Published:Updated:

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

மூலிகை பானம் - நலம் நம் கையில்!
பிரீமியம் ஸ்டோரி
மூலிகை பானம் - நலம் நம் கையில்!

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

Published:Updated:
மூலிகை பானம் - நலம் நம் கையில்!
பிரீமியம் ஸ்டோரி
மூலிகை பானம் - நலம் நம் கையில்!
மூலிகை பானம் - நலம் நம் கையில்!

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றும், `வரும்முன் காப்போம்' என்றும் ஆரோக்கியம் பேசும் பழமொழிகள் அதிகம் உள்ள நாம் நாட்டில்தான், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

பெரும்பாலான வீடுகளின் பட்ஜெட்டில் கணிசமான தொகை மருத்துவச் செலவுகளுக்கே போய்விடுகிறது.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நம் ஊரிலேயே விளையக்கூடிய, எளிதாகக் கிடைக்கும் சில அற்புத மூலிகை பானங்களை அன்றாடம் எடுத்துக்கொண்டாலே, நோயற்ற வாழ்வு நம் வசமாகும்.

கான்கிரீட் காடாகிவிட்ட நகரமயமாக்கல் வாழ்வில், அழகுச்செடி வளர்ப்பது ஃபேஷனாகிவிட்டது. இந்த அழகுச்செடிகளுடன் சில மூலிகைச் செடிகளையும் வீட்டிலேயே வளர்ப்பதன் மூலம், அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.

வீட்டைச் சுற்றி உள்ள நிலத்திலும் பால்கனியிலும் மூலிகைகளை வளர்க்கலாம். நமது வீட்டையே மூலிகை இல்லமாக்கலாம்.

இந்தச் செடிகளின் விலையும் குறைவுதான்.  சுமார், 100 ரூபாய்க்கும் கீழேயே மருத்துவக்குணம் நிறைந்த, எண்ணற்ற மூலிகைச் செடிகள் கிடைக்கின்றன. மாற்றத்துக்கான எளிமையான வழி மூலிகைகள்தான். இனி, அஞ்சறைப்பெட்டியில் மூலிகைகளையும் சேமித்துவைப்போம்.

நலம் தரும் மூலிகை பானங்களை எப்படித் தயாரிப்பது, அதன் பலன்கள் என்னென்ன என விளக்குகிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

நம் உடலில் தினமும் ஏராளமான கிருமித் தாக்குதல், புற்றுநோய் செல் தாக்குதல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தடுத்து, உடலைக் காக்கும் மிகப்பெரிய பணியைச் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான், நோய்கள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு சக்தியை மாத்திரை, மருந்துகளால் பெற முடியாது. சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, போதுமான அளவு தூங்குவது, சரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, உடல் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது போன்றவற்றால் பெறலாம். இவை, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை உறுதிப்படுத்தி, உடலை பலப்படுத்தும். அதேபோல, அதிகாலை வெயில் நம் உடலில் வைட்டமின் டி சத்து உற்பத்தியாக உதவும்.

கோல்டன் டிரிங்க்

தேவையானவை: மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) - சுவைக்கு ஏற்ப, பால் - 1 டம்ளர், திரிகடுகப் பொடி - 10 மி.கி (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவில் கலந்ததுதான் திரிகடுகப் பொடி.)

செய்முறை: பாலை காய்ச்சி, மஞ்சள் தூள், பனை சர்க்கரை, திரிகடுகப் பொடியைக் கலந்து, தினமும் அருந்தலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

சளி, காய்ச்சல் இருப்பவர்கள் குடித்துவர, காய்ச்சல் குணமாகும். சளித் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

சுக்கு, கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தம் கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளும்.

விஷத்தை முறிக்கும் சக்தி மிளகுக்கு உண்டு. உடலில் உள்ள தொற்றுகளை நீக்கும்.

திப்பிலி, நுரையீரலில் உள்ள சளியைப் போக்கும். இளைப்பு பிரச்னை (Wheezing) சரியாகும். வயிற்றில், பசிக்காக சுரக்கும் என்சைம்களை சீராக சுரக்கவைக்கும்.

கல்லீரல் பாதிப்பைச் சரியாக்கும்.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பாலை கொடுத்துவர, பசியைத் தூண்டி, உணவைச் சாப்பிடத் தூண்டும்.

கிரீன் டானிக்

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

தேவையானவை: துளசிச் சாறு - 50 மி.லி, அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு) - 100 கிராம், நெல்லிக்காய் - 5.

