Published:Updated:

நில்... கவனி... ‘கண்’மணி!

நில்... கவனி... ‘கண்’மணி!
பிரீமியம் ஸ்டோரி
நில்... கவனி... ‘கண்’மணி!

நில்... கவனி... ‘கண்’மணி!

நில்... கவனி... ‘கண்’மணி!

நில்... கவனி... ‘கண்’மணி!

Published:Updated:
நில்... கவனி... ‘கண்’மணி!
பிரீமியம் ஸ்டோரி
நில்... கவனி... ‘கண்’மணி!
நில்... கவனி... ‘கண்’மணி!

கண்கள் நலமா?

`கண்கள் உள்ளத்தின் ஜன்னல்' என்பர். காலை எழுந்தது முதல், இரவு உறங்குவது வரை கண்கள்தான் நம் வழிகாட்டி. எதிரே உள்ளவற்றின் மீது மோதாமல் இருக்க, வேகமாக நம்மை நோக்கி வரும் பொருளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, நம் முன்னே இருக்கும் ஒரு பொருள் எத்தகையது எனத் தெரிந்துகொள்ள, அந்தப் பொருள் எந்த வடிவத்தில் இருக்கிறது, எவ்வளவு பெரிதாக இருக்கிறது, என்ன நிறத்தில் இருக்கிறது என்பவற்றைத் தெரிந்துகொள்ள, இயற்கை அழகைக் கண்டுகளிக்க கண்கள் மிகமிக அவசியம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்வளவு வேலைகளைச் செய்யும் கண்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மிகமிகக் குறைவு. பாதிப்பு ஏற்படும் வரை அதுபற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. நீண்ட நேரம் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், மொபைல் என்று இருக்கிறார்கள். இன்று, பிஞ்சுக் குழந்தைகள்கூட கண்ணாடி அணிவதைப் பார்க்கிறோம். கண்களைக் காக்கும் அத்தியாவசியச் செயல்களைக்கூட செய்யாத இந்த வாழ்க்கைமுறையை `அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்' என்கிறார்கள்.

கண் பிரச்னையைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீண்ட காலம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். பிரச்னையை அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு மணித் துளியும் அதன் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

நம் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று விளக்குகிறார் கண் மருத்துவர் நந்த குமார். அமர்ந்த இடத்திலேயே செய்யக்கூடிய, கண்களுக்கான எளிய பயிற்சிகளைச் சொல்லித்தருகிறார் யோகா பயிற்சியாளர் ரவீராம். கண்களைக் காக்கும் உணவுகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிச் சொல்கிறார் சித்த மருத்துவர் உலகநாதன்.

நில்... கவனி... ‘கண்’மணி!

பார்வை எப்படித் தெரிகிறது?

கண்ணை, மிகவும் சிக்கலான உறுப்புக்களில் ஒன்று என மருத்துவ அறிவியல் விவாிக்கிறது. மிகச்சிறிய பல பாகங்கள் இணைந்து மிகக் கடினமான பணியினைச் செய்து, பார்வை என்ற திறனை நமக்குத் தருகிறது.

நில்... கவனி... ‘கண்’மணி!

கருவிழியின் (Cornea) மையத்தில் உள்ள தெளிவான பகுதி வழியாக ஒளியானது கண்ணுக்குள் நுழைகிறது. ஒளியின் அளவுக்கு ஏற்ற வகையில் கண்ணின் கருவிழி செயல்பட்டு உள்ளே அனுப்புகிறது. இந்தத் தெளிவான பகுதிக்குப் பின்புறம் லென்ஸ் அமைந்திருக்கிறது. இது, ஒளியைத் தன்னிச்சையாகக் கூர்ந்து கவனிக்கிறது. டிஜிட்டல் கேமராவின் ஆட்டோ ஃபோக்கஸ் லென்ஸ் போல இது செயல்படுகிறது. விழிவெண்படலம், கண்மணி, கருவிழி, லென்ஸ் ஆகியவற்றை எல்லாம் கடந்து ஒளியானது விழித்திரையில் விழுகிறது.  விழித்திரை, எலெக்ட்ரானிக் இமேஜ் சென்ஸார் போல செயல்பட்டு, ஒளியை சிக்னலாக மாற்றி, பார்வை நரம்பு வழியாக மூளையில் உள்ள விஷூவல் கார்டெக்ஸ் (Visual cortex) என்ற பகுதிக்கு அனுப்புகிறது. அங்குதான், எது என்ன என்பது நமக்குத் தெரிகிறது.

கண் பிரச்னை ஏன் ஏற்படுகிறது?

வயது அதிகரித்தல்.

குழந்தைப் பருவத்தில், ஒரு கண் நன்றாக இருக்கும். அதற்கு இணையாக மற்றொரு கண்ணால் செயல்பட முடியாததால், அந்த ஒரு கண்ணால் பார்ப்பதைக் குறைத்துவிடுவார்கள். இதனால், `சோம்பேறிக் கண்' பிரச்னை ஏற்படலாம்.

ஒளிச்சிதறல் காரணமாக ஒளியை மிகச் சரியாகக் கூர்ந்து கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் அணியலாம்.

முகத்தில் ஏற்படும் காயம் காரணமாக, கண்ணில் வீக்கம் போன்ற பிரச்னை ஏற்படலாம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

வயது அதிகரித்தல் காரணமாக லென்ஸ் திறன் இழந்து, கண் புரை ஏற்படலாம்.

கண்ணில் நோய்த்தொற்றுக் காரணமாக, கருவிழியில் புண், அழற்சி ஏற்படலாம்.

சர்க்கரை நோய் காரணமாக, கண்களின் ரத்தக் குழாய்கள் பாதிப்படைந்து டயாபடீக் ரெட்டினோபதி ஏற்படலாம்.

போதுமான அளவு கண்ணீர் சுரக்காததால், உலர் கண் பிரச்னை ஏற்படலாம்.

