Published:Updated:

ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

Published:Updated:
ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகைதரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, இலவச பேட்டரி கார் சேவையை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 

ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பேட்டரி கார் சேவை!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பல்வேறு தரப்பினரும் வருகைதருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். திங்கள் கிழமைகளில்,  குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களின் குறைகளைத் தெரிவிக்க, சுமார் ஆயிரம் பேர் வருகைதரும் நிலையில், பிற நாள்களில், இந்த வளாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கும் ஏராளமான மக்கள் வருகைதருகிறார்கள். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி, நடந்துவருவதற்குச் சிரமம் அடைகிறார்கள். அதைத் தவிர்க்க, பேட்டரி கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதைத் தொடங்கிவைத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துவந்தார். பின்னர், ’’தினமும் இந்த அலுவலகத்துக்கு 250 முதல் 500 பேர் வருகைதருகிறார்கள். திங்கள்கிழமைகளில் 700 முதல் 1000 பேர் பல்வேறு காரணங்களுக்காக வருகிறார்கள். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே சக்கர நாற்காலி வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அருகில் இருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு நடந்துவர முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகிறார்கள். அவர்களின் சிரமத்தைக்  குறைக்க, தற்போது பேட்டரி மூலம் இயங்கும் இலவச கார் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இலவச சேவையை முதியோரும் வயதானவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதற்காக ரூ.5.50  லட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வருவதுடன், மீண்டும் அவர்களை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுபோய் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தனி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு, அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இந்தச் சேவை நடைபெறச் செய்துள்ளோம். முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.