செய்முறை:
துளசி இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, 50 மி.லி அளவுக்குச் சாறு எடுக்கவும். அதேபோல, நெல்லிக்காயை விதை நீக்கி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்க வேண்டும். அமுக்கிரா கிழங்கைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளரில் அமுக்கிரா பொடி, துளசிச் சாறு, நெல்லிச் சாற்றை ஊற்றி, நன்கு கலக்க வேண்டும். இதனை அப்படியே அருந்தலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

துளசியில் உள்ள யூஜெனால் (Eugenol) என்ற ரசாயனம், வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படக்கூடியது.

அமுக்கிராவில் 150-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள், ஊட்டச்சத்துக்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, மூளைக்கு நல்லது. குழந்தைகள் குடித்துவர, நினைவுத்திறன் பெருகும்.

தினமும் நம் உணவில் அமுக்கிரா சேர்த்தால், எந்த நோயும் நம்மை அணுகாது.

குழந்தைகளுக்கு தினமும் அமுக்கிரா கிழங்குப் பொடியைச் சாப்பிடக் கொடுக்கலாம். பால், ஜூஸ் என ஏதாவது ஒன்றில் கலந்து கொடுக்கலாம்.

அமுக்கிராவை `காயகல்ப மருந்து’ எனலாம். நரை, திரை, மூப்பு, பிணியில் இருந்து காக்கும் நெல்லியும் ஒரு காயகல்ப மருந்துதான்.

அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

பருமனான குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட...

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

5-15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உடல்பருமனாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப் பழக்கங்களில் மாற்றம் போன்றவற்றால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இவர்கள், கொழுகொழுவென இருக்கிறார்களே தவிர, ஆரோக்கியம் கிடையாது.

இளம் வயதிலேயே உடல்பருமனாக இருந்தால், இளமையிலேயே சர்க்கரை நோய், இதய நோய்கள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்க, எடை குறைப்புக்கான பொடி இதோ...

கொழுப்பைக் கரைக்கும் பொடி

தேவையானவை: ஆளிவிதை (ஃபிளாக்ஸ் சீட்ஸ்), சீரகம், வெந்தயம் - தலா 100 மி.கி.

செய்முறை: ஆளிவிதை, சீரகம், வெந்தயம் மூன்றையும் சேர்த்து அரைக்க வேண்டும். காலை தூங்கி எழுந்ததும், ஒரு டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துவரலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

தொடர்ந்து 10 நாட்கள் அருந்தினாலே அரை கிலோ வரை எடை குறையும். மூன்று மாதங்களில் நல்ல பலனை உணர முடியும்.

ஆளிவிதையில் உள்ள சத்துக்கள் இதயத்தைப் பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்கும்.

வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து.  ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாய் முதல் மலக்குடல் வரை உள்ள செரிமான மண்டல உறுப்புகளை மேம்படுத்தி, நோய் பாதிப்பில் இருந்து காக்கும்.

புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயலாற்றும்.

தொப்பை குறைய - ஆளிவிதை மோர்

தேவையானவை: ஆளிவிதை - 1 டீஸ்பூன், மோர் - ஒரு டம்ளர்.

செய்முறை: ஆளிவிதையைப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்துவரலாம். உப்பு சேர்க்கக் கூடாது.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

இடுப்புச் சதை கரைந்து, கட்டுடலாக மாறும். உடல் எடை குறையும்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.

நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதில் அதிகம்.

நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கெட்ட கொழுப்புக் கரையும்.

மதிய வேளையில் தினமும் இந்த மோரைக் குடித்துவர, ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஆயுள் கூடும்.

சருமத்துக்கான சிறந்த கிளென்சர் இந்த டிரிங்க்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

ஒரு வாய் சோறு

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

மதிய உணவைச் சாப்பிடும் முறையில் நம் பாரம்பரியம் மறைந்துவிட்டது. இன்றைக்கு விதவிதமான உணவுகளைச் சாப்பிடுகிறோம். `மதியம், முதலில் எடுக்கவேண்டியது என்ன?’ என்று கேட்டால், சப்பாத்தி, நாண், இனிப்பு, சாலட் என்ற பதில்களைத்தான் பலரும் சொல்கின்றனர். இவை, நம் முதல் உணவு அல்ல. நம் பாரம்பரிய மருத்துமுறையில் `ஒரு வாய் சோறு’ என்று சிறு கவளம் தருவார்கள். இதை உண்பதால், உடலில் உள்ள கிருமிகள், பூச்சி, புழுக்கள் அழியும். குடல் சுத்தமாகும்.

