Published:Updated:

பார்ட்டிக்கு வெண்ணிலா... வீக்எண்டுக்கு கிளாஸிக்... கோடைக்கு நேரோலி... பெர்ஃப்யூம் கலெக்ஷன்!

பார்ட்டிக்கு வெண்ணிலா... வீக்எண்டுக்கு கிளாஸிக்... கோடைக்கு நேரோலி... பெர்ஃப்யூம் கலெக்ஷன்!

பார்ட்டிக்கு வெண்ணிலா... வீக்எண்டுக்கு கிளாஸிக்... கோடைக்கு நேரோலி... பெர்ஃப்யூம் கலெக்ஷன்!

பார்ட்டிக்கு வெண்ணிலா... வீக்எண்டுக்கு கிளாஸிக்... கோடைக்கு நேரோலி... பெர்ஃப்யூம் கலெக்ஷன்!

பார்ட்டிக்கு வெண்ணிலா... வீக்எண்டுக்கு கிளாஸிக்... கோடைக்கு நேரோலி... பெர்ஃப்யூம் கலெக்ஷன்!

Published:Updated:
பார்ட்டிக்கு வெண்ணிலா... வீக்எண்டுக்கு கிளாஸிக்... கோடைக்கு நேரோலி... பெர்ஃப்யூம் கலெக்ஷன்!

இன்டர்வியூ, பார்ட்டி, திருமணம், அலுவலகம் என இடத்துக்குத் தகுந்த உடைகளை, நாம் தேடித் தேடி வாங்குவோம். அப்படி வாங்கும் உடைகளுக்கேற்ற அணிகலன், கைக்கடிகாரம், காதணி, காலணி என அனைத்தையும் சலித்தெடுத்தே வாங்குவோம். அதெல்லாம் சரி, உடைகளுக்கு ஏற்ற சரியான பெர்ஃப்யூம் பற்றி என்றைக்காவது  சிந்தித்திருக்கிறோமா?

ஒரே ஒரு பெர்ஃப்யூம் பாட்டிலில், ஒன்றரை ஆண்டை ஓட்டினதெல்லாம் அந்தக் காலம். இப்போது விதவிதமான உடைகள் மட்டுமல்ல, பெர்ஃப்யூம் வைத்திருப்பதும்  மிக முக்கியமாகிவிட்டது. மார்க்கெட்டில் ஏராளமாய் கொட்டிக்கிடக்கும் வாசனைத் திரவிய பொருள்களில், நிகழ்வுகளுக்கேற்ப தேர்ந்தெடுப்பதற்கான கைடு இங்கே...

இன்டர்வியூவில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும்பாலான நேர்காணல்கள், நான்கு சுவருக்குள்தான் நடக்கும். கூகுள் போன்ற மேம்பட்ட நிறுவன இன்டர்வியூதான் வெட்டவெளியில் நடைபெறும். அறைக் கதவு, ஜன்னல்கள் இறுக்க மூடப்பட்டு ஏ.சி பொருத்திய உயர் அதிகாரியின் அறையினுள் நுழையும்போதே வித்தியாச மணம் கமழும். இதனுடன் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் பெர்ஃப்யூம் மணமும் இணைந்து எதிரில் அமர்ந்திருப்பவரை அசௌகரியமான நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது. எனவே, இன்டர்வியூவின்போது, மிகவும் மென்மையான வாசனை திரவியத்தையே தேர்ந்தடுக்க வேண்டும். அந்தத் திரவியத்தில் உள்ள அத்தியாவசிய வாசனை எண்ணெய்யின் அளவு 1 - 3 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். அளவாக ஸ்பிரே செய்து, எதிரில் இருப்பவரை எளிதில் இம்ப்ரெஸ் செய்யுங்கள்.

அலுவலகத்தில்..

`யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பதுபோல் சிலர் அலுவலகத்தினுள் காலடி எடுத்துவைப்பதுக்குள் அவர்களின் பெர்ஃப்யூம் வாசனை மற்றவர்களைச் சென்றடைந்துவிடும். அலுவலகத்தில் செலவிடும் எட்டு மணி நேரமும் வாசனையுடன் இருக்க வேண்டும் என, சிலர் வாசனை திரவியத்தால் குளித்துவிடுகிறார்கள். இது அருகில் இருக்கும் பலருக்கும் தலைவலியைத்தான் உண்டாக்கும். சிட்ரஸ் (Citrus) வாசனைகொண்ட திரவியம் இதற்கு சரியான தீர்வு. பட்ச்சவ்லி (Patchouli), வெட்டிவேர் போன்ற மர நறுமண (Woody Fragrance) திரவியங்களையும் பயன்படுத்தலாம். மற்ற திரவியங்களைவிட எளிதில் நலிவடைந்தாலும், உயர் அதிகாரி மற்றும் சகபணியாளர்களுக்கு எந்தவிதத் தொல்லையும் இதனால் இருக்காது. அவ்வப்போது நறுமணத்தை டாப்-அப் செய்துகொள்ள சிறிய பாட்டிலை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

பார்ட்டியில்...

