வட இந்தியத் திருமணங்களில் முக்கிய மான மெஹந்தி கலாசாரமானது, தென் இந்தியாவிலும் இப்போது வேகமாகப் பரவிவருகிறது. ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரும், சென்னையில் உள்ள ‘கெட் டிசைன்டு’ மெஹந்தி டிசைனர் நிறுவனத்தின் உரிமையாளருமான சினேகா, அதைப் பற்றிய தகவல்கள் தந்தார்...

``ராஜஸ்தானில் இருந்து மருதாணி இலைகள் கொண்டு வரப்பட்டு, அதை அரைத்து, பொடியாக்கி, துணியால் சலித்து, அந்தப் பொடியுடன் லவங்க எண்ணெய், நீலகிரி தைலம் சேர்த்து மெஹந்தி தயாரிப்போம். டார்க், லைட் என்று மணமகள் எந்த மாதிரியான நிறம் விரும்புகிறாரோ, அதற்கேற்ப அந்த எண்ணெய் சேர்க்கப்படும்.

கைகள் மற்றும் கால்களில் மட்டும் அல்லாமல், இடுப்புப் பகுதி, முன் கழுத்து, பின் கழுத்து மற்றும் தோள்களில்கூட வங்கி அணிவதற்கு பதிலாக டாட்டுபோல மெஹந்தி டிசைன் வரைந்துகொள்வது இப்போது ட்ரெண்ட். மெஹந்தியில் இந்தியன், ராஜஸ்தான், அராபிக், இண்டோ - அராபிக், பாகிஸ்தான் என்று பல வகைகள் உள்ளன.

ராஜஸ்தான் மெஹந்தி

இது மிகவும் நுணுக்கமானது. உள்ளங்கை, புறங்கைகள், விரல்கள் முழுவதும் பரவலாக இடம்பெறும் இந்த டிசைனில் கைகள் மட்டும் இல்லாமல் கால்களிலும் இடவெளி இல்லாமல் பொடிப்பொடியான, அதே சமயம் மெல்லிய கோடுகளின் மூலம் டிசைன்கள் வரைந்து நிரப்புவோம்.

இந்தியன் மெஹந்தி

கைகள் முழுவதும் பரவலாக பூக்கள், மயில்கள், மாங்காய் வடிவங்கள் என பாரம்பர்ய டிசைன்கள் அதிகம் இடம்பெறும். மணப்பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்து, கைவிரல்களில் மருதாணியால் தொப்பி போன்ற பாரம்பர்ய டிசைனோ அல்லது விரல் முழுவதும் டிசைனோ போடலாம்.

அராபிக் மெஹந்தி

இந்திய மெஹந்தி டிசைன்களை ஒப்பிடும்போது, அராபிக் மெஹந்தியில் டிசைன்கள் மிகவும் எளிமையானவை. அதேசமயம், இதற்கு அதிக கற்பனைத்திறன் தேவைப்படும். நெருக்கமான டிசைனாக இல்லாமல் அதிக இடைவெளிவிட்டு, பெரும்பாலும் பெரிய பெரிய இலைகள் மற்றும் பூக்கள் போன்ற வடிவங்களில் உள்ளங்கையில் இருந்து வரைய ஆரம்பித்து ஒற்றை விரலில் முடியும். மிக தடிமனான கோடுகளால் டிசைன்கள் வரையப்படும். இதன் சிறப்புத் தன்மை, கறுப்பு நிற மெஹந்தி கோடுகளை அவுட்லைனாகக் கொடுத்து, உள்ளே நார்மல் மெஹந்தியால் ஃபில் செய்யப்படும். இது ட்ரெண்டியாக இருக்கும்.

அராபிக் மெஹந்தியில் வெறும் அவுட்லைன் மட்டும் வரைவது, தற்போது ஃபேஷன். சிம்பிள் டிசைனாக இருந்தாலும் பார்க்க ஹைலைட்டாக இருக்கும்.

இண்டோ - அராபிக் மெஹந்தி

இந்திய டிசைனில் உள்ள மான், மயில், மாங்காய் போன்ற பாரம்பர்ய வடிவங்களுடன், அராபிக் டிசைனின் பெரிய பெரிய பூக்கள் மற்றும் இலைகளின் வடிவங்கள் என, இந்தியன் - அராபிக் மெஹந்தியின் கலவையாக இருக்கும்.

பாகிஸ்தான் மெஹந்தி

மெஹந்திக்கே உரிய பூக்கள், மயில்கள் போன்ற அழகிய வடிவங்களைக் கொண்டு உருவாக்காமல், அப்படியே அதற்கு நேரெதிராகக் கட்டம், வட்டம், முக்கோணம் போன்ற ஜியோமெட்ரிக் டிசைன்களைக் கொண்டு வரைவது பாகிஸ்தானி மெஹந்தியின் சிறப்பு. ட்ரெண்டி பெண்களுக்கு ஏற்ற சாய்ஸ்.

மெஹந்தியின் கலர் வகைகள்

மெஹந்தியின் பொதுவான நிறம் தவிர இப்போது கறுப்பு, பிரவுன் மற்றும் வெள்ளை நிறங்களிலும் மெஹந்தி வரையப்படுகிறது. இது தவிர மல்டிகலர் எனப்படும் பல வண்ண மெஹந்தியும் இப்போதைய ட்ரெண்ட். இது சருமத்துக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத பல வண்ன பெயின்ட்டுகளைக்கொண்டு வரையப்படுகிறது. இது தவிர ஜிகினா துகள்கள், வண்ண கற்களைக்கொண்டும் மெஹந்தி போடப்படுகிறது.

வொயிட் மெஹந்தி

வொயிட் மெஹந்தி என்பது சோள மாவுடன் ஃபெவிக்கால் கலந்து, பிளாஸ்டிக் கவரில் கோன்செய்து, அதில் கலவையை ஊற்றி வரைவது. இது குறிப்பாக கிறித்தவ திருமணங்களில் விரும்பப்படும். சோப் ஆயிலில் ஊறவைத்து, இதை அழித்துவிடலாம்.

கிளிட்டர் மெஹந்தி

கடையில் விற்கப்படும் கிளிட்டர் பெயின்ட்டை வாங்கி, பிளாஸ்டிக் கவரில் கோன்செய்து, அதில் பெயின்டை ஊற்றி வரைய வேண்டும். கிளிட்டர் மெஹந்தியை மேலும் அழகுபடுத்த கடைகளில் கிடைக்கும் ஸ்டிக்கர் ஸ்டோன்களைபயன்படுத்தலாம். இந்த மெஹந்தியையும் சோப் ஆயிலில் ஊறவைத்து அழிக்கலாம்.

இவை தவிர, டிசைனர் மெஹந்தி என ஒரு வகை இப்போது பிரபலமாகி வருகிறது. அதாவது மணமகளின் திருமணப் புடவையில் இருக்கும் டிசைன்களை அப்படியே கைகளில் வரைவது. தேவைப்பட்டால் அதே புடவையின் கலரிலும் வரைவது மட்டுமல்லாமல், கலர் ஸ்டோன்களை ஒட்டியும் அழகூட்டிக்கொள்ளலாம்!’’

- த.பொற்கொடி, இரா.ஆரோக்கிய அமுதா மேரி படங்கள்: அசோக் அர்ஸ்