கண்ணின் நீர் அழுத்தம் அதிகரிப்புக் காரணமாக, க்ளைக்கோமா என்ற பிரச்னை ஏற்படலாம். இதனால், பார்வை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப் பார்வை, ஹைப்பர்மெட்ரோபியா (Hypermetropia) எனப்படும் தூரப்பார்வைப் பிரச்னைகள் ஏற்படலாம்.

விழித்திரையில் நோய்த்தொற்றுக் காரணமாக, அழற்சி ஏற்படலாம்.

பிறவிக் குறைபாடு காரணமாகவும் கண் நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

பரிசோதனை


குழந்தை பிறந்ததும் மருத்துவர் ஆலோசனைப்படி, கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கண் பார்வை தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க, குழந்தைகளை முதலியேயே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

கண் பார்வைப் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், தொடக்கத்திலேயே அதைக் கண்டறிந்து, உடனே சிகிச்சை பெற முடியும். குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு இருக்கிறது எனச் சொல்லத் தெரியாது. அதன் பிரச்னையை விவரிக்கவும் தெரியாது. எனவே, ஆண்டுக்கு ஒருமுறையாவது பொதுவான கண் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள், தங்களால் சரியாக எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை, பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்றால், கண்களைப் பரிசோதனைசெய்வது அவசியம்.

பெரியவர்களும் இதுபோல ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

பார்வைத் திறன் பிரச்னையை கண்டுபிடித்துவிட்டால், பலவீனமாக இருக்கும் கண் பார்வையைச் சரிப்படுத்துவது சாத்தியமே!

கிட்டப்பார்வை (Myopia)

அருகில் இருக்கும் பொருட்கள் நன்றாகத் தெரியும். ஆனால், தொலைவில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரியாது. ஒளியானது விழித்திரையில் விழுவதற்குப் பதில், அதற்கு முன்னதாகவே விழுவதுதான் இந்த பிரச்னை ஏற்படக் காரணம். இவர்களுக்கு மைனஸ் பவர் (-) கண்ணாடிகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

நில்... கவனி... ‘கண்’மணி!

தூரப்பார்வை (Hypermetropia)

தூரத்தில் இருப்பவை நன்றாகத் தெரியும். ஆனால், அருகில் இருப்பது சரியாகத் தெரியாது. ஒளியின் குவியம் விழித்திரையில் விழுவதற்குப் பதில், அதைத் கடந்துச் செல்லும். ஒளி, விழித்திரையில் விழும் வகையில் இவர்களுக்கு, பிளஸ் பவர் (+) கண்ணாடிகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

நில்... கவனி... ‘கண்’மணி!

ஆஸ்டிக்மேட்டிசம் (Astigmatism)

சிலருக்கு, 360 டிகிரியிலும் பவர் பிரச்னை இருக்காது. ஆனால், ஏதாவது ஒரு கோணத்தில் மட்டும் பவர் இருக்கும். இதனால், தலைவலி, பார்வைக் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பிரச்னை எங்கே என்று  கண்டறிந்து, அதற்குத் தகுந்த கண்ணாடியை அணியலாம்.

தீர்வுகள்

பொதுவாக, கிட்டப்பார்வை இருப்பவர்களுக்குக் கண்கள் பெரிதாக இருக்கும். கண்கள் வளர்ச்சி அடைய அடைய, குறைபாடும் அதிகரிக்கும். தூரப்பார்வை உள்ளவர்களுக்கு, கண்கள் சிறிதாக இருக்கும். வளர்ச்சி அடைந்தால், தூரப்பார்வைப் பிரச்னை சரியாகவும் வாய்ப்புகள் உள்ளன.
20 வயதுக்குக் கீழே உள்ளவர்கள், கண்ணாடி அல்லது லென்ஸ் அணிவதன் மூலம் மேலும் பவர் அதிகரிக்காமல் தடுக்கலாம். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களது உடல்நிலை மற்றும் விருப்பத்தைப் பொருத்து, லேசர் முறையில் கண்ணின் கருவிழியில் லாசிக் சிகிச்சை செய்துகொள்ளலாம். லாசிக்கிலும் தற்போது ஸ்மைல் என்ற புதுத் தொழில்நுட்பம் வந்துள்ளது.

கண் புரை

நில்... கவனி... ‘கண்’மணி!

வெண்மேகம் போல கண் லென்ஸில் படிந்து, பார்வைத் திறன் இழப்பதைக் கண் புரை என்கிறோம்.

லென்ஸ் என்பது தெளிவான, ஒளி ஊடுருவக்கூடியதாக இருக்கிறது. இதுதான், ஒளியைக் குவித்து விழித்திரையில் விழச்செய்கிறது. ஒளி ஊடுருவ முடியாத தன்மை ஏற்படும்போது, பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது.

கண் புரை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. வயது அதிகரித்தல் காரணமாக பெரும்பாலும் இந்தப் பிரச்னை வருகிறது. குழந்தைகளுக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

சர்க்கரை நோய், சிகரெட் பழக்கம் எனச் சில தவறுகள் கண் புரைக்கான வாய்ப்பை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. கண் புரைக்கு அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வு.

பழைய அறுவைசிகிச்சை முறையில், கண்ணின் கருவிழியை முற்றிலும் திறந்து, கண் புரை நீக்கப்பட்டது. லென்ஸைத் தாங்கும் பையும் அகற்றப்பட்டது. இதனால், சோடா பாட்டில் தடிமனுக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலை இருந்தது. தற்போது, நவீனத் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, சிறு துளையிட்டு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. வெறும், 1.8 மி.மீ அளவுக்கு வெட்டப்பட்டு, கண் புரை அகற்றப்பட்டு, மடிக்கக்கூடிய லென்ஸை உள்ளே வைத்து அறுவைசிகிச்சை செய்கின்றனர். இதற்கு, ஃபேக்கொஎமல்சிஃபிகேஷன் (Phacoemulsification) என்று பெயர். இந்த மிகச்சிறிய வெட்டுதல்கூட தற்போது லேசர் பயன்படுத்திச் செய்யப்படுகிறது.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்

நில்... கவனி... ‘கண்’மணி!

கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் வரும். இதனால், தலைவலி, மங்கலான பார்வைத்திறன் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இ-ரீடர், செல்போன், டேப்லெட், கேம்ஸ், கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வரும்.

காரணங்கள்?


கண்ணின் மேல் பரப்புக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண்ணீர் வழியாகத்தான் கிடைக்கின்றன. தொடர்ந்து, ஒளிர்திரையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, கண் சிமிட்ட மறக்கிறோம். இதனால், கண் உலர்தல் உள்ளிட்ட பிரச்னை ஏற்பட்டு, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் ஏற்படுகிறது.

குறைந்த வெளிச்சத்தில், குறைந்த இடைவெளியில் ஒளிர் திரையை நீண்ட நேரம் பார்ப்பது.

நில்... கவனி... ‘கண்’மணி!

கம்ப்யூட்டர் முன்னால் சரியான கோணத்தில் அமராதது.

இடைவெளி இல்லாமல் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் பயன்படுத்துவது.

நில்... கவனி... ‘கண்’மணி!

தடுக்கும் வழிகள்

இமைக்காமல் பார்க்கும்போது, கண்கள் வறட்சியாகிவிடும். இதைத் தவிர்க்க, 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும்.

அதாவது, 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஒளிர் திரையைப் பார்க்கக் கூடாது.

20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள, ஏதாவது ஒன்றை 20 நொடிகள் பார்த்துவிட்டு, கண்களைச் சிமிட்டி, கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.

20 நிமிடங்களுக்கு ஒருமுறை, தொடர்ந்து 20 முறை கண்களைச் சிமிட்ட வேண்டும்.

ஏ.சி அறையில் இருக்கும்போது, கண்கள் இன்னும் அதிகமாக வறட்சி அடையும். இதனால், ஏ.சி அறையில் இருப்பவர்கள், கட்டாயம் 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

கண்களை மூடிக்கொண்டு, கடிகாரச் சுற்றுப்பாதை மற்றும் எதிர்ப் பாதையில் கண்களைச் சுழற்ற வேண்டும்.

கண்கள் உறுத்தும் உணர்வு ஏற்பட்டால், குழாய் நீரில் கண்களைக் கழுவலாம். மிகவும் சுத்தமான, பாதுகாப்பான தண்ணீரால் கண்களைக் கழுவலாம்.சுகாதாரமற்ற தண்ணீர் என்றால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கவனம் தேவை.

சில சமயம் கண்களைக் கசக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். ஆனால், கண்களைக் கசக்கக் கூடாது. இந்தப் பிரச்னைக்கு வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்படி சாப்பிடலாம்.

கண் வறட்சி அதிகமாக இருந்தால், டாக்டர் பரிந்துரையின் அடிப்படையில் செயற்கைக் கண்ணீர் துளிகள் (Lubricating eye drops) போட்டுக் கொள்ளலாம்.

கண் அழுத்தம் (Eye pressure)


பொதுவாக, அனைவருக்கும் ‘கண் அழுத்தம்’ இருக்கும். 10 - 20 மி.மீ/ஹெச்.ஜி என்ற அளவில் இது இருக்கலாம். இதைத் தாண்டி அழுத்தம் அதிகரிக்கும்போது, பிரச்னை ஏற்படுகிறது. கண் அழுத்தம் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருப்பது, குளுக்கோமா (Glaucoma). 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு  குளுக்கோமா ஏற்பட வாய்ப்பு அதிகம். இதில், ஓப்பன்  மற்றும் குளோஸ்டு ஆங்கிள் (Closed angle) என இரண்டு வகை உள்ளன.

பார்வை இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் குளுக்கோமாவும் ஒன்று. இது, ஆப்டிக் நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.

நில்... கவனி... ‘கண்’மணி!

குளுக்கோமாவால் பார்வை இழப்பு ஏற்பட்டால், அதைச் சரிசெய்ய முடியாது. ஆரம்பநிலையிலேயே கண்டறிவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க முடியும்.

ஓப்பன் ஆங்கிள் குளுக்கோமா என்பதில், கண்களில் இருந்து நீர் வெளியே செல்லும் வழி திறந்து இருக்கும். மேலும், கண்களுக்குள் கண்ணீர் திரள்வதால், கண் அழுத்தம் ஏற்படும்.

கண்களில் உள்ள நீர் வெளியே போகும் ஆங்கிள்  அடைத்தோ (Closed angle) அல்லது குறுகலாகவோ (Narrow) இருந்தால், நீர் வெளியே போகாமல், கண்களிலேயே நீர் அதிகரித்து கண் அழுத்தம் அதிகரிக்கும்.

ரெட்டினாவின் உள்ளே ஆப்டிக் நரம்புகள் உள்ளன. கண் அழுத்தத்தால் கண்களில் உள்ள ஆப்டிக் நரம்புகளிலும் அழுத்தம் ஏற்படுவதால், நரம்புகள் பாதிக்கின்றன.

நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பதால் பார்வைத்திறன் பாதிக்கும். முழுமையாக இல்லாமல், பக்கவாட்டில், சுற்றுப்பகுதியில் எனப் பார்வைத்திறன் குறையும். அடுத்ததாக, கண் அழுத்தம் நரம்புகளின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், சின்னச்சின்ன நரம்புகளுக்குச் செல்கிற ரத்த ஓட்டமும் தடைப்படும்.

தீர்வுகள்


முறையாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைசெய்து, சிகிச்சை பெறுவதன் மூலம் பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.

கண் அழுத்தத்தைக் குறைக்க, மருத்துவர் சொட்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார். இவற்றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

சிலருக்கு, வாழ்நாள் முழுதும் ஐ டிராப்ஸ் போட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படலாம்.

