Published:Updated:

ஆப்பிள் இட்லி, கேரட் இட்லி, சாக்லேட் இட்லி... சென்னையில் இட்லியோ இட்லி திருவிழா! #WorldIdliDay

ஆப்பிள் இட்லி, கேரட் இட்லி, சாக்லேட் இட்லி... சென்னையில் இட்லியோ இட்லி திருவிழா! #WorldIdliDay
News
ஆப்பிள் இட்லி, கேரட் இட்லி, சாக்லேட் இட்லி... சென்னையில் இட்லியோ இட்லி திருவிழா! #WorldIdliDay

ஆப்பிள் இட்லி, கேரட் இட்லி, சாக்லேட் இட்லி... சென்னையில் இட்லியோ இட்லி திருவிழா! #WorldIdliDay

மல்லிகைப்பூ, தட்டு, புதினா, பீட்சா, இளநீர், ராகி, கம்பு, சோளம், சிறுதானியம், ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி, கேரட், பைனாப்பிள்... இது ஏதோ மளிகைப் பொருள்களோ, பழ லிஸ்ட்டோ அல்ல. இவை அனைத்தும் இட்லி வகைகள்!

மார்ச் 30, உலக இட்லி தினம். இதைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், உலகின் மிகக் கனமான இட்லி (124 கிலோ) செய்து கின்னஸ் சாதனை படைத்த இனியவன், 40 வகையான இட்லியைச் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்.  மார்ச் 28 முதல் ஏப்ரல் ஒன்று வரை நடந்துகொண்டிருக்கும் சென்னை அம்பாசிடர் பல்லவா ஹோட்டலில் தொடங்கும் இந்த இட்லி திருவிழாவில், குழந்தைகளுக்குப் பிடித்த மிக்கி மவுஸ், சாக்லேட் இட்லிதான் ஹைலைட்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இருக்கிற எல்லா காய் மற்றும் பழ வகைகளைக்கொண்டு இட்லி, சட்னி, இனிப்பு வகைகள்னு அசத்திக்கொண்டிருக்கிறார் இனியவன். இவர் சாதாரண ஆட்டோ ஓட்டுநராக தன் வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, இட்லி சப்ளையராகப் பணிபுரிந்த அனுபவத்தால் ஆரம்பித்த இட்லி பிசினஸ், கின்னஸ் சாதனை வரை சென்றுள்ளது. பிறந்தநாளுக்கு கேக்கூட இங்க இட்லிதான். அவ்வளவு வெரைட்டி. விதவிதமான வடிவங்களுக்குப் பயன்படுத்தப்படும் `அச்சு', இனியவன் உருவாக்கியதுதான்.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இட்லி, சுமார் 700 ஆண்டுகளாக உண்ணப்பட்டுவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட இட்லிக்கான `ஸ்பெஷல் டே'வை கோலாகலமாகக் கொண்டாட ரெடியாகிக்கொண்டிருந்த இனியவனிடம் பேசினோம். 

``இப்போல்லாம் குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர்தான் பிடிக்குது. கலர்கலரா காட்டுறதாலயும் விளம்பரங்கள்னாலயும் அதை அதிகம் விரும்புறாங்க. ஆனா, அதெல்லாம் உடலுக்கு அதிக பிரச்னைகளைக் கொடுக்கும். உலகத்துலேயே ரொம்ப ஆரோக்கியமான உணவு இட்லிதான். அதை குழந்தைகளுக்குப் பிடிச்சதுபோல வெவ்வேறு வடிவங்கள்ல சுவையா செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்கனு வலியுறுத்தி, விதவிதமான இட்லிகளைச் செய்துக்கிட்டிருக்கிறோம். `மார்ச்-30' இட்லி தினம்னு 2015-ல அறிவிச்சாங்க. வெரைட்டியா இட்லி செய்றதுக்கு அப்போதான் ஆரம்பிச்சோம். சின்ன லெவல்ல தொடங்கினது, இப்போ உலகம் முழுவதும் கொண்டாடுறதைப் பார்க்கிறப்போ, ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு" என்று பூரிக்கிறார் இனியவன்.

``ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சும்மா இன்டர்நெட்ல பிரவுஸ் பண்ணிட்டு இருந்தப்போ, `World Idly Day'னு ஒண்ணு இருக்கிறதைப்

பார்த்து ரொம்பவே  ஆச்சர்யப்பட்டேன். தென் இந்தியாவுல சாப்பிடுற ஒரு உணவு, உலகளவுல கொண்டாடுறதைப் பார்த்துப் பெருமையா இருந்துச்சு. ஆனா, இங்க நாம எல்லாரும் இந்த ஆரோக்கியமான உணவை மறந்துட்டு, fast food பின்னாடி ஓடிட்டிருக்கோம். பிரேக்ல சாப்பிடுற ஸ்நாக்ஸ்கூட அதிக கெமிக்கல் கலந்ததுதான். இதுதான் இயல்பாவே நமக்குப் பிடிக்குது. குழந்தைகளுக்கு எது ஆரோக்கியம்னு தெரியாது. நாமதான் அதெல்லாம் தெரியப்படுத்தணும். இனியவனோடு சேர்ந்து இந்தத் திருவிழாவைக் கொண்டாடுறதுல ரொம்பவே சந்தோஷம்" என்று கூறி புன்னகையித்தார் அம்பாசிடர் பல்லவா ஹோட்டலின் மேலாளர் வெங்கட் ரெட்டி.

இத்தனை இட்லி வகைகளைச் செய்வதில் இருக்கும் சவால்களைப் பற்றி Chef Bhat-டிடம் கேட்டோம். அதற்கு, ``வெரைட்டியா செய்யணும்னு முடிவுபண்ணதே பெரிய சவால்தான். முடிவுபண்ண எல்லா வகைகளையும் செய்ய முடியுமான்னு சின்ன பயமும் இருந்துச்சு. வெள்ளையா ரவுண்டா இருக்கிறதுதான் இட்லினு இருக்கிற நினைப்பை உடைக்கணும். முக்கியமா, குழந்தைகளுக்குப் பிடிக்கணும். அதேசமயத்துல ஆரோக்கியமானதா இருக்கணும்னு நினைச்சோம். கலருக்கு, இயற்கை கலரிங் பொருள்கள் கொண்டுள்ள கேரட், பீட்ரூட் போன்றவற்றைப் பயன்படுத்தியிருக்கோம். இனிப்பு வகைகள்ல விதவிதமான பழங்களை உபயோகப்படுத்தியிருக்கோம். இப்படி எல்லாமே சவாலாதான் இருந்துச்சு. நிச்சயமா இது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று கூறிவிட்டு இட்லி பரிமாற விரைந்தார் பட்.

`இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சுச் சாப்பிட கிடைச்சது' என்ற பழநிபாரதியின் வரி மக்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இட்லி ஸ்பெஷலிஸ்ட் இனியவன் மற்றும் அவங்க குழுவுக்கு நன்றாகவே புரிந்தது.