அதிகக் கூட்டம் கூடும் பார்ட்டி இரவில், பொதுவாக இரண்டுவிதமான கதாபாத்திரங்களை ஒதுக்குவார்கள். அவர்கள், உற்சாகமின்றி சிலைபோல் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளும் அளவுக்கு வாசனை திரவியத்தைப் பூசிக்கொண்டிருப்பவர்கள். இது பல சவால்கள் நிறைந்த பிரச்னையை உருவாக்கும். அளவான வாசனை நோட்டுகளைக்கொண்டு அடிக்கடி டாப்-அப் செய்யும் வேலையில்லாமல் நீண்ட நேரம் உழைக்கும் தன்மைகொண்ட பெர்ஃப்யூம்தான் இதற்கு சரியான சாய்ஸ். வெண்ணிலா, ரோஸ் போன்ற வாசனைப் பொருள்கள் நிறைந்த திரவியம் பார்ட்டிக்கு ஏற்றது.

காதலில்...

நறுமணத்துக்கும் நினைவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. சில வாசனைகளை முகரும்போது, ஏகப்பட்ட நினைவலைகள் நம் கண்முன் எழும். எனவே, உங்களின் நினைவு என்றும் நீங்காதிருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை திரவியங்களை மட்டுமே உபயோகியுங்கள். காதலியை/காதலனைச் சந்திக்கும்போது தனிப்பட்ட சிறந்த பொருள்களில் தயாரான திரவியத்தைப் பயன்படுத்துங்கள். அது லேட்டஸ்ட் பெர்ஃப்யூமாக இருந்தால் கூடுதல் சிறப்பு. மாதுளை, தேங்காய் போன்ற பழம் மற்றும் மர வகை நோட்டுகள்கொண்ட திரவியம் நிச்சயம் கைகொடுக்கும்.

திருமணத்தில்...

திருமண நாள் முடிவாகிவிட்டது. உடை முதல் நகை வரை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஓடிக்கொண்டிருப்போம். இடையில் ஏதோ ஒரு வாசனை திரவியத்தை வாங்கி பையில் போட்டுக்கொள்வோம். பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மண நாளில் டாப்-அப் செய்துகொள்ளக்கூட நேரம் இருக்காது. இதைக் கட்டுப்படுத்த, அதிகப்படியான அத்தியாவசிய நறுமண எண்ணெய் கலந்த பெர்ஃப்யூம்தான் பெஸ்ட் சாய்ஸ். ஆரம்பத்தில் வலுவான நறுமணத்தைப் பெற்றிருந்தாலும், பல நிகழ்வுகளைக்கொண்டிருக்கும் ஓய்வில்லா நாளுக்கு நீடித்து உழைக்கும்.

வீக்கெண்டில்...

அலுவலகப் பணிச்சுமைகளை மறந்து ஓய்வெடுக்கும் காலம், வார இறுதி. நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் ஆனந்தமாக மால், சினிமா எனச் சுற்றும் நாள்களும் அவைதான். கூடவே, `க்ளாசிக்' திரவியங்களை உபயோகிக்க சிறந்த நாள்களும் வீக்கெண்டுதான். ஒரே ஒரு க்ளாசிக் நறுமண திரவிய பாட்டில் போதும், நாள் முழுவதும் புத்துணர்வு உறுதி.

கோடைக்காலத்தில்...

குளிர்காலத்தில் குளிக்காமல்கூட இருந்துவிடலாம். ஆனால், கோடைக்காலத்தில் இரண்டு முறை குளித்தாலும் மனம் நிறைவடையாது. காரணம், வெப்பம். அதனால் வெளியேறும் வியர்வை. `இந்நிலையில் பெர்ஃப்யூம் அடித்துக்கொண்டால் மோசமான மணம் வீசுமோ!' என்ற பயம் பலரிடமும் உண்டு. இதற்கு தீர்வு, மென்மையான குணம்கொண்ட நேரோலி (Neroli), மல்லிகை, சிசிலியன் லெமன் (Sicilian Lemon) போன்ற நறுமண நோட்டுகளைக்கொண்ட திரவியங்கள்தான். சரியான அளவில் ஸ்பிரே செய்து, வியர்வை மணத்துக்கு குட்பை சொல்லுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism