Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• 2016-ம் ஆண்டு ஃப்ரெஞ்சு ஓபன் டென்னிஸில் எல்லோரும் ரசித்த சுவாரஸ்ய வெற்றி, லியாண்டர் பயஸ்-ஹிங்கிஸினுடையது. மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடியான சானியா -ஹிங்கிஸ் ஜோடி மூன்றாவது சுற்றிலேயே வெளியேறிவிட, கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டியில் சானியாவும் ஹிங்கிஸும் எதிர் எதிராக மோதிக்கொண்டனர். வெற்றி, பயஸ்-ஹிங்கிஸ் ஜோடிக்கு. கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் வென்றி ருக்கும் 10-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. சக்சஸ் பயஸ்!

இன்பாக்ஸ்

• டெல்லிக்கு அடுத்து பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்ப்புகளை எகிறவைத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. 117 சட்டமன்ற உறுப்பினர்கள்கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல். `பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான ஷிரோன்மணி அகாலி தள் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதால், ஆம் ஆத்மி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்' என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. `பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யாராக இருக்க வேண்டும்?' என்ற கேள்விக்கு, பெரும்பாலான மக்கள் `அர்விந்த் கெஜ்ரிவால்' என்றே சொல்லியிருக்கிறார்கள். பல்லே... பல்லே!

இன்பாக்ஸ்

•   ஒலிம்பிக்கில் 18 தங்கப்பதக்கங்கள் உள்பட 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கும் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், அப்பா ஆகியிருக்கிறார். முன்னாள் மாடல் அழகியான நிக்கோல் ஜான்சனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஃபெல்ப்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தீவிரமாகத் தயாராகிவரும் நிலையில், மகன் பிறந்திருப்பது எனக்குப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. இரண்டு மைக்கேல் ஃபெல்ப்ஸ்கள் சேர்ந்திருப்பதுபோல் உணர்கிறேன். இந்த ஒலிம்பிக்கில் நான் வாங்கப்போகும் தங்கப்பதக்கங்கள் எல்லாம் என் மகன் பூமர் ராபர்ட்டுக்குத்தான்’ எனச் சிலிர்க்கிறார் ஃபெல்ப்ஸ். தங்கமகன்!

இன்பாக்ஸ்

• மாஸ்டர் பிளாஸ்டருன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் மெகா ஸ்டார். `இந்தியன் சூப்பர் லீக்' கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் கேரள அணியின் உரிமையாளர் சச்சின். இவருடன் கேரள அணியின் முதலீட் டாளர்களாக சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோரும் இணைந் திருக்கின்றனர். ‘கேரள அணிக்கு மும்பையைச் சேர்ந்த நானும், ஆந்திராவைச் சேர்ந்த சிரஞ்சீவி தலைமையிலான டீமும் உரிமையாளர் களாகி இருக்கிறோம் என்பது கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கும். நாங்கள் சர்வதேச தரத்தி லான கால்பந்து வீரர்களை உருவாக்கு வதை மட்டுமே குறிக் கோளாகக்கொண்டு செயல்படுகிறோம். இதன்மூலம் லாபம் சம்பாதிப்பது நோக்கம் அல்ல’ என்கிறார் சச்சின் டெண்டுல்கர். லெட்ஸ் ஃபுட்பால்!

இன்பாக்ஸ்

• தமிழில் `இது நம்ம ஆளு'போல இந்தியில் `ஜக்கா ஜஸூஸ்'. டூ விட்டுப் பிரிந்த ரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் ஜோடி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 2014-ம் ஆண்டு தொடங்கியது.
ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ரன்பீருக்கும்-கத்ரீனாவுக்கும் முட்டிக்கொள்ள, படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. மீண்டும் சமசர ஒப்பந்தத்துக்குப் பிறகு 2015-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஷூட்டிங் மீண்டும் முடங்கியது. ‘இந்தப் படத்தில் வரும் காதல் காட்சிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நடிக்க முடியும்’ என இருதரப்புமே இயக்குநர் அனுராக் பாசுவிடம் சொல்லி ஓ.கே வாங்க, இப்போது மீண்டும் ஷூட்டிங் ஆரம்பம். காதல் கசக்குதய்யா!

இன்பாக்ஸ்

• இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எப்போதும் பிடித்தது `டான்ட்' எனப் படும் விலை குறைவான பெங்காலி காட்டன் புடவைகள்தான். கால்களுக்கு ரப்பர் செருப்பு, தோள் பை என்ற அவரது அடையாளம் மாறவே இல்லை. ‘சொந்த வாழ்க்கையில் எளிமையைக் கடைப்பிடிப்பதால் தான், ஆட்சியையும் கட்சியையும் எளிமையானவர்களுக்கு, எளிமையாக என்னால் நடத்த முடிகிறது’ என்கிறார் மம்தா. வங்கத்து ராணி!

• ‘பாகுபலி’, ‘இஞ்சி இடுப்பழகி’ படங்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா வெயிட் போட்ட அனுஷ்கா, இப்போது மொத்தமாக 18 கிலோ எடை குறைந் திருக்கிறார். `நான் யோகா டீச்சர் என்பதால் எடையைக் குறைப்பதும் கூட்டுவதும் எனக்கு ரொம்ப சாதாரணம்' என்கிறார் ஸ்லிம் அனுஷ்கா. சைஸ் ஸீரோ!

இன்பாக்ஸ்

•   நடித்துக்கொண்டே படிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், படித்துக் கொண்டே நடித்து மருத்துவ டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் சாய் பல்லவி. ‘ப்ரேமம்’ படத்தில் மலர் டீச்சராக உருக வைத்த சாய் பல்லவி, ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து டாக்டராகி இருக்கிறார். ‘சின்ன வயதில் இருந்தே யார் கேட்டாலும் `டாக்டராகப்போறேன்' என்றுதான் சொல்வேன். இடையில் நடிகையானாலும் படிப்பை நிறுத்தாமல் டாக்டர் பட்டம் வாங்கியதில் ரொம்ப ஹேப்பி’ என்கிறார் டாக்டர் சாய் பல்லவி. டீச்சர் இப்போ டாக்டர்!