Published:Updated:

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

அட்டகாச அனிமேஷன் டெக்னாலஜி

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

அட்டகாச அனிமேஷன் டெக்னாலஜி

Published:Updated:
சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!
பிரீமியம் ஸ்டோரி
சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!
சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

'தி ஜங்கிள் புக்' படத்தில் மோக்லியாக நடித்த நீல் சேத் நேரில் வந்து, ''படத்தில் என்னோடு நடித்த சிறுத்தை, கரடி எல்லாமே அனிமேஷன்தான்'' என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டோம். அந்த அளவுக்கு, கரடியின் முடி அசைவுகூட நிஜம்போல இருக்கும். சமீபத்தில் வெளியான, ‘ஃபைண்டிங் டோரி' படத்தில் வரும் குட்டி மீனின் செதில் அசைவுகளுக்கு ஒரிஜினல் மீனே தோற்கும். எப்படிப்பா இப்படி உருவாக்குறாங்க? அந்த அனிமேஷன் டெக்னாலஜிக்குள் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா?

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதான் கதை, இதுதான் காட்சி என முடிவு ஆனதும், அந்தக் காட்சியில் வரும் கதாபாத்திரங்களை பேப்பரில் வரைவார்கள். அதை, கம்ப்யூட்டரில் 3D கதாபாத்திரங்களாக உருவாக்குவார்கள். இந்த மாதிரி உருவாக்க, ‘3D எக்ஸ் மேக்ஸ் மாயா' போன்ற நிறைய மென்பொருட்கள் உள்ளன. கதாபாத்திரங்கள் போலவே, கதை நடக்கும் இடம், பொருட்களைத் தனித்தனியாக கம்ப்யூட்டரில் வரைவதற்கு  ‘செட்' என்று பெயர். இந்த மாதிரி செட் மற்றும்  கதாபாத்திரங்களை வரைந்ததும், ஒரு அனிமேஷன் சாஃப்ட்வேரில் அசைவுகள் கொடுத்து, காட்சிகளாக மாற்றுவார்கள். இப்படி அசைவு கொடுப்பதற்கு, ‘சிமுலேஷன்' (Simulation) என்று பெயர். இந்த சிமுலேஷன்தான் காலத்துக்கு ஏற்ப டெக்னிக்கல் மெருகேறி, நம்மை வியக்கவைக்கிறது. ஒரு அனிமேஷன் காட்சி எவ்வளவு உயிரோட்டமாக அமைகிறது என்பதை முடிவுசெய்வதே இந்த சிமுலேஷன்தான்.

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ‘டாம் அண்டு  ஜெர்ரி' கார்ட்டூனுக்கும் 'ஐஸ் ஏஜ்' படத்தில் மம்மூத் நடப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியும். ஜெர்ரி நடக்கும்போது, அதனுடைய காலுக்கும் உடலுக்கும் மட்டுமே  அனிமேஷன் இருக்கும். சில சமயங்களில் மனிதக் கால்களின் அசைவு போலவே இருக்கும். ஆனால், மம்மூத் நடக்கும்போதும் தரையில் உண்டாகும் சிறு அதிர்வு, அதன் முடிகள் அசைவது என நுணுக்கமாக இருக்கும். ‘ஃபைண்டிங் டோரி' படத்தில், நீருக்குள் மீனின் வால் அசைவதும் அப்படித்தான். டிஸ்னியின் பிக்ஸார் (Pixar) நிறுவனம்தான், இந்த அனிமேஷன்களை உருவாக்கியது. மீனின் இந்த நீச்சல் சிமுலேஷன்களை உருவாக்க மட்டுமே, இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

இவர்களின் திறமைக்கு இன்னும் ஓர் உதாரணம், ‘தி டேங்கிள்டு' (The Tangled) படத்தைச் சொல்லலாம். அதில் வரும் ரூபென்சல் கதாபாத்திரத்தின் 80 அடி நீளக் கூந்தலின் ஒவ்வோர் அசைவும் அற்புதம். இதற்காக, ஹேர் சிமுலேஷன் என்ற தனித் துறையே உழைத்தது. சரி, எல்லா அசைவுகளையுமே கணினியில்தான் உருவாக்குகிறார்களா?