சிலருக்கு, லேசர் மூலம் துளைகள் போட்டு சிகிச்சை செய்து தீர்வு காண முடியும். இதை ஒருமுறை செய்தால் போதும். இதற்குப் பிறகு, ஐ டிராப்ஸ் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கண்களில் நீர் வழிதல்

சிலருக்கு, ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றால் கண்களில் அடிக்கடி நீர் வழியும் பிரச்னை இருக்கும். இதற்கு, மருத்துவர் பரிந்துரைப்படி ஆன்டிபயாட்டிக் சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம். சிலருக்குத் தீவிரமான பிரச்னை இருந்தால், அதற்கான பிரத்யேக சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

கண் ரப்பை வீக்கம் (Eye puffiness)

விழிக்கோளத்தைச் சுற்றிலும் கொழுப்பு இருக்கும். இதைப் பாதுகாப்பது ஆர்பிட்டல் செப்டம் (Orbital septum). இது, வயதாகும்போது பலவீனமாவதால், விழிக்கோளத்தைச் சுற்றி உள்ள கொழுப்பு சிதையும். இதனால், கண்களைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுகிறது.

கண்களில் பூச்சி விழுந்தால்...


பொதுவாக, கண்களில் பூச்சி விழுந்தால், அதன் கால்கள் கண்களில் ஒட்டிக்கொள்ளும். இதனை நம்மால் அகற்ற முடியாது. கண் மருத்துவர் மரத்துப்போவதற்கான மருந்து கொடுத்து, பூச்சிகளை அகற்றிவிடுவார்.

கண் தொற்றுக்களைத் தவிர்க்க...

நில்... கவனி... ‘கண்’மணி!

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் மூலம் வரக்கூடிய திடீர் கண் பிரச்னைகள்  (Acute conjunctivitis) காரணமாகக் கண்கள் சிவந்துபோகும். கண் இமைகளுக்குக் கீழ், தூசு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

கண்களில் இருந்து அதிக நீரை வெளியேற்ற வைக்கும். கண்ணில் தொற்று ஏற்பட்டால், அடிக்கடி கண்களை நீரால் கழுவ வேண்டும். முதல் ஓரிரு நாட்கள் ஆன்டிபயாட்டிக் மருந்தை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எனப் போட வேண்டும். பிறகு, ஒரு நாளைக்கு நான்கு முறை என ஒரு வாரம் வரை போட வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

கண்களைப் பாதுகாக்கும் காக்குல்ஸ் கண்ணாடிகள் அணிந்துகொண்டால், பெரும்பாலான கண் தொற்றுக்கள் பரவாது.

மெட்ராஸ் ஐ என்பது வைரல் தொற்று, மிக வேகமாக இது பரவும். அனைத்துக் கண் தொற்றுகளும் மெட்ராஸ் ஐ கிடையாது. இதற்கு, கண் மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவம் கூடாது.
கண் தொற்றுக்கள் பல வகைகளில் வரும் என்பதால், ஒருமுறை மருத்துவரிடம் சென்று அவரின் பரிசோதனையின் கீழ் மருத்துவமுறைகளைப் பின்பற்றுவதே சரி.

கண்களைப் பாதுகாக்க...

நில்... கவனி... ‘கண்’மணி!

சர்க்கரை நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைத்தால், டயாபடீக் ரெட்டினோபதி வராமல் தடுக்க முடியும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லை எனில் ஹைப்பர்டென்ஷன் ரெட்டினோபதி வந்துவிடும்.

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் அமர்பவர்கள் லூப்ரிகேட்டிங் ஐ டிராப்ஸ் போடுவது நல்லது. இமைகள் எளிதாக இயங்க, சுலபமாக இது உதவும்.

இருளான அறையில் மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறிய விளக்காவது எரிவது நல்லது.

கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. தூசு, பூச்சி விழுந்தாலும் கண்களைக் கசக்கக் கூடாது.  இதனால், பாதிப்பு தீவிரமாகலாம்.

மொபைல் போனில் அதிக நேரம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், கண் வறட்சியாகி, பார்வைத் திறன் பிரச்னை உண்டாவதைத் தவிர்க்க முடியும்.

எலெக்ட்ரானிக் பாதிப்புகளைத் தவிர்க்க

கம்ப்யூட்டரில் நாள் முழுக்க உட்கார்ந்து வேலைசெய்பவர்கள், டாக்டர் பரிந்துரைத்தால், `ஆன்டிரிஃப்லக்டிவ் கோட்டிங்' கண்ணாடி அணியலாம்.

டாக்டர் பரிந்துரையின் அடிப்படையில், கண்களுக்கு லூப்ரிகேட்டிங் சொட்டு மருந்தைப் போட்டுக்கொள்ளலாம்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலைசெய்பவர்கள், அருகில் செடி வளர்க்கலாம். அடிக்கடி, அதன் பச்சை நிறத்தைப் பார்ப்பதன் மூலம் கண்கள் குளிர்ச்சி அடையும்.

சன் கிளாஸ்

நில்... கவனி... ‘கண்’மணி!

வெயிலில் செல்லும்போது, சருமத்தைப்போலவே கண்களும் புற ஊதாக்  கதிர்வீச்சால் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க, யு.வி புரொட்டக்‌ஷன் (UV protection) சன் கிளாஸ் அணிவது நல்லது. சாலை ஓரக் கடைகளில் விற்கப்படும் கண்ணாடியில் யு.வி பாதுகாப்பு இருப்பது இல்லை. சில கண்ணாடிகள் தரமற்று இருக்கும். இந்தக் கண்ணாடிகளை அணியும்போது, கருவிழி நன்கு விரிந்து, புற ஊதாக் கதிர் பாயும் வாய்ப்பு அதிகம்.  எனவே, சன் கிளாஸ் வாங்கும்போது அதிகக் கவனம் தேவை. சூரிய ஒளி கண்களில் படாதவாறு, பெரிய ஃபிரேம் சன் கிளாஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

கான்டாக்ட் லென்ஸைப் பாதுகாக்க...

