Published:Updated:

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!
பிரீமியம் ஸ்டோரி
மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

- எப்படி இயங்குது டச் ஸ்க்ரீன் போன்?

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

- எப்படி இயங்குது டச் ஸ்க்ரீன் போன்?

Published:Updated:
மொபைலுக்குள் டெக்னோ பூதம்!
பிரீமியம் ஸ்டோரி
மொபைலுக்குள் டெக்னோ பூதம்!
மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

மாயாஜாலக் கதைகளில் வரும் சூனியக்காரிகளின்  விரல் அசைவில் பொருள்கள் நகரும். இதெல்லாம் கதையிலதான் சாத்தியம் என நினைத்திருந்தோம்.  சில வருடங்களுக்கு முன்னால் திடுதிப்பென   வந்தது, ஸ்மார்ட்போன் என்கிற டச் ஸ்கிரீன் போன். அவ்வளவுதான், பட்டன்கள் தெறித்து ஓடின.  ஸ்கிரீனைத் தொட்டால் போதும், ஜீ பூம்பா மாதிரி கதவு திறக்கிறது. கேம்ஸ் விளையாடும்போது மொபைலைத் திருப்பினால், நாம் ஓட்டும் காரும் திரும்புகிறது. இதெல்லாம் எப்படி நடக்கிறது?

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட டச் ஸ்கிரீன்களில், இரண்டு அடுக்குத் திரைகள் இருந்தன. இப்போது, நான்கு அடுக்குத் திரைகள் வந்துவிட்டன. இரண்டு அடுக்குத் திரைகொண்ட டச் ஸ்கிரீனை, ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் (Resistive Touch Screen) என்பார்கள். இந்த வகை டச் ஸ்கிரீனில், கீழ் அடுக்கு கண்ணாடியாலும், மேல் அடுக்கு பிளாஸ்டிக்காலும் ஆனவை. இந்த இரண்டுக்கும் நடுவில் ஸ்பேசர்ஸ் (Spacers) என்கிற இடம் இருக்கும். நாம் மேலே இருக்கும் பிளாஸ்டிக்கை அழுத்துகிறோம். அது, கீழே இருக்கும் கண்ணாடியைத் தொடுகிறது. நாம் எந்த இடத்தில் தொட்டோம் என்பதை மொபைலில் இருக்கும் மைக்ரோப்ராஸசர்களுக்கு செய்தி செல்கிறது. மூளை போன்ற இந்த மைக்ரோப்ராஸசரில், எங்கே தொட்டால் என்ன நடக்க வேண்டும் என்று புரோகிராம்  செய்யப்பட்டிருக்கும். அதன்படி இயங்கும்.

இந்த இரண்டு அடுக்கு டச் ஸ்கிரீனை, அழுத்தித் தொட்டால்தான் வேலை செய்யும். ஆரம்பத்தில் வந்த போன்கள் அப்படித்தான். ரயில்வே நிலையங்களில் டிக்கெட் எடுக்கும் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தோடு சிலர் பாக்ஸிங் போடுவது இதனால் தான்.

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

ஆனால், இப்போது வருகிற டச் ஸ்கிரீன் போன்களில் நான்கு அடுக்குத் திரைகொண்ட கான்டக்டிவ் டச் ஸ்கிரீன் (Conductive Touch Screen) பயன்படுத்தப்படுகிறது. இதில், மேலே இருக்கும் முதல் அடுக்கில், பாதுகாப்புத் திரை ஒன்று இருக்கும். கொரில்லா கிளாஸ் என்பது இதுதான். கீழாக இருக்கும் நான்காவது அடுக்கு LED ஸ்கிரீன். நம் போனில் உள்ள அத்தனை வண்ணங்களும் இதன் மூலமே தெரிகின்றன. நடுவில் இருக்கும் இரண்டு அடுக்குகள்தான், நம் மொபைலை டச் ஸ்கிரீனாக மாற்றுகிறது. இதில், இரண்டாவது அடுக்கில், சிறிய அளவில் மின்சாரம் பாயும் கம்பிகள் இருக்கும். இதற்குப் பெயர், டிரைவிங் லைன் (Driving Line). அடுத்து இருக்கும் அடுக்கில் உள்ள கம்பிகள், இந்த டிரைவிங் லைனில் எவ்வளவு மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கிறது என்பதை கண்காணிக்கும். இதற்கு, சென்ஸிங் லைன் (Sensing Line) என்று பெயர். இந்தக் கம்பிகள் நம் தலைமுடியைவிட மிகவும் மெலிதானவை என்பதால், நம் கண்களுக்குத் தெரியாது.

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

நம் விரல் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், டச் ஸ்கிரீனில் ஓர் இடத்தில் தொட்டதும், டிரைவிங் லைனில் பாயும் மின்சாரம் விரல்களுக்குக் கடத்தப்படும். இதனால், எந்த இடத்தில் தொடுகிறோமோ, அந்த இடத்தில் பாயும் மின்சாரத்தின் அளவு மாறும். அதைத் துல்லியமாகக் கண்டறியும் மைக்ரோப்ராஸசர், அதற்கு ஏற்ப வேலை செய்யும். கையில் கிளவுஸ் அணிந்துகொண்டோ, தடிமனான துணியைச் சுற்றிக்கொண்டோ தொட்டால், டச் ஸ்கிரீன் போனை இயக்க முடியாது.

மொபைலுக்குள் டெக்னோ பூதம்!

சரி,  ஆட்டோ ரொட்டேஷன் எப்படி வேலை செய்கிறது? அதற்கு, மொபைலுக்குள் இருக்கும் ஆக்சிலெரோமீட்டர் (Accelerometer) என்கிற சாதனமே காரணம். இந்த ஆக்சிலெரோமீட்டரில் குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் இருக்கும். நாம் மொபைலைத் திருப்பும்போது, இந்தக் கம்பிகள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு ஆக்சிலெரோமீட்டரைத்  திருப்புகிறது. இதைக் கண்டறிந்து, மைக்ரோப்ராஸசர் இயங்குகிறது.

ஆக, மொபைலுக்குள் இருந்தவாறு நாம் கேட்கும் வரத்தைக் கொடுக்கும் டெக்னோ பூதம் வேறு யாருமல்ல, உள்ளே ஒளிந்திருக்கும் மைக்ரோப்ராஸசர்தான்!

- தி.விக்னேஷ், படம்: சு.ஷரண் சந்தர்