தேவையானவை:
மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சீரகம் - தலா 50 மி.கி, பெருங்காயம், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு, சாதம் - 50 மி.கி.

செய்முறை: சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடித்து, கலந்து வைக்க வேண்டும். சூடான சாதத்தில், ஒரு டீஸ்பூன் பொடியைப்போட்டு, சிறிது நல்லெண்ணெய் விட்டு, பிசைந்து சாப்பிடலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

மணத்தக்காளி, எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். என்ன பிரச்னையாக இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும்.

சுண்டைக்காய், வயிற்றுப் புழுக்களை நீக்கும்.

தொடர்ந்து ஹோட்டலில் சாப்பிடுவோருக்கு, பெருங்குடல் நுண்ணுயிரிகளால் ஏற்படும் வயிற்றுவலி தீரும்.

பணிக்குச் செல்வோர்கூட ஒரு சிறிய கப்பில் இந்த சாதத்தைக் கலந்து எடுத்துச் செல்லலாம்.
வாதம், பித்தம், கபம் சமநிலையாகும்.

உடலுக்குச் சிறந்த டீடாக்ஸ் முறை இது.

2 இன் 1 டீ

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

நம் உடலில், மழைக் காலங்களில் கபம் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். இதைச் சரிசெய்யும் பானம்தான் புதினா மூலிகைத் தேநீர். சோர்வாக இருக்கும்போது இதைப் பருகினால், உடனடி உற்சாகம் கிடைக்கும்.

புதினா மூலிகை தேநீர்

தேவையானவை:
புதினா - 1 கப், பட்டை - 1 துண்டு, பனை சர்க்கரை - சுவைக்கு ஏற்ப, டீத்தூள், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: நீரைக் கொதிக்கவைத்து, டீத்தூளைப் போட வேண்டும். பிறகு, எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள், பட்டை, பனை சர்க்கரை போட்டு, ஒரு சில நிமிடங்கள் கழித்து, வடிகட்டி அருந்தலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

உடனடிப் புத்துணர்வை அளிக்கும்.

அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவோர், அவசியம் புதினா டீ குடிக்கலாம்.

வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைவாக உள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும்.

மனஅழுத்தம், மனச்சோர்வு நீங்கும்.

தலைவலியைப் போக்கும்.

தாமிரம், கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் கிடைக்கும்.

வெண்புள்ளிகள் வராமல் தடுக்கும்.

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் தொந்தரவுகளைத் தடுக்கும்.

பெண்களுக்கு 40 வயதுக்குப் பிறகு ஏற்படும் உடல் உபாதைகளைத் தடுக்கும்.

இன்சுலின் சாலட்

தேவையானவை: இன்சுலின் செடி இலை - 1, ஊறவைத்த வெந்தயம் - 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.)

செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த வெந்தய நீரைக் குடிக்க வேண்டும். காபி, டீ குடிக்கக் கூடாது.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

இன்சுலின் செடியின் பெயர் கோஸ்டம் (Kostum) வீட்டில் செடி வளர்க்க முடியாதவர்கள், நாட்டுமருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.

இதில் உள்ள கோரிக் ஆசிட், கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டும். இன்சுலின் சுரக்க உதவும்.

வெந்தயம், நார்ச்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. இதயத்துக்கு நல்லது. மலச்சிக்கல் தீரும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆவாரை - நெல்லி டிகாக்‌ஷன்

150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாகச் சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர்விட்டு அரைத்து, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

கணையத்தைச் சரிசெய்து, இன்சுலின் சுரப்பை சீராக்கும். வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.

ஆவாரம் பூவில் உள்ள கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம் புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும்.

ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும்.

ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்கும்.

பார்வைக்குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.

கணையத்தைப் பலப்படுத்தும் உணவுகள்...

காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்துவருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில், வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே.

நாவல்பழ சூப்

தேவையானவை: வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - 100 மி.லி., நாவல்பழம் - 100 கிராம்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு, வெந்தயத்தைப் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பிறகு, சுத்தம்செய்து, விதை நீக்கப்பட்ட நாவல் பழத்தைப் போட வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைத்துவிடவும். இதனை அப்படியே வடிகட்டி சூப் போல குடிக்கலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

இதயத்துக்கு நண்பன் பொட்டாசியம். இது, நாவல் பழத்தில் நிறைவாக உள்ளது. 100 மி.கி நாவல் பழத்தில், 55 மி.கி பொட்டாசியம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

இதில் உள்ள சத்துக்கள், மூளையில் உள்ள ரத்தக் குழாய் சுவர் அடர்த்தியாகாமல் பார்த்துக்கொள்ளும். இதனால், பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைகிறது.

இதன் துவர்ப்புச் சுவை, கணையத்துக்கு நல்லது. இன்சுலின் சுரக்க உதவும்.

மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரலின் நண்பன் நாவல்பழம்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்.

எலும்புகளை உறுதிசெய்யும்.

ஜீரணம் தொடர்பான பிரச்னையைக் குணப்படுத்தும்.

அதிகப்படியான ரத்தப்போக்கு

இம்பூரல் டிகாக்‌ஷன்

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

தேவையானவை: இம்பூரல் மூலிகை - 50 கிராம், அதிமதுரம் - 1 துண்டு, நீர் - 150 மி.லி.

செய்முறை: ஒரு பாத்திரத்தில், தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். இம்பூரல் இலைகளைக் கழுவி, சுத்தம் செய்து தண்ணீரில் போடவும். இதில், ஒரு துண்டு அதிமதுரம் போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும். குறைந்த தணலில் இருப்பதால், இதன் சத்துக்கள் தண்ணீரிலேயே இருக்கும். 10 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி அருந்தலாம்.

வெறும் வயிறு அல்லது சாப்பிட்ட மூன்று மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். தினமும் இரண்டு முறை குடிக்கலாம். குழந்தைகளுக்கு 15 மி.லி., பெரியவர்களுக்கு 100 மி.லி அளவில் தரலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

ரத்தக் கசிவை நிறுத்தும் 22 வகையான சத்துக்கள் இம்பூரல் செடியில் இருப்பதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாதவிலக்கு சமயத்தில் நான்கு நாட்களுக்கு மேல் ரத்தப்போக்கு இருந்தால், இதைப் பருக, மாதவிலக்கு சீராகும்.

புற்றுநோயாளிகளுக்குக் கொடுக்கலாம், ரத்த வாந்தி எடுப்பது குறையும்.

இந்த டிகாக்‌ஷனில் இனிப்பு இருப்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இருமல், சளி, இளைப்புப் பிரச்னைகள் சரியாகும்.

உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் (Inflammation) பிரச்னைகள்கூட சரியாகும்.

ரத்தசோகை நோய் சரியாகும்.

மூலம் பிரச்னை சரியாகும்.

மாத்திரைகள் அலர்ஜியாகும் சமயத்தில் ரத்த வாந்தி ஏற்பட்டால், அதற்கும் சிறந்தத் தீர்வு இது.

காசநோய், புற்றுநோயாளிகளுக்குச் சிறந்த மருந்து இந்த இம்பூரல் டிகாக்‌ஷன்.

சைனஸ் தலைவலி

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

முகத்தில் மொத்தம் எட்டு சைனஸ் அறைகள் உள்ளன. அதில் நெற்றிப் பகுதியில் இரண்டு சைனஸ் அறைகள் அமைந்துள்ளன. சைனஸ் அறை என்பது, ஜன்னல்களைக்கொண்ட, அறைபோல இருக்கும். ஏதேனும், பிரச்னையால் சைனஸ் அறை மூடினால், அறைக்குள் சளி கோத்துக்கொள்ளும். இதனால், மூக்கு, கன்னம், தலை, நெற்றி ஆகிய இடங்களில் வலி ஏற்படும். சைனஸ் தலைவலியில் இருந்து மீள ஓர் அற்புத தைலம் உள்ளது.

தலைவலித் தைலம்

தேவையானவை: கொட்டை மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், ஓமம், சாம்பிராணி - சம அளவு.

செய்முறை: இந்த நான்கையும் சம அளவில் எடுத்து, ஒருநாள் வெயிலில் காயவைத்துப் பொடியாக்கி, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு இந்தப் பொடியை எடுத்து தண்ணீரில் குழைத்து, முகத்தில் எந்த இடத்தில் சைனஸ் வலி வருகின்றதோ, அங்கு தடவ வேண்டும். இரவு நேரத்தில், வலி இருக்கும் இடங்களில் தடவி, காலையில் தூங்கி எழுந்தவுடன் கழுவிக்கொள்ளலாம். தொடர்ந்து சைனஸ் வலி இருப்பவர்கள், தண்ணீருக்குப் பதிலாக இஞ்சிச் சாற்றுடன் இந்த பவுடரைக் கலந்து, வலி இருக்கும் இடத்தில் பூசலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

ஆன்டிவைரலாகச் செயல்படும்.

அதிகமான தும்மல், காலைத் தும்மல், முக வீக்கம், சைனஸ் தலைவலி ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

தலைக்குக் குளித்த பிறகு சிலருக்குத் தலைவலி வரும். கூந்தலை உலர்த்திய பிறகு, இந்த தைலத்தை ஒரு சிட்டிகை எடுத்து, உச்சந்தலையில் ஒரு பொட்டுபோல வைக்கலாம். இதனால், தலைவலி வராது.

அனைத்துவித தலைவலிகளையும் போக்கக்கூடிய அற்புத மருந்து.

சருமத்துக்கான கூல் டிரிங்க்

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

தேவையானவை: கற்றாழைத் துண்டுகள் - 4-5, வெள்ளரித் துண்டுகள் - 5-6, இளநீர் - 1 டம்ளர், எலுமிச்சைச் சாறு - 10 சொட்டு, இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கற்றாழையை நறுக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை, குழாய் நீரில் ஐந்தாறு முறை கழுவ வேண்டும். இளநீர், வெள்ளரி, கற்றாழையின் சதைப்பகுதி ஆகியவற்றைக் கலந்து, மிக்ஸியில் அரைத்து டம்ளரில் ஊற்றவும். ஒரு சிட்டிகை இந்துப்பு போட்டு, எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம். (தண்ணீர் ஊற்றத் தேவை இல்லை.)

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

இதைக் குடித்துவந்தால், சருமம் வறட்சி ஆகாது; உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் சரியாகும்.

வாய்ப் புண்கள், வயிற்றுப் புண்களைச் சரிசெய்யும். அல்சர் இருப்பவர்கள் சாப்பிட்டுவர, புண்களின் வீரியம் குறைந்து, படிப்படியாகக் குணமாகும்.

கோடையில், முகத்தில் ‘கொலாஜன்’ சத்துக் குறைவதால், இந்த டிரிங்கைக் குடித்துவந்தால், கொலாஜனை மீட்டெடுக்க முடியும். உடலும் குளிர்சியாகும்.

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று வராமல் தவிர்க்கப்படும். சிறுநீர் கழிக்கும்போது வரும் எரிச்சல் சரியாகும்.

வெயிலில் எனர்ஜி கொடுக்கக்கூடியது பொட்டாசியம். இது இளநீரில் அதிகமாக உள்ளது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுவது எலுமிச்சைச் சாறு. வெயிலில் சோர்வடையாமல் பாதுகாக்கும்.

ரத்தசோகை

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிற நோய், ரத்தசோகை. ஐந்து ஆண்டுகள் வரை ரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு இதய நோய் சீக்கிரமே வந்துவிடும். இந்தியாவில், பல பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இளம் வயதுப் பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னை இருப்பதால், அவர்களின் மாதவிலக்கு சுழற்சி, கருவுறும் சமயம், கர்ப்ப காலம், பிரசவத்துக்குப் பின்னர், சிசுவின் ஆரோக்கியம் போன்ற அனைத்துமே சிக்கலாக அமையும்.

அயர்ன் சிரப்

தேவையானவை: கறிவேப்பிலை - 100 கிராம், நெல்லிக்காய் - 5, தேன் - சுவைக்கு ஏற்ப.

செய்முறை: கறிவேப்பிலையில் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, ஒரு கப் அளவுக்குச் சாறு எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.  அதே அளவில் நெல்லிச் சாற்றையும் கலந்து, 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிட வேண்டும். கெட்டிப் பதத்தில் வந்ததும், அடுப்பை அணைக்க வேண்டும். பிறகு, தேன் கலந்து அருந்தலாம். தினந்தோறும் இதனைக் குடித்துவரலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

கறிவேப்பிலையில் இரும்புச் சத்து உள்ளது. அதைக் கிரகிக்க நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உதவும்.

வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை நீங்கும்.

நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

கொதிக்கவிடுவதால் நெல்லியின் வைட்டமின் சி சத்து நீங்காது. நெல்லிக்காயை எந்தவிதத்திலும் சாப்பிடலாம். சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.

சிறந்த நோய் எதிர்ப்பு பானம் இது. குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம்.

முடி வளர்ச்சி அதிகமாகும்; கருமையான கூந்தலாக மாறும்; முடி உதிர்வது தடுக்கப்படும்.

கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் அருந்தலாம்.

பற்கள்

தினமும் இருமுறை பல் துலக்கி, 10 முறை வாய் கொப்பளிப்பதுதான் சரியான முறை. மூலிகைகளால் பற்களை வலுப்படுத்த முடியும். நோய்கள், தொற்றுக்கள் வராமல் பாதுகாக்க முடியும்.

மூலிகைப் பற்பொடி


தேவையானவை: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் - சம அளவு.

செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் சம அளவில் எடுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு தினமும் பல் துலக்கலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

இதில் உள்ள வைட்டமின் சி ஈறுகளுக்கு மிகவும் நல்லது. பற்சொத்தை வராமல் தடுக்கும்.

கடுக்காயில் உள்ள இரும்புச்சத்து, பற்கள் விழாமல் பாதுகாக்கும்.

தொண்டையில் தொற்று அல்லது தொண்டை வலி, டான்சிலிடிஸ், விழுங்கும்போது வலி போன்ற அனைத்துக்கும் சிறந்த தீர்வு அளிக்கும்.

வாய் துர்நாற்றம் இருப்பவர்கள், இந்தப் பற்பொடியை வெந்நீரில் கலந்து கொப்பளித்துவர, பிரச்னை சரியாகும்.

ஹெல்த் டிரிங்க்

தேவையானவை:
அஷ்வகந்தா - 100 கிராம், கேழ்வரகு - 200 கிராம், வல்லாரைக் கீரை - 200 கிராம், பனங்கற்கண்டு - சுவைக்கு ஏற்ப, சூடான பால் - 1 டம்ளர்.

செய்முறை: அஷ்வகந்தா, கேழ்வரகு, வல்லாரையை அரைத்து, பொடித்துக்கொள்ள வேண்டும். சூடான பாலில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்து, பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

கேழ்வரகை `பசிதாங்கி’ என்று சொல்வார்கள். நீண்ட நேரம் பசியைத் தாங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முடி, நகங்களுக்குத் தேவையான கால்சியம் கேழ்வரகில் உள்ளது.

வல்லாரையைச் சாப்பிட்டால், மூளை செல்கள் அதிகரிக்கும். ஐ.க்யூ., நினைவுத்திறன் அதிகமாகும். குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும்.

கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய சத்து கால்சியம். இது, அஷ்வகந்தாவில் நிறைந்துள்ளது. அஷ்வம் என்பது குதிரை. குதிரைக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அவ்வளவு ஆற்றல் கிடைக்கும்.

சிறுநீரகக் கல்லைக் கரைக்க...

வாழைத்தண்டு மோர்


தேவையானவை:
வாழைத்தண்டுச் சாறு - 1 டம்ளர், மோர் - கால் டம்ளர், வெள்ளரி விதைப் பொடி - 1 டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டுச் சாற்றுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

குறிப்பு:
சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

சிறுநீரகத்தைச் சுத்தம்செய்யும்.

இதைத் தொடர்ந்து பருகினால், ஐந்து மி.மீ-க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்க இது உதவும்.

ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்கும் போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றும்.

வாழைத்தண்டு, முள்ளங்கி, முள்ளங்கி இலை, வெள்ளரிக்காய், நீர் மோர் போன்றவை சிறுநீரகத்தை ஆரோக்கியப்படுத்தும் உணவுகள்.

கல்லீரலைக் காக்கும் கீழாநெல்லி

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

மது அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு மாற்றக்கூடிய வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

கீழாநெல்லியில் உள்ள எக்லிப்டைன் (Ecliptine) என்ற என்சைம் கல்லீரல் செல்களைப் பாதுகாப்பதுடன், பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்கவும் செய்கிறது. இதில் கால்சியம், நார்ச்சத்து உள்ளன.

கீழாநெல்லிக் கீரை ஒரு சிறந்த மலமிலக்கியும்கூட. மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து.

மஞ்சள்காமாலை நோயை முழுவதுமாகக் குணப்படுத்தக்கூடிய மிகச்சிறந்த மூலிகை என்பதால், இதனை ‘காமாலைக் கீரை’ என்று அழைப்பர்.

