Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

 `விகடன் தடம்’ இலக்கிய இதழ். தமிழின் நவீன இலக்கிய முயற்சிகளை திரளான மக்களிடம் கொண்டுசேர்க்கிற விகடனின் அர்த்தமுள்ள முன்னெடுப்பு. `விகடன் தடம்’ முதல் இதழில் வாசிக்க என்னென்ன இருக்கு?

விகடன் சாய்ஸ்

கவிஞர் விக்ரமாதித்யன் என்ற ஆளுமையின் பரிமாணங்களைப் பற்றி கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்...

``விக்ரமாதித்யனிடம் ஒரு சகாயம் உண்டு. அடிபொடியிலிருந்து யார் வேண்டுமானாலும் நிகராக நின்று மல்லுக்கட்ட முடியும். மல்லுக்கட்டி கட்டி இலக்கியம் கற்க முடியும். பிற படைப்பாளிகளிடம் எப்போதும் இந்தச் சகாயம் கிட்டும் என்று சொல்வதற்கில்லை.''

விகடன் சாய்ஸ்

நூற்றாண்டு கொண்டாடும் தமிழ்ச் சிறுகதையின் பயணம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையில்...

``முற்போக்கு முகாம்களில் தொடங்கி அங்கு இருந்து நவீனத்துவப் படைப்புகளை நோக்கி வந்தவர் சுந்தர ராமசாமி. தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான ஜெயகாந்தன், புதுமைப்பித்தனின் `பொன்னகரம்' என்ற கதையை தன் முதல் ஊற்றாகக் கொண்டிருக்கிறார்.’’

விகடன் சாய்ஸ்

இந்தியா தொடங்கி இசை,  இலக்கியம் என உரையாடும் பிரபஞ்சனின் 360டிகிரி பேட்டியில்...

``உங்களையும் இந்தியாவையும் வளர்ச்சியில் ஒப்பிட்டுச் சொல்ல முடியுமா?’’

``இந்தியா, சரியாகப் பேணி வளர்க்கப்படாத குழந்தை. நான் பேணி வளர்க்கப்பட்டவன். இந்தியாவின் வளர்ச்சி கோளாறான வளர்ச்சிதான். அதனால்தான் இன்று மதவாதக் கருத்துக்கள் இவ்வளவு தீவிரம் அடைந்திருக்கின்றன. அடிப்படை மனிதன் தன்னிறைவு அடையவே இல்லை. அப்படி நடந்திருந்தால் கடவுளின் மீது இவ்வளவு வெறி வரவேண்டிய அவசியமே இல்லை.''

விகடன் சாய்ஸ்

நடிகர் வடிவேலு தமிழ் மக்களின் மீது உருவாக்கிய தாக்கம் குறித்து சுபகுணராஜனின் ஆய்வு...

பெரும்பாலும் மதுரை ஸ்லாங்கில் பேசியவர் வடிவேலு. மதுரைப் பிரதேசத்தின் உடல் மொழியையும் ஒலி எழுப்புதல் முறைகளையும் இயல்பாகவும் லாகவமாகவும் கையாண்டு, அந்தச் சொற்பிரயோகங்களுக்கு தமிழகம் தழுவிய அங்கிகாரத் தையும் பேச்சுவழக்கின் பகுதியாக மாறும் வாய்ப்பையும் உருவாக்கினார்!

விகடன் சாய்ஸ்

அரசியலையும் சமூகச் சூழலையும் பகடிசெய்யும் ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதையில்...

``சுடுகாடு மாதிரி ஒரு இடத்துல கூட்டம் நடத்துறதுக்கு, இனிமேல் சுடுகாட்டிலேயே கூட்டம் நடத்திக்கலாம்.''

விகடன் சாய்ஸ்

புலம்பெயர் வாழ்வின் துயரங்களை அதன் வலியோடு சொல்லும் சயந்தனின் அனுபவப்பகிர்வில்...

நிலத்தைப் பிரிவதன் முதற்சோகம், பிறந்து வளர்ந்த தன் தேசத்தை மறுபடியும் கண்ணால் காண முடியாது என்ற துயரத்தில்தான் உருவாகிறது. அடைக்கலம் தேடிய நாடுகளின் வதிவிடச் சட்டங்களினாலும், ஈழத்தின் போர்ச்சூழலினாலும் ஈழத்தமிழர் களுக்கு நாடு திரும்பும் ஒரு நாள் பற்றிய எந்த நம்பிக்கைக் கீற்றும் இருக்கவில்லை!

விகடன் சாய்ஸ்

நம் பண்பாட்டுச் சித்திரங்களை ஆராயும் சு.வெங்கடேசனின் `கதைகளின் கதை’ தொடரில்...

தமிழர் பயன்படுத்திய வளரி ஆயுதம் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்கள் பயன்படுத்தும் பூமராங் போன்றது. உலகில் இந்த இரு மக்கள்தான் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்து கிறார்கள் என்று முதலில் கருதிய ஐரோப்பியர்கள், பின்னர் இந்தக் கருத்தை மாற்றிக்கொண்டனர். 18-ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைப் பற்றி ஆய்வுசெய்த சவைல்ட் கென்ட், தனது நூலில் ` `வளரி' ஆசியப் பகுதியில் இருந்து முதன்முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தங்கியவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்கிறார்!

விகடன் சாய்ஸ்

அம்பேத்கரின், `இந்தியாவில் சாதிகள்' நூலுக்கு இது நூற்றாண்டு. அந்தப் புத்தகத்தை முன்வைத்து சுகுணாதிவாகர் எழுதிய கட்டுரையில்...

`கணவனை இழந்த பெண்ணைப் போல மனைவியை இழந்த ஆணும் சாதிக் குழுவுக்குச் சவாலாக இருந்தான். பெண்களைப் போல ஆண்களை உடன்கட்டை ஏற்றிவிட முடியாது. உடன்கட்டை ஏறாததற்கு அவன் ஆணாக இருக்கும் காரணமே போதுமானது’ என்று சொல்லும் அம்பேத்கர், மேலும் `ஓர் ஆணை எரித்துவிட்டால், சாதிக் குழு வலிமையான ஓர் உயிரியை இழந்துவிடுகிறது என்பது காரணம்’ என்றார். எனவே, `மனைவியை இழந்த ஆணுக்கு, பருவ வயதுக்கு வராத பெண் குழந்தையை திருமணம் செய்துவைத்தனர். குழந்தைத் திருமணம் இப்படித்தான் உருவானது’ என்பது அம்பேத்கர் முன்வைத்த ஆய்வு.