அடுக்களையிலேயே அழகாகலாம் - 8

``கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. கடுகு உருவத்தில் சிறியது என்றாலும் அதன் நன்மைகள் ஏராளம். குறிப்பாக, இதயத்துக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்லாமல் அழகுக்கும் கடுகு பல நன்மைகள் தருவதைப் பார்ப்போம்'' என்று கூறும் அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி, அவற்றைப் பற்றி விலாவாரியாக விளக்குகிறார்...

முகம் பொலிவு பெற...

ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு டீஸ்பூன் பயத்தம்பருப்பை 4 டீஸ்பூன் பாலில் இரவு ஊறவைக்கவும். காலை அதை அம்மியில் அரைத்து (மிக்ஸியில் கடுகு அரைபடாது) முகத்தில், கழுத்தில் பேக் போடவும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பளிச்சென மின்னும்.

சன் ஸ்க்ரீன்

நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து நன்கு காய்ச்சி இறக்கவும். அதில் 100 கிராம் கடுகுப் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு நாள் கழித்து மேலே உள்ள எண்ணெயை வடிகட்டிவிட்டு, கீழே உள்ள தைலத்தை சிறிதளவு எடுத்து முகத்தில், கைகளில் தேய்த்துக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து மெல்லிய துணியால் துடைத்து எடுக்கவும் (தண்ணீர் பயன்படுத்த வேண்டாம்). வெயிலில் செல்லும் முன்னர் இதை சன்ஸ்கிரீனாகப் பயன்படுத்தலாம். இது எண்ணெய்ப் பசை (க்ரீஸி) இல்லாத சன் ஸ்க்ரீனாக இருக்கும்.

கரும்புள்ளிகள், சன்டேன், தழும்புகள் நீக்க..!

ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், 5 சொட்டுகள் எலுமிச்சைச் சாறு... இவை அனைத்தையும் சேர்த்துக் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டுக்கொள்ள, சன்டேன், கரும்புள்ளிகள் நீங்கும். இதை வாரம் மூன்று முறை செய்துவரலாம்.

சிவப்பழகு பெற..!

ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய் இரண்டை யும் கலந்துகொண்டு, காட்டன் துணியில் தொட்டு முகத்தில் அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் கொடுத்து பின்னர் குளிக்கவும். நாளடைவில் நிறம் கூடும்.

உதடுகள் மிருதுவாக..!

அடுக்களையிலேயே அழகாகலாம் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக கடைகளில் கிடைக்கும் லிப் கிளாஸ், லிப் பாம் பயன்படுத்தும்போது சிறிது நேரத்தில் உதடுகள் உலர்ந்துவிடும் என்பதுடன், வெடிப்புகளும் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும். அவற்றுக்குப் பதிலாக கடுகு எண்ணெயை உதட்டில் தினம் அப்ளை செய்துவர, உதடுகள் உலராது, வெடிப்புகள் ஏற்படாது என்பதுடன் மிருதுவாகவும் இருக்கும்.

சுருக்கங்கள் நீங்க..!

25 வயது தாண்டிவிட்டாலே சிலருக்கு சரும சுருக்கங்கள் வர ஆரம்பமாகிவிடுகின்றன. அதற்கு ஒரு டீஸ்பூன் ஆலோவேரா ஜெல், ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் சேர்த்து அரைத்து, முகம் முழுக்க மாஸ்க் போட்டுக் கழுவி வர, சுருக்கங்கள் நீங்கும்.

இதழ்கள் கருமையாகாமல் தவிர்க்க..!

தேன் அரை டீஸ்பூன், கடுகு எண்ணெய் அரை டீஸ்பூன் சேர்த்துக் கலந்து இதழ்களில் தடவிவர, அது கருமையாவது தவிர்க்கப்படும்.

அடுக்களையிலேயே அழகாகலாம் - 8

பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கு...

பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு எண்ணெய் 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து நன்கு சுட வைக்கவும். அதில் காட்டனைத் தோய்த்து தலை முழுக்க தடவி நன்றாக சீவவும். பின்னர் கொதிக்கும் நீரில் வேப்பந்தளிர் போட்டு எடுத்து, அந்த தண்ணீரில் காட்டன் டவலை நனைத்து எடுத்து தலை முழுக்க ஒற்றி எடுக்கவும். இவ்வாறு 10 நாட்களுக்கு ஒரு முறை செய்துவர, தலை சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளும் நீங்கும்.

நரையைத் தடுக்க... நீக்க!

100 மில்லி கடுகு எண்ணெய், 50 கிராம் மருதாணி இலை, 50 மில்லி தேங்காய் எண்ணெய், 50 கிராம் வெட்டிவேர்... இவை அனைத்தையும் சேர்த்து வெயிலில் தொடர்ந்து காயவைத்து எடுக்கவும். பின்னர் தினமும் தலைக்கு தேய்த்து வர, நரை ஏற்படுவதைத் தடுப்பதோடு, இளநரையும் நாளடைவில் கருமையாகும்.

உடல் பொலிவு பெற..!

கடுகு எண்ணெய் கால் கப், நல்லெண்ணெய் கால் கப், ஆல்மண்ட் எண்ணெய் கால் கப் சேர்த்து உடலில் மசாஜ் கொடுத்துக் குளித்தால், உடல் பொலிவு பெறுவதோடு சோர்வால் ஏற்படும் உடல் வலியும் நீங்கும்.

தா.நந்திதா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism