இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 13

தயநோய்கள், பக்கவாதம், புற்றுநோய் போன்ற மிகவும் மோசமான, உயிரிழப்பை அல்லது உடலின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய அதிக மருத்துவச் செலவு தேவைப்படும் நோய்களுக்கு என்று பிரத்யேகமாக ‘கிரிட்டிக்கிள் இல்னெஸ் இன்ஷூரன்ஸ்’ உள்ளது. பொதுவான மருத்துவக் காப்பீடு என்றால், மருத்துவமனையில் 24 மணி நேரத்துக்கு மேல் தங்க வேண்டும், சிகிச்சை பெற்றுக்கொண்டு பணம் பெறுதல் அல்லது நெட்வொர்க் மருத்துவமனை என்றால் கேஷ்லெஸ் சிகிச்சை பெறலாம். ஆனால், கிரிட்டிக்கிள் இல்னெஸ் காப்பீட்டில் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோய் கண்டறியப்பட்டாலே அவருக்குக் காப்பீடு கிடைக்கும். மேலும், பொது மருத்துவக் காப்பீட்டைப்போல இல்லாமல், ஒரு பாதிப்புக்காக மட்டுமே முழுத் தொகையையும் அவருக்குத் தேவைப்படும் காலத்தில் செலவு செய்ய முடியும்.

இதை, தனிநபர் பாலிசியாக மட்டுமே பெற முடியும். ப்ரீமியமும் அதிகம் என்பதால், குடும்பத்தினர் அனைவருக்கும் தனித்தனியாக பாலிசி எடுப்பது சிரமம். இதனால், குடும்பத்தில் வருவாய் ஈட்டக்கூடியவர், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு (மரபியல்ரீதியாக, அப்பாவுக்கு மாரடைப்பு இருந்தால், பிள்ளைக்கு வர வாய்ப்பு அதிகம்.) எடுக்கலாம். இந்தியாவில் மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவமனைக் கட்டணங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இந்தச் சூழலில், கிரிட்டிக்கிள் இல்னெஸ் பாலிசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. இதில், மாரடைப்பு, புற்றுநோய், இதய மாற்று, இதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை, கோமா, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை, கல்லீரல் நோய்கள் எனப் பல நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கிறது.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலிசி அலசல்

ரிலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
 
அஷ்யூர்


இதில் 20 வகையான நோய்களுக்கு கவரேஜ் அளிக்கப்படுகிறது. இதில் கூடுதலாக, விபத்து கவரேஜ், வரிச்சலுகையும் உள்ளது. ஏற்கெனவே உள்ள நோய்கள், எய்ட்ஸ், பிறவிக் குறைபாடுகள், காஸ்மெடிக் மற்றும் உடல்பருமன் தொடர்பான சிகிச்சை, குழந்தையின்மைக்கான சிகிச்சைகள், போர், வன்முறையில் விபத்து போன்றவற்றுக்கு இதில் கவரேஜ் கிடையாது. ஐந்து லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

பாரத் ஆக்ஸா

ஸ்மார்ட் ஹெல்த் கிரிட்டிக்கிள் இல்னெஸ் 


இதில், 20 வகையான நோய்களுக்கு கவரேஜ் அளிக்கப்படுகிறது. அந்த ஆண்டு க்ளெய்ம் ஏதும் பெறவில்லை எனில், ஐந்து சதவிகிதம் போனஸ் அளிக்கப்படும். குடும்பத்தினர் அனைவரையும் சேர்க்கவும் முடியும். இதனுடன், வரிச்சலுகையும் உள்ளது. 45 வயது வரை மருத்துவப் பரிசோதனை தேவை இல்லை. வாழ்நாள் முழுக்கப் புதுப்பிக்கலாம். 2, 3, 5 லட்ச ரூபாய் பாலிசிகள் வழங்கப்படுகின்றன.

மேக்ஸ் பியூபா

ஹெல்த் அஷ்ஷூரன்ஸ் கிரிட்டிக்கிள் இல்னெஸ்


இதில், 20 வகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கிறது. 90 நாட்கள் காத்திருப்புக் காலம் உள்ளது. ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு பாலிசி எடுத்த தேதியில் இருந்து, 48 மாதங்களுக்கு கவரேஜ் கிடையாது.  இதில், ஆண்டுதோறும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வசதி உள்ளது. வாழ்நாள் முழுக்கப் புதுப்பிக்கலாம். பாலிசியானது வயது மற்றும் வாழும் இடத்தைப் பொறுத்து மட்டுமே நிர்ணயிக்கப்படும். க்ளெய்ம் பெற்றதைப் பொறுத்து மாறாது. 3-10 லட்ச ரூபாய் வரை கவரேஜ் உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி எர்கோ

கிரிட்டிக்கிள் இல்னெஸ் பிளான்


சில்வர், பிளாட்டினம் என்று இரண்டு வகையான பாலிசிகள் உள்ளன. சில்வர் பிளானில், மாரடைப்பு, பக்கவாதம், இதய பைபாஸ் அறுவைசிகிச்சை, புற்றுநோய், சிறுநீரக செயல்இழப்பு, மல்டிப்பிள் ஸ்கிளிரோசிஸ்(Multiple Sclerosis), பக்கவாதம் (Paralysis), முக்கிய உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை என எட்டு நோய்களுக்கு மட்டுமே கவரேஜ் உள்ளது. பிளாட்டினம் பிளானில், கூடுதலாக நுரையீரல், அரோட்ட கிராஃப்ட் அறுவைசிகிச்சை, மூளைக்கட்டி, பார்கின்சன்ஸ், அல்சைமர், கல்லீரல் நோய்களுக்கு பாலிசி அளிக்கப்படுகிறது. பாலிசியை எடுக்க முன்கூட்டியே உடல் பரிசோதனை செய்யத் தேவை இல்லை. 90 நாட்கள் காத்திருப்புக் காலம் உள்ளது. புற்றுநோய்க்கு என்று பிரத்யேகமாக ஹெச்.டி.எஃப்.சி லைஃப் பாலிசி உள்ளது. இதில், கேன்சர் சில்வர், கோல்டு, பிளாட்டினம் என்று மூன்று வகையான கவரேஜ் அளிக்கப்படுகிறது.

அப்போலோ ம்யூனிச் ஆப்டிமா வைட்டல், சிக்னா டிடிகே, எடில்வைஸ் டோக்கியோ லைஃப் என்று மேலும் சில நிறுவனங்களும் கிரிட்டிக்கிள் இல்னெஸ் பாலிசியை வழங்குகின்றன. பாலிசியை வாங்கும் முன்னர், காத்திருப்புக் காலம், கவரேஜ், புதுப்பிப்பு என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism