Published:Updated:

ஆபீஸ்பாயைக்கூட `லட்சாதிபதி' ஆக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

ஆபீஸ்பாயைக்கூட `லட்சாதிபதி' ஆக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

ஆபீஸ்பாயைக்கூட `லட்சாதிபதி' ஆக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

ஆபீஸ்பாயைக்கூட `லட்சாதிபதி' ஆக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

ஆபீஸ்பாயைக்கூட `லட்சாதிபதி' ஆக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

Published:Updated:
ஆபீஸ்பாயைக்கூட `லட்சாதிபதி' ஆக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

`சிறந்த பணியிடம் எது?' என்ற கேள்வின் அடிப்படையில், இளைஞர்கள் பணிபுரிய விரும்பும் நிறுவனங்களின் பட்டியலை லிங்ட்இன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவன உறுப்பினர்கள் 50 கோடி பேரிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் சேர விரும்பும் நிறுவனங்கள், பணியாளர்களை நடத்தும் தன்மை, பணியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது, பணிப் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் அமேஸான் நிறுவனம், முதல் இடத்தைப் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இரண்டாவது இடத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. சேல்ஸ்ஃபோர்ஸ், டெஸ்லா, ஆப்பிள், ஆரக்கிள், காம்சாட், வால்ட் டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

லிங்ட்இன் நிறுவன ஆய்வில், இந்தியாவைப் பொறுத்தவரை, மிக முக்கியமான ஆச்சர்யத் தகவலும் உண்டு. `இந்தியாவில் எந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு விப்ரோ, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி என கண்ணை மூடிக்கொண்டு சொல்லாமல், ஃபிளிஃப்கார்ட், பேடிஎம், டைரக்டி என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனங்களையே இளைஞர்கள் விரும்பி `டிக்' அடித்துள்ளனர். பெரிய பிராண்டு நிறுவனங்களில் பணிபுரிவது கௌரவம் என்ற நிலை மாறியுள்ளதையே இது காட்டுகிறது.

தங்கள் திறமைக்கு எங்கு உரிய விலை அளிக்கப்படுகிறதோ... அந்த நிறுவனங்களில் பணிபுரியவே இளைஞர், இளைஞிகள் விரும்புகின்றனர். அந்த வகையில்,  ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டைரக்டி, ஃபிளிப்கார்ட் மற்றும் பேடிஎம்-மின் தாய் நிறுவனமான `ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனங்கள் இந்தியப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியாவில் அமேஸான் நிறுவனத்தால் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், டைரக்டி நிறுவனம் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. இந்த முறை முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 1998-ம் ஆண்டுதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இணையவழி சேவை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனத்துக்கு, உலகம் முழுக்க 90 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. டைரக்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் மொத்த மதிப்பு மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்மேல். ஆண்டுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டும் இந்த நிறுவனத்தில், 1,500 பேர் பணியாற்றுகிறார்கள்.

இரண்டாவது இடத்தில் உள்ள ஃபிளிப்கார்ட்டில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம் இது. ஃபிளிப்கார்ட் நிறுவனமும் திறமையுள்ள ஊழியர்களைத் தக்கவைக்க லாபத்தில் பங்கு அளிக்கிறது. மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள பேடிஎம் நிறுவனத்தில், ஊழியர்களின் திறமை மட்டும்தான் பேசும். சீனியாரிட்டி, பதவி எல்லாம் இங்கு முக்கியமல்ல.

திறமைமிகுந்த ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கும் உண்டு. சம்பளம், போனஸ் எல்லாமே அள்ளிக் கொடுக்கிறது.  ஊழியர்களுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை employee stock ownership plan  திட்டத்தின்படி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 200 பேடிஎம் ஊழியர்கள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர். இதில் 25 பேர் வரை, 7 கோடி ரூபாய் வரை லாபம் பெற்றுள்ளனர். பேடிஎம் நிறுவனத்தின் கனடா நாட்டுத் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிந்தர் தக்கார், 40 கோடி ரூபாய் சம்பாதித்தார். ஆபீஸ்பாய் ஒருவருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. 

இனிமேலும் பாரம்பர்யம், கௌரவம் எனப் பார்த்துக்கொண்டிருக்காமல், ஸ்டார்ட்அப் கம்பெனிகளில் புகுந்து திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தால், நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!