கண்ணாடி அணிவது அழகைக் கெடுக்கும் என்பதால், கன்டாக்ட் லென்ஸ் அணிவது உண்டு. ஆனால், இதைப் பராமரிப்பதில் அதிகக் கவனம் தேவை.

சிலிக்கான் ஹைட்ரோ ஜெல் கான்டாக்ட் லென்ஸ்கள் அதிக நீரை உள்ளடக்கியவை. ஆதலால், இதை 10-12 மணி நேரம் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டர் முன் வேலைசெய்பவர்களுக்கு சிறந்த கான்டாக்ட் லென்ஸாக இருக்கும்.

பொதுவாக, 8-10 மணி நேரம் வரைதான் லென்ஸ் அணியலாம். ஆனால், கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள் அதிக நேரம் லென்ஸ் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அவர்கள் சிலிக்கான் ஹைட்ரோ ஜெல் கான்டாக்ட் லென்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடி தூங்கக் கூடாது. முகம் கழுவக் கூடாது. அதுபோல், அழவும் கூடாது.

முன்பு எல்லாம் ஒரு வருடத்துக்குப் பயன்படுத்தக்கூடிய லென்ஸ்கள் வரும். ஆனால், தற்போது தினமும் பயன்படுத்தும் லென்ஸ்கள், ஒரு மாதம் வரை பயன்படுத்தும் லென்ஸ்கள் எனப் பலவகை வந்துவிட்டன.

தினமும் லென்ஸைக் கழட்டி வைக்கும்போது, அதற்கு எனப் பிரத்யேகமாக உள்ள சொல்யூஷனில் கழுவ வேண்டும். லென்ஸ் பாக்ஸில் பழைய சொல்யூஷனைக் கீழே ஊற்றிவிட்டு, புது சொல்யூஷனைப் பயன்படுத்த வேண்டும்.

காலையில் லென்ஸ் அணியும் முன், கைகளை நன்றாகக் கழுவ வேண்டியது அவசியம்.

ஒரு மாதம் வரை பயன்படுத்தக்கூடிய லென்ஸை அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இதனால், தொற்று, எரிச்சல் வரலாம். கண்களும் பாதிக்கலாம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

கண் தானம்

`இறந்த பின்னும் உலகைக் காண அழகான வழி கண் தானம்' என்பார்கள். நம்மால் ஒருவருக்குப் பார்வை கிடைக்கிறது என்பது எவ்வளவு பெருமிதமான விஷயம். இந்தியாவில், 4.6 மில்லியன் நபர்கள் கண் தானத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

கண் தானம் செய்ய, வயது ஒரு தடை இல்லை. கண்களில் உள்ள கருவிழியைத் தருவதைத்தான், நாம் கண் தானம் என்கிறோம்.

இறந்தவரின் உடலில் இருந்து ஆறு மணி நேரத்துக்குள், கருவிழியை எடுத்துப் பொருத்த வேண்டும்.

கண் தானம் செய்தவர், இறந்ததும், கண் மருத்துவமனைக்குத் தெரிவித்தால், அவர்கள் கண்களைப் பெற்றுக்கொள்வார்கள்

வெறிநாய்க்கடி (ராபீஸ்), ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யக் கூடாது.

கண் யோகா

நில்... கவனி... ‘கண்’மணி!

முட்டிபோட்டு வஜ்ராசன நிலையில் அமர்ந்து, இரண்டு கை விரல்களையும் கோத்து, பெருவிரல்களை மேல் நோக்கியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். கண் மட்டத்துக்குச் சற்றுக் கீழாகக் கைகள் இருக்கட்டும். முழங்கைகளை மடித்துக்கொள்ளவும்.

+ பயிற்சி


நிலை 1:
பெருவிரல் நகங்கள் மேல் பார்வையை நிலையாக வைத்துக்கொண்டு, கைகளை வலப்பக்கத்துக் கோடி வரைக்கும் அரை வட்டம் போல கொண்டு செல்ல வேண்டும். தலையை அசைக்காது, கண்கள் மட்டும் பெருவிரலையே பார்க்க வேண்டும். இதை, மூன்று முறை செய்யலாம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

நிலை 2: இரண்டு கைகளையும் கோத்து தொடை மீது வைத்து, பெருவிரல்களின் நக இணைப்பின் மேல் பார்வையை நிலையாக வைத்துக்கொண்டு, தலைக்கு நேர் மேலே சென்று கீழே தொடை வரை கைகளைக்கொண்டு வரவும். இது போல, ஐந்து முறை செய்ய வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

X பயிற்சி

நிலை 1


தொடைக்குக் கீழே பெருவிரல் நக இணைப்பின் மேல் பார்வையை நிலையாக வைத்துக்கொண்டு, கைகளை இடது தொடையில் இருந்து, வலது பக்கத் தோள்பட்டை வழியே, தலை வரை உயர்த்திய பின், கீழே கொண்டுவர வேண்டும். இதுபோல, ஐந்து முறை செய்ய வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

நிலை 2

பெருவிரல் நக இணைப்பின் மேல் பார்வையை நிலையாக வைத்துக்கொண்டு, கைகளை வலது தொடைக்குக் கீழே பக்கவாட்டில் இருந்து இடது தோள்பட்டையை நோக்கித் தலைக்கு மேலாகக் கொண்டு செல்ல வேண்டும். மீண்டும், வலது தொடை நோக்கிக் கீழே கொண்டுவர வேண்டும். கழுத்து லேசாக அசையலாம். இதுபோல ஐந்து முறை செய்ய வேண்டும்.

நில்... கவனி... ‘கண்’மணி!

ஜீரோ பயிற்சி

நில்... கவனி... ‘கண்’மணி!

பெரு விரல் நகக்கண்களின் இணைப்பில் பார்வையை நிலையாக வைத்துக்கொண்டு மூடிய கைகளை கடிகாரச் சுற்றுப் பாதையில் சுற்ற வேண்டும். எந்த அளவு பெரிய வட்டமாகச் சுற்ற முடியுமோ அந்த அளவுப் பெரிதாகச் செய்யலாம். இந்தப் பயிற்சியின்போது கண்கள் அதன் ஓரம் முழுவதும் வட்டமாகச் சென்று வரும். இதுபோல, ஐந்து முறை செய்யலாம். முன்பு செய்தது போல கடிகாரச் சுற்றுப்பாதைக்கு எதிராக ஐந்து முறை சுற்றலாம்.

- பயிற்சி

நில்... கவனி... ‘கண்’மணி!

பெருவிரலை மட்டும் சேர்த்தபடி, கைகளைக் கோக்க வேண்டும். பெருவிரலின் நகங்களில் பார்வையை வைத்துக்கொண்டு, மூக்குக்கு மூன்று அங்குல தொலைவில் முகத்துக்கு அருகில் வைக்க வேண்டும். இப்போது, கையை முழுவதுமாக நீட்டி, முன்னும் பின்னுமாகக் கைகளை நீட்டி மடக்கவும். இதுபோல ஐந்து முறை செய்ய வேண்டும்.

பாம்மிங் (Palming)

நில்... கவனி... ‘கண்’மணி!

கண்களை மூடி அமைதியாக அமர வேண்டும். ஐந்து முறை ஆழமாக மூச்சை விட்டு ரிலாக்ஸ்செய்யவும். உள்ளங்கைகளை நன்றாகத் தேய்த்து, இளஞ்சூடாக ஆன பின் கண்களின் மேல் சுமார் ஒரு நிமிடம் வைக்க வேண்டும்.

கண் சிமிட்டல் (Blinking)

இயல்பாகக் கண்களைத் திறந்தபடி உட்கார வேண்டும். கண்களை, 10 முறை தொடர்ந்து சிமிட்டி, கண்களை மூடி, 20 நொடிகள் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

கண் யோகா பலன்கள்

நில்... கவனி... ‘கண்’மணி!

கண் தசைகளுக்கு நல்ல பயிற்சியைத் தரும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும். தொடர்ந்து செய்துவர, கண்ணாடி அணிவதைத் தவிர்க்கலாம்.

இரண்டு கண்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கிடைக்கும்.

தசைகளுக்கு இருக்கும் அழுத்தம் குறைந்து ஓய்வு கிடைக்கும்.

கண்களுக்கான பயிற்சிகள்

8 போடுதல்

நில்... கவனி... ‘கண்’மணி!

ஓட்டுநர் உரிமம் வாங்கும்போது 8 போடச் சொல்வார்கள். கண்களின் ஆரோக்கியம் மேம்படவும் 8 போடுவது உதவும். இதற்கு, தலையை அசைக்காமல், கண்களால் 8 போட வேண்டும். இப்படி, தினமும் ஐந்து முறை, மெதுவாக, 8 போடுவதால், கண்கள் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கண் சோர்வு நீங்கும்.

கண்களால் வரைதல்

நில்... கவனி... ‘கண்’மணி!

வீட்டில் உள்ள பெரிய சுவரின் முன் உட்கார வேண்டும். உங்களுக்கும் சுவருக்கும் நல்ல தூரம் இருக்க வேண்டும். இந்தப் படங்களைப் பாருங்கள். இரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு, இதை அப்படியே மனதில்வைத்து, வீட்டுச் சுவரில் வரைய முயற்சிசெய்யுங்கள். ஒவ்வொரு படத்தையும் மூன்று முறை வரைய வேண்டும். கண்களுக்கான பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதோருக்கு கண் நலம் காக்க எளிய வழி இது.

கண்களைப் பாதுகாக்கும் உணவுகள்

நில்... கவனி... ‘கண்’மணி!

பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா 3 உள்ளன. ரத்த உற்பத்திக்கு உதவும். கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். இதனால், ஏற்படும் கண் பார்வைத்திறன் குறையாமல் தடுக்கும். தினமும் பொன்னாங்கண்ணிக் கீரையை 48 நாட்களுக்குச் சாப்பிட்டுவர, கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

அடர் பச்சை, மஞ்சள், சிவப்பு எனப் பல வண்ணங்களில் கிடைக்கும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். கீரைகள், நட்ஸ் ஆகியவை கண்களுக்கு நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், பார்வைத் திறனைப் பாதுகாக்கும்.

அகத்திக் கீரை, சின்ன வெங்காயம், தக்காளி,  அரிசி கழுவிய நீர் கலந்து சமைத்து, மாதத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. அகத்தில் உள்ள சூடு தணியும். கண்களுக்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைக்கும்.

நட்ஸில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கண்களுக்கு நல்லது.

முட்டை, மீன்கள் தொடர்ந்து சாப்பிடுவதும் கண்களுக்கு நல்லது.

வயதாகும்போது ஏற்படும் கண் பிரச்னைகள் வராமல், சிட்ரஸ் வகை உணவுகள் தடுக்கும்.

வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் இருப்பதால், தினம் ஒரு கேரட்டை நன்றாக மென்று சாப்பிடலாம். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கேரட் ஜூஸ் குடிக்கலாம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

கோவை இலைப் பொரியல் செய்து சாப்பிடலாம். அதுபோல, கோவைக்காயை வாரத்தில் இரு நாட்கள் சாப்பிடலாம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் கரிசலாங்கண்ணிக் கீரை சூப் செய்து குடித்தால், கல்லீரல் சுத்தமாகும். கண்களுக்குத் தெளிவு கிடைக்கும்.

எள் செடியில் வெள்ளைப் பூக்கள் பூக்கும். தினமும் ஒரு பூவை எடுத்து, பற்களில் படாமல் விழுங்க வேண்டும். இதனால், வாழ்நாள் அதிகரிக்கும். கண் தொந்தரவுகள் வராது. பார்வைத்திறன் மேம்படும்.

உணவில் தேங்காய், தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம். உடல் குளிர்ச்சி அடையும். கண்களில் சூடு இறங்காமல் பாதுகாக்கும்.