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

‘ஃபைண்டிங் டோரி' மாதிரியான படங்களுக்கு அப்படித்தான். மனிதர்கள் போன்ற அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்க, ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. அதன் பெயர், ரோட்டோஸ்கோப்பிங். தமிழில் வெளியான ‘கோச்சடையான்' இதற்கு ஓர் உதாரணம். மனித உடலில் ஆங்காங்கே சில கருவிகளைப் பொருத்தி, அவர்களை நடிக்கவிட்டு, அசைவுகளைப் பதிவுசெய்வார்கள். பின்னர், இந்த அசைவுகளை மட்டும் எடுத்து, ஏற்கெனவே கணினியில் வரைந்திருக்கும் 3D கதாபாத்திரங்களுக்குப் பொருத்திவிடுவார்கள். இதனால், அந்த மனிதர் எப்படி நடந்தாரோ, அப்படியே படத்தில் அனிமேஷன் கதாபாத்திரமும் நடக்கும். சில விலங்குகளுக்கும் மனிதர்களை நடிக்கவைத்துப் பயன்படுத்துவார்கள். ‘தி ஜங்கிள் புக்' படத்தில் சில விலங்குகளுக்கு மனிதர்களே அனிமேஷன் கொடுத்தார்கள். படத்தில் வந்த மோக்லி  தவிர, காடு, மரம், புல், விலங்குகள் எதுவுமே உண்மை அல்ல. எல்லாம் VFX தொழில்நுட்பத்தின் மாயாஜாலம். 'லைஃப் ஆஃப் பை' படமும் அப்படித்தான்.

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

இந்த மாதிரியான படங்களை எடுக்கும்போது, நிஜ மனிதர்கள் வரும் காட்சிகளை நீலத் துணிகளின் பின்னணியில் எடுப்பார்கள். விலங்குகள் வரும் காட்சிகளில், ஒரு பொம்மையைவைத்து நடிப்பார்கள். பிறகு, இந்த நீலப் பின்னணியும் பொம்மைகளும் கணினியின் உதவியுடன் அகற்றப்படும். ஏற்கெனவே உருவாக்கி இருக்கும் விலங்கு, காடுகளின் பின்னணிகள் சேர்க்கப்படும். நிஜ மனிதன், விலங்குடன் பேசுவது போலவே இருக்கும்.

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

இதுபோன்ற அனிமேஷன் படங்களில், பின்னணி இசையும் சிறப்பு சப்தங்களும்தான்  படத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது. இதற்குப் பெயர், ஃபாலி (Folly). ஹீரோ நடக்கும்போது, தண்ணீர் ஓடும்போது, மணலில் சறுக்கும்போது, எதையாவது தட்டும்போது வரும் சப்தங்களை எல்லாம் ஒரு ஸ்டுடியோவில் செயற்கையாக உருவாக்குவார்கள். இதற்கென்றே ஃபாலி ஆர்ட்டிஸ்ட் இருப்பார்கள். ‘தி ஜங்கிள் புக்' படத்தின் மோக்லி மணலில் நடக்கிறான் என்றால், ஸ்டுடியோவில் மணலைக் கொட்டி, ஃபாலி ஆர்டிஸ்ட்டை நடக்கவைத்து, அந்த சத்தத்தைப் பதிவுசெய்து படத்தில் பயன்படுத்தினார்கள்.

சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!
சின்னச் செதில் அசையுது... வண்ண முடி பறக்குது!

ஆக, ஒரு அனிமேஷன் படம் உருவாவதன் பின்னணியில், 3D கேரக்டர், சிமுலேஷன், ரோட்டோஸ்கோப்பி, VFX, ஃபாலி என இத்தனை விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த முறை படம் பார்க்கும்போது, இவற்றைக் கவனியுங்கள். புது அனுபவமாக இருக்கும்.

- தி.விக்னேஷ்