கல்லீரலை பலப்படுத்தும் டீ

தேவையானவை:
அஸ்வகந்தா, நெல்லிக்காய், கடுக்காய் - தலா 5, டீத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: அஸ்வகந்தா, நெல்லிக்காய், கடுக்காயை நன்கு பொடித்துக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் தேயிலையைப்போட்டு, பொடித்துவைத்த மூலிகையை 20 கிராம் போட்டு, நன்கு கொதிக்கவிட வேண்டும். பால், சர்க்கரை சேர்க்காமல் அப்படியே அருந்த வேண்டும்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

வாரம் இருமுறை இந்தத் தேநீரை அருந்திவர, கல்லீரல் ஆரோக்கியமாகும். கருப்பட்டி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம். நெல்லியில் உள்ள வைட்டமின் சி, அஸ்வகந்தாவில் உள்ள சத்துக்கள், கடுக்காயில் உள்ள இரும்புச்சத்து ஆகியவை ஒன்று சேரும்போது கல்லீரல் பலமாகும். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகள்...

கிரீன் ஆப்பிள், முட்டைக்கோஸ், வால்நட், சாமை, குதிரைவாலி போன்ற உணவுகள் கல்லீரல் செல்களைப் புத்துயிர் பெறச்செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடிக்கும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும்.  நிலத்தடி நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, குடிப்பது கல்லீரலுக்கு நல்லது.

கல்லீரலைப் பலப்படுத்தும் கீழாநெல்லி டானிக்!


தேவையானவை:
வெள்ளைக் கரிசாலை, கீழாநெல்லி இலை - தலா 50 மி.கி., மோர் - 100 மி.லி, சீரகத் தூள், இந்துப்பு -  தலா ஒரு சிட்டிகை

செய்முறை: வெள்ளைக் கரிசாலை, கீழாநெல்லி இரண்டையும் விழுதாக அரைக்க வேண்டும். இந்த விழுதை மோரில் கலந்து, சீரகத் தூள், இந்துப்பு கலந்து அருந்த வேண்டும். விருப்பப்பட்டால், ஆளி விதைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

யார் குடிக்கலாம்?

மது அருந்துபவர்கள், மதுவை நிறுத்திவிட்டு, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலை, மாலை என இரு வேளையும் இந்தக் கல்லீரல் டானிக்கை அருந்தலாம். மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரல் பரிபூரணமாகக் குணமாகும்.

மஞ்சள்காமாலை வந்தவர்கள், தொடர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில், காலை நேரத்தில் இந்த டானிக்கைக் குடிக்கலாம்.

ஒரு வயது முடிந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் இந்த மூலிகைச் சாற்றைக் குடித்துவர, கல்லீரல் ஆரோக்கியம் பெறும்.

செரிமான மண்டலத்தை காக்க...

பெரும்பாலான நோய்கள் வருவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று உணவு. உடலுக்கு ஒவ்வாத, மோசமான உணவுகள் நம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்பவை. உணவைச் செரிமானம் செய்து, சத்துக்களைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்யும் செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கும் எளிய வழிகள் இங்கே...

வயிற்றுக்கான கட்டளைகள்...


பசித்துப் புசிக்கும் பழக்கம், நம் வயிற்றைப் பாதுகாக்கும்; உடலை உறுதியாக்கும்.

காலை எழுந்தவுடன் 100 மி.லி தண்ணீர் அருந்துவது நல்லது.

உணவுக்கு முன் விளாம்பழம், உணவுக்குப் பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடலாம்.

வைட்டமின் சி நிறைந்த நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, கீரைகள் வயிற்றைப் பாதுகாக்கும்.

வெள்ளைப் பூசணி - வெந்தயக்கீரை மோர்


தேவையானவை: துருவிய வெள்ளைப் பூசணி, வெந்தயக்கீரை - தலா 50 கிராம், மோர் - 1 டம்ளர், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:
துருவிய வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக்கீரையைத் தண்ணீர்விடாமல் அரைத்து, மோருடன் கலந்து, இந்துப்பு போட்டு, வெறும் வயிற்றில் அருந்தலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்: இந்த பானத்தில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களும் வயிற்றுப்புண்களைக் குணமாக்கும்.

அடிக்கடி வரும் ஏப்பம், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

செரிமான மண்டலத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

வயிற்றில் சுரக்கும் அமிலம் (HCL) தொடர்பான பிரச்னைகள் சரியாகும். செரிமானம் சீராக நடைபெறும்.

பித்தப்பை ஆரோக்கியமாக...