நெல் பொரியை வைத்து சூப் செய்து குடித்துவந்தால், கண் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

இரவில் திரிபலா சூரணத்தை இளஞ்சூடான நீரில் கலந்து குடித்துவர மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலால் சிலருக்கு மங்கலான பார்வை இருக்கும். மலச்சிக்கல் தீரும்போது பார்வை தெளிவாகும்.

எண்ணெய் குளியல்

நில்... கவனி... ‘கண்’மணி!

வாரத்தில் இரண்டு நாட்கள், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை மிதமாகச் சூடுபடுத்தி தலை, கூந்தலில் தடவி, அரை மணி நேரம் கழித்து, இளஞ்சூடான நீரில் குளித்துவர வேண்டும்.

மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ் ஆகியவற்றால் ஏற்படும் உடல்சூடு தணியும். கண்களில் அழுத்தம் இருக்காது. கண் சிவந்துபோவது தடுக்கப்படும். உடலின் உஷ்ணம் தணியும்.

கண்கள் கவனம்

நில்... கவனி... ‘கண்’மணி!

கூந்தலுக்கு செயற்கை ஹேர்டை பயன்படுத்த வேண்டாம். டையில் உள்ள அம்மோனியா உள்ளிட்ட ரசாயனங்கள் கண்களைப் பாதிக்கும். பார்வைத்திறன் குறையும்.

கம்ப்யூட்டர், மொபைலில் அதிகப்படியாக ஒளி வெளிப்படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான வெளிச்சம் கண்களின் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும்.

புகை பிடித்தால் ஆப்டிக் நரம்புகள் பாதிப்பு, கண்களில் புரை வளர்தல், வயதாகும் போது வரும் மேக்குலர் டீஜெனரேஷன்  போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கண்களைச் சுற்றிலும் மேக்அப் போடுவதைத் தவிர்க்கலாம். அதிக ரசாயனங்கள் கொண்ட மேக்அப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

மற்றவரின் பவர் கண்ணாடியை அணிவதும் கண்களைப் பாதிக்கும்.

ஃபேஷனுக்காக கலர் கலராக லென்ஸ் அணியும் பழக்கம் இருப்போர், லென்ஸை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. இதனால், கண் அலர்ஜி, தொற்றுக்கள் ஏற்படும்.

குறைந்த வெளிச்சம் உள்ள இடத்தில் புத்தகம் படிப்பது, நுண்ணிய வேலைகளைச் செய்வது, மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் குறைந்தபட்சம் 18 மணி நேரம் உழைக்கும் நம் கண்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. ஆதலால், ஏழு - எட்டு மணி நேரமாவது நல்ல உறக்கம் இருக்கும்படி உங்களது அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள்.

பொது இடங்களில் பயணித்துவிட்டு, கை குலுக்கிப் பேசிவிட்டு கண்களில் கை வைப்பதைத் தவிருங்கள். பெரும்பாலான, கண் தொற்றுக்கள் இப்படித்தான் பரவுகின்றன.

கண்களைப் பாதுகாக்கும் வழிகள்

புருவத்தில் மசாஜ்

நில்... கவனி... ‘கண்’மணி!

குளிக்கும்  முன் இரு புருவங்களிலும் விளக்கெண்ணெயைத் தடவி, மிதமான அழுத்தம் கொடுத்து, கண்களுக்குக் கீழ் உள்ள எலும்பிலும் லேசாக விளக்கெண்ணெய் தடவி மென்மையான மசாஜ் கொடுத்துவர, கண் சோர்வு நீங்கும். கண்கள் புத்துணர்வு அடையும்.

ரோஜா வாஷ்

நில்... கவனி... ‘கண்’மணி!

ரோஜா இதழ்களைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, இளஞ்சூடாக மாறிய பின் முகம், கண்களில் அடித்துவர, கண் சோர்வு நீங்கும். தினமும் மூன்று முறை, சாதாரண நீரைக் கண்கள் மீது அடித்தபடி முகம் கழுவலாம்.

மருதாணி தொப்பி

நில்... கவனி... ‘கண்’மணி!

மருதாணி இலை சிறிதளவு, சின்ன வெங்காயத்தை அரைத்து, இரண்டு கால் கட்டை விரல்களிலும் தொப்பி போல இரவில் வைத்துவிட்டு மறுநாள் காலை கழுவலாம். இதனால், கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். சின்ன வெங்காயம் இருப்பதால் சளி பிடிக்காது.

குட்டுப் பயிற்சி


இரண்டு கைககளிலும் கட்டை விரலை உள் வைத்து, நான்கு விரல்களால் கட்டை விரலை மூடி, புருவங்கள் முடியும் இடத்தில் சின்ன குழி போல இருக்கும். அங்கு, ஐந்து முறை மெதுவாகக் குட்டிக்கொள்ளலாம்.

நீரில்லாமல் வாய் கொப்பளிப்பு

நில்... கவனி... ‘கண்’மணி!

தண்ணீர் இல்லாமல் வெறுமனே வாயில் காற்றை வைத்துக்கொண்டு வாய் கொப்பளிப்பது போல மூன்று நான்கு முறை தினமும் பயிற்சிசெய்தால், முகத்தில் உள்ள நரம்புகள் வலுவாகும். கண்களுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

கண் கழிவை வெளியேற்றும் புள்ளி

நில்... கவனி... ‘கண்’மணி!

காது மடலை அப்படியே தொட்டுக்கொண்டு வாருங்கள். முடியும் இடத்தில் சின்னப் பள்ளம் போல இருக்கும், அந்த இடத்தில்தான் சிலர் பூ வைப்பார்கள். ஏன் அந்த இடத்தில் பூ வைக்கிறோம் என்றால், அது கண், மூக்கு, முகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிற புள்ளி, அந்தக் குழியைத் தொட்டு முகர்ந்து பார்த்தாலே மெல்லிய துர்நாற்றம் வீசும். அந்த இடத்தில் பூ வைப்பது நல்லது. அந்தக் கழிவை பூவின் நறுமணம் உறிஞ்சிக்கொள்ளும்.

