Published:Updated:

வளைஞ்சு கொடு...பயிற்சி எடு !

சிகையலங்காரத் திருவிழாஎஸ்.ஷக்தி படங்கள்:கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

வளைஞ்சு கொடு...பயிற்சி எடு !

சிகையலங்காரத் திருவிழாஎஸ்.ஷக்தி படங்கள்:கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

Published:Updated:
##~##

அல்ட்ரா மாடர்ன் விஷயங்களை அப்டேட் செய்வதில் சென்னை, மும்பை, பெங்களூருக்குப் போட்டியாகக் களத்தில் நிற்கிறது கோவை.   அதற்குச் சாட்சியம், ரேஸ் கோர்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ள பியூட்டி பார்லரின் தொடக்க நாள் அன்று நடத்தப்பட்ட கேட் -வாக் ஷோ.

தலை அலங்காரத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஷோ, சிம்பிள் ப்ளஸ் ஷார்ப். தலைமுடி பற்றியதாலோ என்னவோ காஸ்ட்யூம்கூட 'ப்ளாக்’ கான்செப்ட்தான். ஒரு மழை நேரத்து மாலையில் நடந்த இந்த ஷோ, ரேஸ் கோர்ஸ் ஏரியாவைச் சூடாக்கிவிட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்ட்டி லுக், லாங் ஃப்ரீ, ஸ்மார்ட் ஸ்பைக், கேஷ§வல் ஈவ்னிங் என்று விதவிதமான சிகை அலங்காரத்தில் வந்த கேரளத்து மாடல்கள் சிலிர்க்கவைத்தார்கள். 'நாங்க ரொம்ப பிஸி பாஸு’ என்று ஃபிலிம் காட்டிய மாடல்களை வழிமறித்துச் சில நிமிடங்கள் கடலை போட் டோம். ''கேரள மண்ணுக்குப் பக்கத்துல இருக்கிறதால கோவை பொண்ணுங்களுக்கும் ஆரோக்கியமான தலைமுடி இருக்குது. ஆரோக்கியமான தலைமுடி அமையறது முக்கியம் இல்லை. அதைப் பராமரிக்கிறதுல தான் விஷயமே அடங்கியிருக்கு.

வளைஞ்சு கொடு...பயிற்சி எடு !

'நானும் ஷாம்பு போட்டுக் குளிக்கிறேனே’னு சீப்பா கிடைக்கிற ஷாம்புகளைப் பயன்படுத்தி தலைமுடியைக் கெடுத்துக்கக் கூடாது. காஸ்ட்லியா இருந்தாலும் தரமான ஷாம்புவைப் பயன்படுத்த ணும். நாம சம்பாதிக்கிறதுல கொஞ்சம் பணத்தை நம்ம தலையில கொட்டிக்காம வேற எங்கே கொட்டணும் சொல்லுங்க?

வளைஞ்சு கொடு...பயிற்சி எடு !

எங்களை மாதிரி புரொஃபஷனல் மாடல்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஹேர் ஸ்டைலை மாத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் சாஃப்ட், ரஃப், ஈரப் பதம்னு ஒவ்வொரு கண்டிஷன்ல ஹேர் இருக்கணும். இது எல்லாத்துக்கும் வளைஞ்சு கொடுக்கணும்னா தினமும் தலைமுடிக்குனு சில பயிற்சிகள் இருக்கு. கெமிக்கல்ஸ் எதுவும் யூஸ் பண்ணாம செம்பருத்தி, தேங்காய் எண்ணெய், பால், மருதாணி இது மாதிரி இயற்கையான பொருட் களைத் தேய்ச்சு தினமும் ஒரு மணி நேரம் தலைமுடியைத் தயார் பண்ணுவோம். அப்பதான் இது மாதிரியான ஃபேஷன் ஷோக்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஹேர் ஸ்டைல் மாத்தணும்னாலும் முடி வளைஞ்சு கொடுக்கும்.

வளைஞ்சு கொடு...பயிற்சி எடு !

ரோம், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் இருக்கு. ஆனா, செம காஸ்ட்லி. ஒரு மாசம் கோர்ஸுக்கே லட்சக்கணக்கில் செலவாகும். அந்த கோர்ஸ் கத்துக்கிட்டா ஒரு மணி நேரத் துல 20 விதமான கலரிங்ல 20 விதமான ஹேர் ஸ்டைல்கூட மாத்தலாம். அதே சமயம், தலைமுடியும் பாதிக்காது. நம்ம நாட்டுல அந்த அளவுக்கு ஃபேஷன் வளரலை. அதனால நமக்கு அது தேவையும் இல்லை. இருந்தாலும், நாங்க ஆன் - லைன்ல பார்த்து ஓரளவு தெரிஞ்சுக்குவோம்.

வளைஞ்சு கொடு...பயிற்சி எடு !

இப்ப மிடில் கிளாஸ் இல்லத்தரசிங்ககூட அக்கறையா பியூட்டி பார்லர் வந்து தங்களோட முக அமைப்புக்கும் நிறத்துக்கும் தகுந்தபடி ஹேர் டிரீட்மென்ட் எடுத்துக்குறாங்க. இது நல்லதுதான். ஆனா, தரமான பார்லரா போகணும். அங்க யூஸ் பண்ற புராடெக்ட்டும் தரமானதுதானானு உறுதிப்படுத் திக்கணும். மத்தபடி தினமும் வீட்டுல இயற்கையான பொருட்களைக் கொண்டு முடியைப் பராமரிச்சாலே போதும்'' என்று டிப்ஸ்களைஅள்ளி விட்டார்கள்.

நீங்க சொன்னா கேட்டுக்குவோம்!