கிச்சா ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு உதவிசெய்ய ஆரம்பித்து, அவனே சமைக்கவும் தொடங்கிவிட்டான். இதை விளையாட்டாக வீடியோவாக்கி வெளியிட, அது ஹிட் அடித்தது. உடனே, `போடுறா ஒரு யூடியூப் சேனலை...’ என உடனடியாக ஒரு சேனலைத் தொடங்க, இப்போது அது மெகா ஹிட்.

கிச்சன் கிச்சா!

கிச்சா குழந்தைதான் என்றாலும் விளையாட்டாகவெல்லாம் சமைக்காமல், ஒரு சிறந்த சமையலரின் நேர்த்தியோடு வீடியோக் களில் தன்னுடைய ரெசிப்பிக்களை செய்துகாட்டத் தொடங்கிவிட்டான். கரண்டி சைஸே இருக்கும் இந்தக் குட்டிப் பையன், கையில் ஸ்பூன் பிடித்து மாவு கலப்பதும், ஐஸ்க்ரீம் பீட் செய்வதும் கொள்ளை அழகு.

`ரெயின்போ இட்லி’, `ஈஸ்டர் எக்’, `தந்தூரி பேபி உருளைக்கிழங்கு’... என நீளும் ரெசிப்பி வீடியோக்கள் இவரது ‘கிச்சாடியூப்’ பக்கத்தில் பிரபலம். முதன்முதலில் இவர் செய்த ‘ஐஸ் பாப்சிகிள்ஸ்’ வீடியோவுக்கு வந்த  கமென்ட்டுகள் ஏராளம் என்று பூரிக்கிறார் தந்தை ராஜகோபால். அதுமட்டுமல்ல, கிச்சாவின் `மிக்கி மவுஸ் மாம்பழ ஐஸ்க்ரீம்’ வீடியோவைப் பெற்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அதற்காக இந்திய மதிப்பில் ஒன்றரை லட்ச ரூபாயை கிச்சாவுக்கு அளித்துள்ளது. எந்த ஹோட்டலுக்குப் போனாலும் அங்குள்ள சமையலைறைக்குச் சென்று, செஃப்களுடன் உற்சாகமாக உரையாடி, நைஸாக சமையல் சீக்ரெட்ஸ் கற்றுக்கொள்வது இந்த கிச்சாவின் சேட்டைகளில் ஒன்று.

கிச்சன் கிச்சா!

‘`இப்போதே அவன் பொம்மைகள் கேட்காமல். பேடிஎம் அக்கவுன்ட் ஆரம்பித்துத் தரச் சொல்கிறான். அப்போதுதான், அவனுக்கு பிடித்தவற்றை ஆன்லைனில் வாங்கிக்கொள்ள முடியுமாம்’’ என்று சிரிக்கிறார் கிச்சாவின் அப்பா. 

கிச்சாவின் வீடியோக்களை மிஸ் பண்ணிடாம பார்க்கணும்னா இந்தாங்க புடிங்க லிங்க்... https://www.youtube.com/channel/UCSPG2M54ReM1Pb9VIzkml8Q