கல்லீரலின் கீழே இருப்பது பித்தப்பை. இது, கல்லீரல் சுரக்கும் செரிமான நொதியை (பித்தம்), தேக்கிவைக்கும் முக்கிய வேலையைச் செய்கிறது. சாப்பிட்ட பிறகு, செரிமானத்துக்குப் பெரும் உதவிபுரிவது பித்தப்பை. கொழுப்பு, கொழுப்புப் படிவங்கள் போன்ற துகள்கள் அதிகமாகி, கற்களாக உருவாகின்றன. இது வலியை ஏற்படுத்தும். இதனால், வலது பக்க வயிறு வலிக்கும். இதற்குத் தீர்வு தருகிறது ஒரு பானம்.

பித்தப்பை கற்களைக் கரைக்கும் டிரிங்க்!

தேவையானவை:
ஆப்பிள் - 1, ஃபிளாக்ஸ் விதைப் பொடி - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
ஆப்பிள் மற்றும் ஃபிளாக்ஸ் விதைப் பொடியுடன் சிறிது நீர் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து அருந்த வேண்டும்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

மூன்று மாதங்கள் இந்த பானத்தை அருந்திவர, சிறிதாக இருக்கும் கற்கள் கரைந்துவிடும்.

இந்தக் காலங்களில், கொழுப்புச்சத்து, எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

உடலில் நீர்ச்சத்து பூர்த்தியாவதால், கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

வளர்சிதை மாற்றம் இயல்பாக, கொழுப்பு கட்டுக்குள்வர, ஆரோக்கியமான பித்தம் சுரப்பது அவசியம்.

கொழுப்பைக் கரைத்து உடலைப் பாதுகாக்கும். கல்லீரலின் ஆரோக்கியமும் மேம்படும்.

மலக்குடலை சுத்தம்செய்ய...

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டவை. கடுக்காயை ‘மருத்துகளின் அரசன்’ என்று சொல்வார்கள். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. தான்றிக்காயில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த மூன்றையும் ‘திரிபலா’ என்று சொல்வர். இவை மலக்குடலை சுத்தம் செய்யக்கூடியவை.

திரிபலா பானம்!

தேவையானவை: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (பொடி) - தலா 5 மி.கி.,  பனை வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை: 150 மி.லி தண்ணீரில், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்ப் பொடிகளைப் போட்டு,  பனை வெல்லம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். தூங்கச் செல்லும் முன், இந்த பானத்தை வடிகட்டி, இளஞ்சூடாக அருந்திவர வேண்டும்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

நோய்களின் வாசலாக இருப்பது மலச்சிக்கல். இந்த பானத்தைத் தினமும் குடித்துவர, மலக்குடல் சுத்தமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.

மலச்சிக்கல் பிரச்னை விலகினாலே, நோய்கள் நம்மை நெருங்காது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

உடல் முழுவதும் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

வாயுப் பிரச்னை, வாயுவால் ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் வராமல் தடுக்கப்படும்.

நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்!

தேவையானவை: அகத்திப் பூ - 5, முள்ளங்கி - 1, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:
ஐந்து அகத்திப் பூக்களைச் சுத்தம் செய்து, 200 மி.லி நீரில் போட்டு மூடிவைத்து, பாதியாகச் சுண்டவிட வேண்டும். இந்த டிகாக்‌ஷனை 50 மி.லி எடுத்து, அதனுடன் சம அளவு முள்ளங்கிச் சாறு கலந்து, 45 நாட்களுக்குக் குடித்துவந்தால், பாதித்த நுரையீரல் சரியாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம்.

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

பலன்கள்

`எம்பிசெமா’ (Emphysema) என்ற நுரையீரல் பாதிப்பு பிரச்னை முள்ளங்கி சாற்றால் குணமாகிறது.

நிமோனியா, புகையிலையால் வந்த புற்றுநோய் போன்றவைக்கு இந்தச் சாறு அருமருந்து.

தொடர்ந்து குடித்துவந்தால் மூச்சுக் குழாய் சுருக்க நோய் (Chronic obstructive pulmonary disease) குணமாகத் தொடங்கும்.

சிறுநீரகக் கல் அடைப்பு, கால் வலி, அதிகாலை முக வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு முள்ளங்கிச் சாறு சிறந்தத் தேர்வு.

உடலில் அடி வயிறு, கை, கால் போன்ற இடங்களில் படியும் கொழுப்பைக் (Adipose tissue) கரைக்கும்.

கெட்ட கொழுப்பை முற்றிலுமாக நீக்கி, மீண்டும் கொழுப்புப் படியாமல் தடுக்கும்.

- ப்ரீத்தி
படங்கள்: எம்.உசேன், தி.கௌதீஸ்,
தே.அசோக் குமார்
மாடல்: ஜீவி

மூலிகை பானம் - நலம் நம் கையில்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.