தன்னம்பிக்கை
Published:Updated:

அழகுக்கு அஸ்திவாரம்... குழந்தைப் பருவத்திலேயே!

அழகுக்கு அஸ்திவாரம்...  குழந்தைப் பருவத்திலேயே!
பிரீமியம் ஸ்டோரி
News
அழகுக்கு அஸ்திவாரம்... குழந்தைப் பருவத்திலேயே!

பியூட்டி

அழகுக்கு அஸ்திவாரம்...  குழந்தைப் பருவத்திலேயே!

ங்கள் குழந்தைகள் வளர்ந்த பின்னும் சருமத்தின் வனப்பு இழக்காமல் இருக்க, குழந்தைப் பருவத்தில் செய்ய வேண்டிய அழகுப் பராமரிப்புகளை சென்ற இதழின் தொடர்ச்சியாக, இங்கே வழங்குகிறார், சென்னை, ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக்.

5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு...

கேசம் 

 குழந்தைகளுக்கு முடியை நீளமாக வளர்ப்பதைவிட, குட்டையாக வெட்டிவிடுவதுதான் பராமரிக்க எளிமையாக இருக்கும்... அதன் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

 வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, கீழாநெல்லி, அவுரி இலை இவை அனைத்திலும் தலா ஒரு கைப்பிடி எடுத்து, நன்கு அரைத்து, அத்துடன் 100 கிராம் கடுக்காய் பொடி கலந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். 5, 6 வடைகளை ஒரு பாட்டிலில் உதிர்த்து, அதில் 100 மில்லி ஆலிவ் ஆயில், 50 மில்லி பாதாம் ஆயில் சேர்த்து, மூன்று நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். இதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டுக் குளிக்கவைக்க, கேசம் போஷாக்குடன் இருக்கும்.

சருமம்

ஒரு துண்டு மஞ்சள்பூசணிக் காயின் சதைப்பகுதியை தேவையான அளவு பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் 2 ஸ்பூன் ஆவாரம் பூ பொடியைக் கலந்து, வார இறுதி நாட்களில் குழந்தையின் முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்துக் குளிக்கவைக்க, சருமம் மினுமினுப்பதுடன் நிறமும் கூடும்.

அழகுக்கு அஸ்திவாரம்...  குழந்தைப் பருவத்திலேயே!

10 முதல் 12 வயது குழந்தைகளுக்கு...

கேசம்

10 செம்பருத்தி பூக்களை அரைத்து அதனுடன் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் பனை வெல்லம்/நாட்டுச் சர்க்கரை  இவை அனைத்தையும் கலந்து `ஹேர் பேக்' செய்யவும். ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயை கேசத்தில் தடவிய பின்னர், இந்த `ஹேர் பேக்'கை தடவி அரை மணி நேரம் ஊறவைத்து அலசவும். வாரம் ஒரு முறை இதை தொடர்ந்து செய்துவர, குழந்தைகளுக்கு மன அழுத்தம் குறைவதுடன் அதனால் ஏற்படும் இளநரை நீங்கும்; பொடுகுத்தொல்லையும் நீங்கும்.

சருமம்

எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பதனால் ஏற்படும் கருவளையம் நீங்க, ஒரு டம்ளர் தண்ணீரில் 50 கிராம் க்ரீன் தேயிலை தூள் சேர்த்து அரை டம்ளராக சுண்டும்வரை கொதிக்கவிடவும். இதை ஆறவிட்டு வடிகட்டி, அதனுடன் 15 மில்லி லோட்டஸ் ஆயில் அல்லது 10 மில்லி விளக்கெண்ணெய் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தினமும் இரவு, பஞ்சை மெல்லிய வட்டமாகச் செய்து, இக்கலவையில் தொட்டு கண்களுக்கு மேல் மாஸ்க்போல வைத்துவிட்டு குழந்தைகளைத் தூங்கவைக்கவும். கருவளையம் குறைந்து, கண் எரிச்சல், சுருக்கங்கள் நீங்குவதுடன் கண்கள் ஒளிரும்.

 இந்துலேகா.சி