அடுக்களையிலேயே அழகாகலாம் - 7

‘‘எல்லா பருவநிலை களிலும் கிடைக்கக் கூடியது, புதினா. இது உடலுக்குத் தரவல்ல நன்மைகள் பல... குறிப்பாக, வாய்க்கும் வயிற்றுக்கும். கூடவே, அழகையும் மெருகூட்டவல்ல பல அம்சங்கள் நிறைந்தது’’ என்று சொல்லும் அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி, அவற்றைப் பற்றி விளக்கினார்....

கரும்புள்ளிகளைத் தடுக்க..!

ஒரு கப் புதினா இலையை அரைத்து சாறு எடுக்கவும். அதை 4 டீஸ்பூன் கடலை மாவுடன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் `பேக்' போட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

முகப்பருக்கள் வராமலிருக்க..!

ஒரு கப் புதினா இலையை ஒரு லிட்டர் வெந்நீரில் கலந்து ஆவி பிடிக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகளால் முகத்தை ஒற்றி எடுக்கவும்.

முகப்பருக்களை நீக்க..!

100 கிராம் கடலைப் பருப்பு, 50 கிராம் பூலாங் கிழங்கு, 50 கிராம் காய வைத்த புதினா இலை, 50 கிராம் ஜாதிக்காய், 50 கிராம் மாசிக்காய்...  இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்துச் சலிக்கவும். இந்தப் பொடி யில் 2 டீஸ்பூன் எடுத்து, தண்ணீரில் குழைத்து, பருக் கள் மேல் `பேக்' போட்டு காயவிட்டு அலசவும்.

அதுவே எண்ணெய்ப் பசை சருமத்துக்கு 2 டீஸ்பூன் தக்காளி சாறு, 2 டீஸ்பூன் பயத்தம் மாவு, 2 டீஸ்பூன் புதினா சாறு இவை அனைத்தையும் சேர்த்து `பேக்' போட்டுவர, பருக்கள் நீங்கும்.

முகப்பரு தழும்புகள் நீங்க..!

அரை கப் புதினா இலையை அரைத்துச் சாறு எடுக்கவும். இதை 2 டீஸ்பூன் சந்தனப் பொடி உடன் சேர்த்து பருக்கள் மேல் தடவிவர, பருக்கள் நீங்கும் போது அங்கு வடுக்கள் இல்லா மலும் இருக்கும்.

சொரசொரப்பான மூக்குக்கு..!

2 டீஸ்பூன் புதினா பொடி, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு தக்காளி... இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை தடினமான லேயராக மூக்கில் பேக் போடவும். காய்ந்தவுடன் மேலும் ஒரு லேயர் போட்டு, காயவிட்டுக் கழுவவும்.

பளப்பள முகத்துக்கு..!

அடுக்களையிலேயே அழகாகலாம் - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு டீஸ்பூன் பயத்தம் பருப்பு, 2 டீஸ்பூன் புதினா இலை, ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ, ஒரு டீஸ்பூன் கசகசா... இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து, 4 டீஸ்பூன் பாலில் இரவு ஊற வைக்கவும். காலையில் அதை முகத்தில் `பேக்' போட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

முக துர்நாற்றத்தைத் தடுக்க..!

சிலருக்கு முகத்தில் பல்வேறு காரணங்களால் துர்நாற்றம் வீசும். ஒரு கப் புதினா இலை, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், 4 வேப்பந்தளிர்... இவை அனைத்தையும் வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்துவர, அந்த துர்நாற்றம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

கன்னத்தின் பொலிவு மங்காமல் இருக்க..!

ஒரு டீஸ்பூன் புதினா சாறு, ஒரு டீஸ்பூன் எலு மிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன்... இவை அனைத்தையும் நன்கு கலக்கவும். ஒரு காட்டன் துணியை அதில் தோய்த்து கன்னங்களில் ஒற்றி எடுக்கவும்.

வாய் துர்நாற்றம் நீங்க..!

அரை கப் சர்க்கரை, 2 கப் புதினா இலை, அரை கப் தேன், 2 கப் எலுமிச்சைச் சாறு இவை... அனைத்தையும் கலந்து வைத்துக்கொண்டு, மவுத் வாஷாக உபயோகிக்க லாம். இதை 10 நாட்கள் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம்.

மணமகளுக்கு...

மணப்பெண்ணுக்கு வாய்ப்பராமரிப்பு மிகவும் அவசியம். ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், 2 டீஸ்பூன் புதினா பொடி, அரை டீஸ்பூன் உப்பு, 3 சொட்டு எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் சர்க்கரை... இவை அனைத்தையும் கலந்து, பற்பசைக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தி பற்களை தேய்த்து நன்றாக வாய் கொப்பளிக்க, நிமிடத்தில் புத்துணர்வு கிடைக்கும்.

தா.நந்திதா