முன்பெல்லாம் சீர்வரிசைக்கு, ஆரத்திக்கு எத்தனை தட்டு என்பதுதான் கவனிக்கப்படும். இன்றோ, அதை எப்படியெல்லாம் அலங்கரித்து வைக்கிறார்கள்தான் என்பதுதான் ட்ரெண்ட். அந்தளவுக்கு இவற்றில் புதுமைகள் புகுந்துகொண்டே இருக் கின்றன. அலங்கார சீர்வரிசை தட்டுகள் மற்றும் அலங்கார ஆரத்தி தட்டுகள் தயாரிப்பில் ஐந்து வருடங்கள் அனுபவம் உள்ள திவ்யா பேசுகிறார்...

‘‘சீர்வரிசைத் தட்டுகள், ஆரத்தி தட்டுகள், ஜுவல்ஸ் ஸ்டாண்ட் இவற்றை எல்லாம் மணவீட்டினருக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் வீட்டிலேயே வித்தியாசமாகத் தயாரிக்கலாம். தெர்மாக்கோல், பிளாஸ்டிக் கூடைகள், மரக்கூடைகள், ஸ்டோன், ஜரிகை, வெல்வெட் துணி போன்ற பொருட்களைக் கொண்டே சுலபமாக இவற்றைச் செய்ய முடியும். அல்லது, அனைத்தையுமே ரெடிமேடாக வாங்கிக்கொள்ளலாம்.

அலங்கார சீர்வரிசை தட்டுகள்!

முன்பெல்லாம் பித்தளை, சில்வர் தாம்பாளங்களில் சீர்வரிசைப் பொருட்களை அடுக்கி சபையில் வைத்தார்கள். இப்போது, அந்தத் தட்டில் இருந்து, அதில் வைக்கப்படும் பொருட்கள் வரை அழகும் கலையும் மிளிரச் செய்கிறார்கள். உதாரணமாக, பழங்களின் மீது சிறிய அலங்கார கற்கள், பெயின்ட்டிங், பேப்பர் கட்டிங், ஜரிகை, பூக்கள் என பழங்கள் வைக்கும் சீர் வரிசைத் தட்டு இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தால், திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு, ‘அவங்க கல் யாணத்துல சீர்வரிசை தட்டு எவ்வளவு ஆர்ட்டிஸ்டிக்கா இருந்தது தெரியுமா?!’ என்று வெகுகாலத்துக்கு அது நினைவில் இருக்கும் இல்லையா... அந்த சிறப்புக்குத்தான் இவ்வளவு மெனக்கெடல்.

அலங்கார ஆரத்தி தட்டுக்கள்!

குடத்தில் தேங்காய் வைத்து எடுப்பது, மஞ்சள் நீரில் குங்குமம் கரைத்து எடுப்பது, விளக்கேற்றி எடுப்பது என்று சம்பிரதாயத்துக்காக மூன்று, அதிகபட்சம் ஐந்து என்று எடுக்கப்பட்ட ஆரத்திகள், இன்று 11, 21, 51, 101 என்று விருப்பத்துக்கு ஏற்ப எண்ணிக்கையில் எகிறுகின்றன. அந்த ஒவ்வொரு தட்டையும் புதுமையாகவும், கவர்ச்சியாகவும் தயார் செய்வதே இதில் இருக்கும் சுவாரஸ்யம். இரண்டு, மூன்று பெண்கள் இருக்கும் வீடுகளில், மூத்த பெண்ணின் திருமணத்துக்கு வாங்கிய ஆரத்தி செட்களை அப்படியே பத்திரமாக எடுத்துவைத்து, அடுத்த பெண்ணின் திருமணத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது வெடிங் தீம்களை பிரதிபலிக்கும் ஆரத்திகளையும் ஆர்டர்கொடுத்து வாங்கலாம்... ஜோராக!

ஜுவல்ஸ் செட்!

நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த மேடையில், பெண் வீட்டார் சீர்வரிசை யாகக் கொடுக்கும் நகைகளையும், மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு சீர்வரிசையாக அணிவிக்கும் நகைகளை யும் பார்வைக்கு வைக்கும்போது, ஜுவல்ஸ் செட்டில் வைத்தால் இன்னும் பார்வையாக இருக்கும். இவை கேமராவுக்கும், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் நகைகளை ஹைலைட் செய்துகாட்டும்’’ என்கிறார், திவ்யா.

இனி உங்கள் இல்லத் திருமணங் களிலும் சீர்வரிசையும், ஆரத்தியும் நீங்காத காட்சிகளாகட்டும்... விருந்தினர் கண்களுக்கு!

- கு.ஆனந்தராஜ், படம்: ரமேஷ் கந்தசாமி