Published:Updated:

விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கோரி கமல் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

Vikatan Correspondent
விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கோரி கமல் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கோரி கமல் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்கக் கோரி கமல் வீட்டு முன்பு அவர் ரசிகர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கோரி கமல் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

விஸ்வரூபம் படத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டது கமல் ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. இந்த நிலையில் இன்று பகல் 12 மணி அளவில் கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டு அருகில் ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கமல் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள் விஸ்வரூபம் படத்திற்கான தடையை விலக்கி, படத்தை வெளியிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் கூறுகையில், " கமல் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம். திரையுலகினருக்கு ஏதேனும் பிரச்னை என்றால் கமல் முதல் ஆளாக நிற்பார் ஆனால், இந்த விவகாரத்தில் திரையுலகினர் யாரும் கமலுக்கு ஆதரவாக இல்லை. எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இதேநிலை நீடித்தால் பொங்கி எழுவோம்''' என்றார்.

இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் ஆழ்வார்பேட்டை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.