Published:Updated:

கமலஹாசன் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!

Vikatan Correspondent
கமலஹாசன்  வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!
கமலஹாசன் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: நடிகர் கமலஹாசன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.  சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் நேற்று கொடும்பாவி  எரிப்பு போராட்டம் நடந்தது.

கமலஹாசன்  வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!

ஏற்கனவே தனக்கு சிலர் மிரட்டல் விடுத்ததாக கமல் போலீசில் புகார் அளித்தார்.நேற்று  அவரது அண்ணன் சந்திரஹாசனும் போலீசில் மனு கொடுத்தார்.

##~~##
இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் இன்று  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள்  வாயிலில் நிறுத்தப்பட்டு உள்ளனர். எ
ஆர்ப்பாட்டத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்து அழைத்து செல்ல  போலீஸ் வேனுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இது போல் கொட்டிவாக்கத்தில் உள்ள  கமலஹாசன் வீட்டிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கமலஹாசன்  வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!

அந்த வழியாக வருவோர் போவோரை போலீசார் கண்காணிக்கின்றனர். ‘விஸ்வரூபம்’  படத்தை இரு வாரங்களுக்கு திரையிடுவது இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு  எடுத்துள்ளனர். ஆனாலும், ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் கமலின்  பேனர்கள், கட் அவுட்களை ரசிகர்கள் பிரமாண்டமாக வைத்துள்ளார்கள். எனவே சில  தியேட்டர்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.