Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!

‘போக்கிமான் கோ’... கோ கோ கோ!டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா!

‘போக்கிமான் கோ’... கோ கோ கோ!டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘என்னடி அனு... ரொம்ப ஃபீலிங்ல இருக்க?’’

‘‘ஒண்ணும் இல்லடி.’’

‘‘ஏய், சும்மா சொல்லுடி. என்ன மேட்டரு?’’

‘‘அது வந்து...’’

‘‘இவ இழுக்கிறதைப் பார்த்தா...''

‘‘ஆதிரா, நீயா ஏதாச்சும் கற்பனை செய்துடாதே, நானே சொல்லிடுறேன். கொஞ்சநாளா எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்டை வந்துட்டே இருக்கு. இத்தனைக்கும் அவங்க ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதான். இப்போ எலியும் பூனையுமா, அவ்ளோ வெறுப்போட சண்டை போட்டுக்கிறாங்க.’’

‘‘எத்தனை வருஷமா ரெண்டு பேரும் லவ் பண்ணினாங்க?’’

‘‘நாலு வருஷம்.’’

‘‘நாலு வருஷக் காதலில் நல்ல புரிதல் ஏற்பட்டதும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் அன்பை அதிகாரமா செலுத்தும்போது, ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நாளடவில் ஈர்ப்பு குறைஞ்சு போகுது.’’

‘‘நீ சொல்றது லைட்டா குழப்புதே...''

‘‘காதலர்களா, கணவன் - மனைவியா இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் தனித்தனி உயிர்கள். ரெண்டு பேருக்கும் தனித்தனி மனசு இருக்கு. அதை ஒற்றுமையா வெச்சிருக்கலாமே தவிர, ஒன்றாக்க முடியாது. அதாவது, ஒருத்தரோட விருப்பங்கள், கனவுகள், கோபங்களை தன்னோட துணைவருக்கும் கடத்த நினைக்கக் கூடாது. கொஞ்சம் காபி, நிறைய காதல்னு வாழ்க்கை சிக்கல் இல்லாம போக, நம்மோட குணத்தில் செய்துக்க வேண்டிய சில திருத்தங்களைச் சுட்டிக்காட்டின ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன்... செம! ஷேர் பண்றேன் இருங்க...’’

‘‘அனு, இந்த ஆர்ட்டிகிளை உங்க அக்காவுக்கும் நீ ஷேர் பண்ணு. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். இப்போ கவலையை விட்டுட்டு வா... மொபைல் எடுத்துட்டு ரோட்டுக்கு போய் விளையாடலாம்.’’

‘‘லூஸு இனியா... ரோட்ல விளையாடறதுக்கு நாம என்ன சின்னப் புள்ளைங்களா? அதுக்கு மொபைல் வேற எதுக்கு?’’

‘‘அடியேய்... ‘போக்கிமான் கோ’ கேமை இன்னும் நீ டவுன்லோடு பண்ணலையா?!’’

‘‘அது இன்னும் இந்தியாவுல ரிலீஸ் ஆகலைதானே?’’

‘‘ஹா ஹா... ரிலீஸ் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாதுல்ல? அதான் அந்த கேமோட `apk ஃபைலை' கண்டுபிடிச்சு டவுன்லோடு செஞ்சு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க நம்ம இந்தியக் குடிமக்கள். நாடெல்லாம் இப்போ போக்கிமான் ஃபீவர்தான்!’’

‘‘போக்கிமான் கேம்னா என்ன?’’

‘‘போக்கிமான் கார்ட்டூன் கதாபாத்திரங் களை வெச்சுதான் இந்த லைவ் கேமை உருவாக்கி இருக்காங்க. ‘போக்கிமான் கோ’ நமது ஆண்ட்ராய்ட் மொபைலின் `ஜிபிஎஸ்'ஸையும், கடிகாரத்தையும் வெச்சு நாம் இருக்குற இடத்தைக் கணிக்குது. அதுக்கேற்ப, போக்கிமான் பொம்மைகளை உங்க மாய உலகில் உலவவிடுகிறது. இந்த கேமை விளையாட ஆரம்பிச்ச சிலர் நடந்தோ, பைக்கிலேயோ போனா கவனக்குறைவு ஏற்படும்னு, அதிக போக்கிமான்களை பெற இப்போ கால்டாக்ஸிகளில் போக ஆரம்பிச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோ. அந்தளவுக்கு இந்த கேமுக்கு அடிமையாகியிருக்காங்க. கேமை இலவசமாவும் டவுன்லோடு செய்துக்கலாம்.’’

‘‘புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு.’’

‘‘சிம்பிளா சொல்லணும்னா, மொபைலை ஒரே இடத்துல வெச்சுக்கிட்டு ஆடுற மொபைல் கேம்ஸ் மாதிரி இல்லாம  மொபைலின் உதவியோட நம்மை எழுந்து நடக்கவைக்கிற மொபைல் கேம்தான் இந்த ‘போக்கிமான் கோ’. உனக்கு இந்த கேம் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னா நான் சில லிங்க்ஸ் அனுப்புறேன்... படிச்சுக்கோ.’’

‘‘ஹேய், இந்த கேமை விளையாடுறதுக்கு முன்னாடி வீட்ல சொல்லிட்டுப் போறது ரொம்ப நல்லது.’’

‘‘ஆதிரா, எதோ டபுள் மீனிங்ல சொல்ற மாதிரி இருக்கே!’’

‘‘ஓகே... டேக் டைவர்ஷன். ‘போக்கிமான் கோ’ கேம்போல `ப்ரிஸ்மா ஆப்'பும் ட்ரெண்டிங்ல இருக்குல்ல...’’

‘‘ஆமாம்பா... மேக்கப், டச் அப்னு எதுவும் இல்லாம ஜஸ்ட் ஒரு செல்ஃபி எடுத்துட்டு, அதை ப்ரிஸ்மா மூலமா அழகழகா வரைஞ்சுக்கலாம்.’’

‘‘அழகோவியம்!’’

‘‘ஹலோ... அதுலயும் ஒரு சிக்கல் இருக்கே!’’

‘‘என்ன சிக்கல்?’’

‘‘இதை ஆப்பிள் போன்ல மட்டும்தான் யூஸ் பண்ண முடியும்!’’

‘‘அவ்வ்வ்!’’

‘‘சொல்லப்போனா, செல்ஃபி எடுக்கிறதே சிக்கல்தான். அதிலும் ஏடாகூட செல்ஃபி...’’

‘‘என்ன சிக்கல்?’’

‘‘உன் போனைக் கொடு சொல்றேன்.’’

‘‘முடியாது!’’

‘‘சும்மா கொடுப்பா...’’

‘‘இரு இரு... பெர்சனல் போட்டோக்களை எல்லாம் டெலிட் பண்ணிட்டு தர்றேன்.’’

‘‘இப்போ தெரியுதா செல்ஃபி... சிக்கல்னு! உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்கிட்டயே போன் தர மாட்டேங்கிற. ஆனா, உன் போன் ஒருநாள் காணாமப் போச்சுனா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாரு.’’

‘‘ஆமாதான்ல!’’

‘‘இந்த மெசேஜ் சொல்ற மாதிரி ‘செல்ஃபி’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் வந்திருக்கு. நிச்சயமா பாரு.’’

‘‘பார்த்துட்டா போச்சு!’’

‘ஓகே கேர்ள்ஸ்... வாங்க ‘போக்கிமேன் கோ’ ஆடுவோம். ஜூட்!’’

அனுஷா... ஆதிரா... இனியா!

- கச்சேரி களைகட்டும்...