Published:Updated:

சங்கீதம்...

சாந்தம் தரும்...ஊக்கம் தரும் !க.நாகப்பன் படங்கள்: ஜெ.தான்யராஜு

சங்கீதம்...

சாந்தம் தரும்...ஊக்கம் தரும் !க.நாகப்பன் படங்கள்: ஜெ.தான்யராஜு

Published:Updated:
##~##

நம் கலை, கலாசாரத்தை இன்றைய தலைமுறைக்குக் கடத்தும் கலை அனுபவமே 'ஸ்வானுபவா’. புல்லாங்குழல், யக்ஷகானா, தேவார இசை, வயலின், பரதம், வில்லுப்பாட்டு, கருத்தரங்கம் என கலாக்ஷேத்ராவில் கடந்த வாரம் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கலை, கலாசாரத் திருவிழாவில் இருந்து...

முதல் நிகழ்ச்சி கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லிசை. 'தந்தனத்தோம்...’ பாடி நிகழ்ச்சியைத் தொடங்கியவர், காந்தி, கலாம், லிங்கன், சீசர், சாக்ரடீஸ், புராண நீதிக் கதைகள், பாரதி வாழ்க்கைப் பயணம் எனப் பல தளங்களில் பாட்டுடன் பயணித்தார். 'மனிதனைத் திருத்த இசை ஒன்றே போதும். இசை, நிழலில் வளர்க்கப் படும் குரோட்டன்ஸ் செடி அல்ல; மூலிகை. உயிரைக் காக்கும், துன்பம் போக்கும்’ -அவரின் பாடல்கள் தத்துவமும் நகைச்சுவையும் அருவி போல் ஓடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கீதம்...

அடுத்து, 'இன்றைய சினிமா, நம் பெண்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதா?’ என்ற கருத்தரங்கம். குஷ்பு, ரோகிணி, எழுத்தாளர் அ.மங்கை எனப் பலர் பேசினர். ''இன்று ரெண்டு மூணு பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டுப் போறது என்ற அளவிலேயே ஹீரோயின் கேரக்டர்கள் உருவாக்கப்படுது. 'களவாணி’, 'அங்காடித் தெரு’, 'தெய்வத் திருமகள்’, 'எங்கேயும் எப்போதும்’, 'வாகை சூட வா’னு ஓரிரு படங்கள் நம்பிக்கை தருது!'' என்றார் குஷ்பு. அடுத்து வந்த ரோகிணி, ''இங்க குழந்தைகள் அதிகமா இருக்காங்க. ஆனா, அவங்களுக்கான படங்கள் வருவதே இல்லை. சினிமாவில் காதலிக்க மட்டுமே பெண் தேவைப்படுகிறாள். அரசியல், பொருளாதாரம்னு அவங்க பங்களிப்பைச் சொல்வது இல்லை. டிரெஸ் மூலமா ஹீரோவை ஈர்க்கும் ஸ்டீரியோ டைப் பெண்களாக மட்டுமே அவர்கள் சித்திரிக்கப்படுகிறார் கள்'' என்றார். ''சினிமாவில் பெண்களின் உடை, பணிவு, ஒழுக்கம், கற்பு குறித்த மதிப்பீடுகள் இன்னமும் மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. அதேபோல் விளிம்பு நிலை ஆண்களைச் சித்திரிக்கும் தமிழ் சினிமா, ஏன் பெண்களையும் அவ்வாறு சித்திரிக்க மறுக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார் எழுத்தாளர் மங்கை.

சங்கீதம்...

ஸ்வானுபவா அமைப்பின் நிறுவனர் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, ''சங்கீதம் சாந்தம் தரும். ஊக்கம் தரும். நல்லன எல்லாம் தரும். அந்த அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல  ஆர்வமுள்ள இளைஞர்களைக்கொண்டு நான்காம் ஆண்டாக இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். நம் கலாசாரம், கலைகளை மாணவர்களுக்கு பாடமாச் சொல்லாமல், நிகழ்ச்சியா சொல்லும் போது, அவர்களுக்கு எளிதாகப் போய் சேரும்.  இதில் 50 மாணவர்களின் உழைப்பு இருக்கிறது. சென்னையைத் தொடர்ந்து டெல்லியிலும் மூன்று நாட்கள் இந்த விழாவை நடத்த உள்ளோம்'' என்கிறவரின் குரலில் அத்தனை உற்சாகம்.

சங்கீதம்...
சங்கீதம்...