திருமண குதூகலங்களில் மற்றும் ஒரு சுவாரஸ்யம்... வெடிங் ஃபயர் வொர்க்ஸ். அதாவது, அழகான, பிரமாண்டமான, அதே சமயம் பாதுகாப்பான பட்டாசு கேளிக்கைகளைத் திருமணம் நடக்கும் இடத்தில் அரங்கேற்றுவது. விருந்தினர்களின் கண்களையும் மனதையும் குதூகலிக்கச் செய்யும் அந்தக் கலை பற்றி விளக்குகிறார், சென்னை ‘சுபமங்களா வெடிங்’ உரிமை யாளர் சுந்தரி பாலசுப்ரமணியம்.

அறிமுகம்

ஃபயர் வொர்க்ஸ் என்றாலே ஏதாவது தீ விபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பலரும் அச்சம் கொள்வார்கள். இது மிகவும் பாதுகாப்பானது என்பதால் அந்த பயம் தேவையில்லாதது.

பொதுவாக, திருமண மண்படத்தின் உள்ளே உள்ள இண்டோர் பகுதியில் ‘கோல்ட் ஃபயர் வொர்க்ஸ்’ (cold fire works), மற்றும் மண்டபத்துக்கு வெளியே ‘அவுட்டோர் ஃபயர் வொர்க்ஸ்’ செய்யப்படுகிறது.

இண்டோரில் பயன்படுத்தப்படும் ‘கோல்ட் ஃபயர் வொர்க்ஸ்’ஸில் மருதாணி பவுடர் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால், அதில் இருந்து வெளிவரும் தீப்பொறிகள் ஒருவேளை யாருடைய உடல் மற்றும் உடைகளில் பட்டாலும்கூட பாதிப்பு ஏற்படாது.

அவுட்டோர் ஃபயர் வொர்க்ஸ்களை செய்யும் முன்பாக, அந்த மண்படம் அமைந்துள்ள பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்துகொள்வோம். மேலும் லோக்கல் போலீஸாரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான், ஃபயர் வொர்க்ஸ் வேலைகளைச் செய்வோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபயர் வொர்க்ஸ் வேலைகள் அனைத்துமே பெரும்பாலும் ரிமோட் கன்ட்ரோல் முறையில் இயக்கப்படுவதால், தீ விபத்துக்கு வாய்ப்பில்லை. எந்தச் சத்தமும், புகையும் இன்றி அனைவரும் ரசிக்கும் வகையிலேயே இருக்கும்.

வெடிங் ஃபயர் வொர்க்ஸ் வேலைகள் வானத்தில் நிகழ்த்தும் வர்ணஜாலங்களால் திருமண விருந்தினர்கள் மட்டுமின்றி, திருமண மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.

வகைகள்

மணமக்கள் மண்டபத்தின் உள்ளே நுழைவதில் இருந்து மேடைக்கு வரும் வரை, அவர்களின் இருபுறங்களிலும் இடைவெளிவிட்டு புஸ்வாணம் மாதிரி தீப்பொறிகள் விழுவது... ‘கோல்ட் ஃபயர் வொர்க்ஸ்’. ஒரு புஸ்வாணத்தின் விலை 1,000 ரூபாய். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு புஸ்வாணமும் அதிகபட்சமாக 10 அடி உயரத்துக்கு, 45 விநாடிகள் வரை தீப் பொறிகளை வெளியிடும். அந்த நேரத்தில் திருமண அரங்கமே ஆடம்பரமாக ஜொலிக்கும், விருந்தினர்கள் மத்தாப்பு வேடிக்கைகளை வியந்து ரசிப்பார்கள்.

இண்டோரில், மணமக்களின் மேற்புறத்தில் 21 புஸ்வாணங்கள், நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் கொட்டுவதைப்போல, 11 நிமிடங் களுக்கு தீப்பொறிகள் விழச் செய்யும். அந்த ‘நயாகரா ஃபால்ஸ்’ ஃபயர் வொர்க்ஸ், ரொம்பவே பிரபலம். இதற்கு அதிகபட்சம் ஒன்றேகால் லட்சம் வரை செலவாகும்.

அவுட்டோரில், தரையில் மணமகன், மணமகள் பெயர்களைக் கொண்ட பட்டாசு சில நிமிடங்கள் தீப்பொறிகளை வெளியிட்டு, பின்னர் வானில் சென்று 35 விநாடிகள் வரை கலர்ஃபுல்லாக வெடித்து அனைவரையும் மகிழ்விக்கும். அதிகபட்சமாக 15 அடிவரை மேலே சென்று வெடிக்கும் இந்த வகை ஃபயர் வொர்க்ஸுக்கு, 11 நிமிடத்துக்கு ரூ 24,000, 21 நிமிடத்துக்கு ரூ 45,000, 30 நிமிடத்துக்கு ரூ 60,000 என செலவாகும்.

திறந்த வெளியில் அரங்கு அமைத்து நடத்தப்படும் திருமண நிகழ்ச்சிகளில், இந்த ஃபயர் வொர்க்ஸ் கூடுதல் கவனம் பெறும், பார்க்கவும் இன்னும் ரசனையாக அமையும்.

இனி திருமணங்களில் பட்டாசுக்கும் போட்டுவிட வேண்டியதுதான்... ஒரு பிரத்யேக பட்ஜெட்!

- கு.ஆனந்தராஜ்