Published:Updated:

ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

Published:Updated:
ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

மிகப் பிரமாண்டமாக, பல கோடிகளை செலவிட்டு நடத்தப்படும் திருமணத்துக்கு, ஆங்கிலத்தில் ‘பிக் ஃபேட் வெட்டிங்’ (Big Fat Wedding) என்பார்கள். அப்படி ஒரு திருமணத்தை வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். இந்தியாவின் பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், ‘ரோஸி புளு’ என்கிற பிரபல வைர நிறுவனத்தின் உரிமையாளரான ரசூல் மேத்தாவின் மகள், ஷ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. 
மார்ச் 24-ம் தேதி, கோவாவின் ஐந்து நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற நிச்சயார்த்தத்தில், மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். ஆகாஷ் அம்பானியும் ஷ்லோகா மேத்தாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். குடும்ப நண்பர்கள் என்றும் கூறலாம். நீடா அம்பானிக்குச் சொந்தமான 'திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளி'யில்தான் இருவரும் படித்தார்கள். ஷ்லோகா மேத்தாவைப் பற்றிய சில சுவாரஸ்ய துளிகள் இங்கே... 

*1990 ஜூலை 11-ம் தேதி பிறந்த ஷ்லோகா, ரசூல் மேத்தாவின் இளைய மகள். இவருக்கு விராஜ் மேத்தா என்ற சகோதரனும், தியா மேத்தா என்ற சகோதரியும் இருக்கின்றனர். 

*அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழத்தில் மானுடவியல் (Anthropology) படித்துவிட்டு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிட்டிகல் சயின்ஸில், சட்ட முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறார். 

* ரசூல் மேத்தாவும், விராஜ் மேத்தாவும் சேர்ந்து வைர நிறுவனத்தைப் பார்த்துக்கொள்கின்றனர். இவரின் தாய், மோனா மேத்தாவும், தங்கை தியாவும் நகைகள் வடிவமைப்பை கவனித்துக்கொள்கின்றனர். ஷ்லோகா, ரோஸி புளுவின் தொண்டு நிறுவனமான, 'ரோஸி புளு ஃபவுண்டேஷனின் இயக்குநராக 2014-ம் ஆண்டு முதல் பதவி வகிக்கிறார். 

* சமூக சேவையில் ஆர்வமுள்ள ஷ்லோகா, ‘ConnectFor' என்ற தன்னார்வலர் அமைப்பையும் நடத்திவருகிறார். 

* பயணம் செய்வது மற்றும் பாடல்கள் கேட்பது, ஷ்லோகாவின் விருப்பமான பொழுதுபோக்கு. 

* ஒருமுறை வைர பிசினஸ் பற்றி ஷ்லோகாவிடம் கேட்டபோது, “எனக்கு பிசினஸில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. பெண்களுக்கு வைர வியாபாரம் ஒத்துவராது என்று நினைக்கிறேன். ஒன்று, அவர்கள் நகை வடிவமைப்பாளராக மாறிவிடுவார்கள், அல்லது மனித வளத்துறைக்கு வேலை செய்வார்கள். ஒரு வடிவமைப்பாளர் ஆவதற்கான கற்பனைதிறன் என்னிடம் இல்லை. வைர வியாபாரத்தில் ஈடுபடுவது பற்றி நான் நினைத்தும் பார்த்ததில்லை' என்றார். 

* ஆகாஷூம் ஷ்லோகாவும் சுவிட்சர்லாந்தில் உள்ள Gstaad என்ற ரிசார்ட் நகருக்கு விடுமுறையில் சென்றுவந்தனர் என்று கூறப்படுகிறது. 

* ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் இயக்குநராக இருக்கிறார். 

* நிச்சயார்த்தத்துக்குப் பிறகு இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மும்பையில் உள்ள பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிப்பட்டனர். 

இவர்களின் திருமணம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துகளும் வெளிவந்துள்ளன. இது, இவர்களின் வியாபார உத்தி என்று சிலரும், அம்பானி தன் பிசினஸை விரிவுபடுத்துவதற்குச் செய்த திட்டம் என்றும் கருத்துக்கள் பரவிவருகின்றன. இதைப் பற்றி பெரியதாக அலட்டிக்கொள்ளாமல், ஆகாஷும் ஷ்லோகாவும் அமைதி காத்துவருகின்றனர். 

டிசம்பரில் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தை, மும்பையிலுள்ள ஒப்ராய் நட்சித்தர ஹோட்டலில் ஐந்து நாள்கள் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.