கண்களின் மேல் வெள்ளரி பேக்

நில்... கவனி... ‘கண்’மணி!

வெள்ளரிப் பிஞ்சை அரைத்து, அதைப் பஞ்சின் மேல் வைத்து, 20 நிமிடங்கள் கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும். கண் ஓரங்களில் உள்ள அழுக்கும் வெளியேறிவிடும்.

சூப்பர் யோகா தோப்புக்கர்ணம்

இரண்டு காதுகளின் நுனியை இழுத்து, தினமும் 10 முறை தோப்புக்கர்ணம் போடுவதால், பார்வைத் திறன், நினைவுத்திறன் மேம்படும். இதை, சூப்பர் யோகா என்று சொல்லலாம்.

நில்... கவனி... ‘கண்’மணி!

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளைச் செய்துகாட்டுகிறார் செஃப் இரா.கணேசன்.

கேரட் மில்க்‌ஷேக்

நில்... கவனி... ‘கண்’மணி!

தேவையானவை: கேரட் - 2, காய்ச்சிய பால் - 1 கப் , நாட்டுச்சர்க்கரை-2 டீஸ்பூன்.

செய்முறை: கேரட்டை சிறிதாக வெட்டி,  காய்ச்சிய பால் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். தேவைப்பட்டால் ஐஸ் போட்டுப் பரிமாறலாம்.

பலன்கள்: இதில், வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின், கால்சியம் உள்ளன. பார்வைத்திறன் மேம்படும். சருமம் பொலிவு பெறும்.

வெஜ் சாலட்

நில்... கவனி... ‘கண்’மணி!

தேவையானவை: கேரட், பெரிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் - தலா 2, பச்சைமிளகாய், எலுமிச்சம்பழம் - தலா 1, வெள்ளை மிளகுப்பொடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கேரட், பெரிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில், எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, வெள்ளை மிளகுப்பொடி மற்றும் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

பலன்கள்:
சாலட்டில் உள்ள அனைத்துக் காய்கறிகளும் கண்களுக்கு நல்லது. வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளிட்டவை நிறைவாக இருக்கின்றன. இவை, பார்வைத்திறன் மேம்படவும், பாதிப்புகள் வராமல் தடுக்கவும் செய்யும்.

பாதாம் - பேரீச்சை மில்க்‌ஷேக்

நில்... கவனி... ‘கண்’மணி!

தேவையானவை: பாதாம், பேரீச்சம் பழம் - தலா 10, காய்ச்சிய பால் - 1 கப், நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோல்நீக்க வேண்டும். இதனுடன், கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், பால் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பேரீச்சம் பழத்தில் இருக்கும் இனிப்புத்தன்மையே போதுமானது. தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்த்துப் பரிமாறலாம்.

பலன்கள்:
பார்வைத்திறனை மேம்படுத்தும். பாதாம் ரத்தக் குழாய் சுவர்களில் ஏற்படக்கூடிய பாதிப்பைப் போக்குகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க உதவும். ரத்த உற்பத்தி பெருகும்.

முருங்கைக் கீரை சூப்

நில்... கவனி... ‘கண்’மணி!

தேவையானவை: முருங்கைக் கீரை - 1/4 கப், மிளகு - 1 டீஸ்பூன், பூண்டு - 6 பற்கள், சீரகம் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 1 கப், பிரியாணி இலை - 1, அன்னாசிப்பூ - 4, கறிவேப்பிலை, கடுகு, மல்லித்தழை, மஞ்சள் தூள் - சிறிதளவு.  

செய்முறை:
ஒரு கப் நீரைக் கொதிக்கவைத்து, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். கொதிக்கும் நீரில் முருங்கைக் கீரை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். மிளகு, பூண்டு, சீரகம், பிரியாணி இலை, அன்னாசிப்பூ அனைத்தையும் அரைக்க வேண்டும்.

கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து, நன்றாக வதக்கி, கொதிக்கும் கீரையில் சேர்க்க வேண்டும். நன்கு வெந்ததும், உப்பு மற்றும் மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்:
பார்வைக் குறைபாடு, கண் தொடர்பான தொற்றுக்கள், கண் வலி அதாவது, கண் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் போன்றவை நீங்கும். கண்கள் புத்துணர்வு பெறும். சிறந்த மலமிலக்கி என்பதால், வயிறு சுத்தமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரைக்கூட்டு

நில்... கவனி... ‘கண்’மணி!

தேவையானவை: பொன்னாங்கண்ணிக் கீரை - 1 கப், சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், சோம்பு - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5, தேங்காய் (துருவியது) - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பாசிப்பருப்பு (வேகவைத்தது) - 1/4 கப், எண்ணை, உப்பு, கடுகு, உளுந்துப் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
துருவிய தேங்காய் மற்றும் சோம்பை ஒன்றாகச் சேர்த்து அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயைத் தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின்பு, அரைத்த சோம்பு மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, பாசிப்பருப்பு மற்றும் பொன்னாங்கண்ணிக் கீரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை நன்கு வதங்கியதும் இறக்கிப் பரிமாறலாம்.

பலன்கள்: பொன் நிற மேனியைத் தரக்கூடிய கீரை. சருமத்துக்கு நல்லது. பார்வைத்திறனையும் மேம்படுத்தும். அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டுவர, கண் ஆரோக்கியம் மேம்படும்.

- ப்ரீத்தி, தி.கெளதீஸ்

படங்கள்: ச.ஹர்ஷினி,
தே.அஷோக் குமார்,
மா.பி.சித்தார்த்

மாடல்கள்: சத்யப்ரியா, சஞ்சிதா

ரெசிப்பி உதவி: ஆப்பிள் மில்லட், திருச்சி

நில்... கவனி... ‘கண்’மணி!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism