Published:Updated:

மத்த ஃபோபியா இருக்கட்டும்... நோமோஃபோபியா பத்தி தெரியுமா? #Nomophobia

மத்த ஃபோபியா இருக்கட்டும்... நோமோஃபோபியா பத்தி தெரியுமா? #Nomophobia

இந்தக் கட்டுரையை மொபைல் தவிர மற்ற சாதனங்களில் படிப்பவர்கள் உங்கள் மொபைலை பிளைட் மோடில் போட்டுவிட்டு இந்தக் கட்டுரையை வாசிக்கத் தொடங்குங்கள்.

சமீப காலமாக மீம் கிரீயேட்டார்களுக்கு தீனி போடுவதே மொபைல் நெட்வொர்க் கம்பனிகள் தான்.  No network, emergency calls only போன்ற அன்றாட இணைய வாழ்க்கையில் சில விநாடிகளில் கடக்கப்படும் விஷயங்கள், சில நாட்களாக நீடிப்பதும், விரைவில் சீராகும் என்னும் போலி நம்பிக்கைகளும் இப்போதைய ட்ரெண்டிங். " India's fastest network!" , " We are adding a tower every hour!" என்பதெல்லாம் இப்போது தங்கதுரையின் பழைய ஜோக் ஆகிவிட்டது. இதெல்லாம் சரி.. இப்படி நெட்வொர்க் கவரேஜ் இல்லாமலோ இல்லை உங்கள் மொபைல் போன் இல்லாமலோ போனால் உங்கள் நாள் என்னாகும்? இந்த உச்சக்கட்ட பயம் தான்" NOMOPHOBIA" .

"No Mobile Phobia" என்னும் NOMOPHOBIA கண்டிப்பாக நம்மில் பலருக்கு இருக்கும். காரணம் நாம் அனைவரும் இந்த போன்களுக்கு அடிமையாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உறவுகளைப் பிரிந்து இருக்க முடியாத காலம் போய், போன்களைப் பிரிந்து இருக்க முடியாத காலத்தில் இருக்கிறோம்.  பிரைமரி ஸ்கூல் முதல் பல்லு போன பாட்டி தாத்தா வரை அனைவருக்கும் தேவை ஆண்ட்ராய்டும் அன்லிமிடெட் இணையமும். உங்கள் போன் ஹாங் ஆகும் போதும், இந்த நெட்வொர்க் கப்பனிகளுக்குள் நடக்கும் "முதலில் ஓடப் போவது யார்" விளையாட்டும் ஏற்றும் டென்ஷன் தான்  NOMOPHOBIA. ஆனால் இது எல்லாருக்கும் இருக்குனு சொல்லிடமுடியாது. அப்படியென்றால் இதை எப்படி தான் தெரிந்து கொள்வது? .  நோமோஃபோபியா என்பது பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பெயர் தானே தவிர,  இன்னும் நோமோஃபோபியா, ஃபோபியா வகை பீதிகளுக்குள் சேர்க்கப்படவில்லை. எனினும் மொபைல் நம் கைகள் இல்லை என்னும் பயம் தான் , தற்போதைக்கு நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரே அச்சம். 


 NOMOPHOBIA அறிகுறிகள்: 

அடிக்கடி போனை செக் செய்வது, காலையில் எழுந்ததும் பல் கூடத் துலக்காமல் போன் நோண்டுவது, சாப்பிடும் போதும் பிறரிடம் உரையாடும் போதும் போனை உபயோகிப்பது, சுற்றம் பார்க்காமல் எங்கும் போனை வைத்து டைம்பாஸ் செய்வது, கண்ணுறங்கும் முன்பு வரை போனை பிரியாதிருப்பது போன்றவை. இதில் உடச்சகட்டமான அறிகுறிகள் போன் பேட்டரி டவுன் ஆனதும் உயிரே போனது போல உணர்வதும், ரெஸ்ட்ரூமில் கூட போனை உபயோகிப்பதும், போன் இல்லாதபோதோ நெட்வொர்க் இல்லாதபோதோ தேவையில்லாமல் பயப்படுவதும், இதைப் படித்து முடிப்பதற்குள் இரண்டு மூன்றுமுறை போனை செக் செய்வதும் தான். இதில் தொண்ணூறு சதவிகிதம் நாம் பின்பற்றும் செயல்கள். இது தொடர்ந்தால் இது கொண்டு செல்லும் பாதையும் உண்டு பண்ணும் விளைவுகளும் மிக மோசமானதாகும். தேவையற்ற பயமும் அதனால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், கவனக்குறைவு, செய்யும் செயலில் முறையின்மை, போனின் வெளிச்சத்தால் கண்ணிற்கு ஏற்படும் பாதிப்பு, கண்களைச் சுற்றி கருவளையம், முறையற்ற மெலடோனின் சுரப்பு, தூக்கமின்மை, மனிதர்களிடம் இருந்து விலகுவது போன்றவையே இதன் பாதிப்புகள். நடப்பு ரீதியான பாதிப்புகளை சிலரிடம் கேட்டறிந்தோம்.

பேராசிரியர் திருமதி ஜே.மர்லின் சிந்தியாவிடம் கேட்டபோது "எனக்கு போனில் முக்கிய வேலையே இ-நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் டிவிட்டர் தளங்களில் இருந்து உடனுக்குடன் அப்டேட்ஸ் பெறுவது தான். அதைத் தவிர இணையத்தில் பில்ஸ் கட்டுவது, மணி ட்ரான்சாக்க்ஷன்ஸ் மட்டும் தான். என்ன இருந்தாலும், போன் இல்லைன்னா டி.வி, விடியோ கேம்ஸ் ஸ்டேஷன் அப்படின்னு டைிம்பாஸ் செய்ய பழகிக்குவாங்க. எல்லாருக்கும் இந்த வாழ்க்கைக்குப் பழகி போயாச்சு!" என்றார்.

 "இணையம் இல்லைனா ரோபோட் செய்யமுடியாதே! வாட்ஸப் ப்ரெண்ட்ஸ் குரூப்ல பார்வர்ட் மெசேஜ்ஸ் படிச்சா தானே வீட்ல அக்கா கிட்ட மொக்க கேள்வி கேட்டு டார்சர் பண்ணமுடியும்!" என்று சிரிக்கிறான் மூன்றாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்.

ஸ்கூல் பசங்களே இப்படின்னா, காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் கதி என்ன? "போன் இல்லைன்னா ரொம்ப கஷ்டம் பாஸ்! காலேஜ்ல கொடுக்கிற அசைன்மெண்ட்ஸ் இன்டர்நெட் இல்லாம முடியுமா? நம்ப ஸ்டேட்டஸ் போடறோமோ இல்லையோ, அடுத்தவங்க ஸ்டேட்டஸ் பாக்கவாது போனும் இணையமும் வேணும். இந்த காலத்துல பேசாமலே நலம் நலமறிய ஆவல்னு லெட்டர்ல யாரு பாஸ் லவ் பண்றங்க? எல்லாமே இன்டர்நெட் தான்! டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்லாம் போன் இல்லாம சான்ஸே இல்லை!" என்று புலம்புகின்றனர்.

இதெல்லாம் சரி, போன் நெட்வொர்க் கம்பனியின் டிஸ்ட்ரிபியுடர் ஒருவரோ, " இருக்குற ஏஜென்சீஸ்க்கு  OTP போடவாவது இன்டர்நெட் வேணும்ல. இந்தப் பிரச்சனையால் மன்த்லி டார்கெட்லாம் குறைஞ்சு, பிசினஸ் நஷ்டத்துல ஓடுது. நாங்களும் இன்னும் ஆறு மாசம் ஆறு மாசம்னு பொறுத்துப்பாத்தது தான் மிச்சம்!" என்று உண்மையை உடைகிறார்.

இந்த அடிமைத்தனத்தில் இருந்து மீள பெரிய அளவில் ஆலோசனைகள் தேவையில்லை. தினமும் போன் உபயோகிக்கும் நேரத்தை படிப்படியாக குறைப்பது, நண்பர்கள் குடும்பத்தினர்களுக்கு சிறிது நேரத்தை ஒதுக்குவது, அலாரம் என்று சாக்கு சொல்லி போன் வைத்துக்கொள்வதைவிடக் கடிகாரங்களை உபயோகிப்பது போன்ற சிறு சிறு மாற்றங்களே போதுமானது. 

 இந்தக் கட்டுரையை படித்து முடிப்பதற்குள் நீங்கள் போனை எடுத்துப் பார்த்திருந்தால், அந்த டெஸ்ட் மற்றும் NOMOPHOBIA விழிப்புஉணர்வு முற்றிலும் உங்களுக்காகவே!

அடுத்த கட்டுரைக்கு