Published:Updated:

எதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்

எதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்
பிரீமியம் ஸ்டோரி

தொ.ப., குறிப்பிடும் சனநாயகத்தன்மை இன்றளவும் வைணவத்தில் நீடித்திருக்கின்றதா? இறையியல் ரகளையாளரே (Theological rapture) இராமானுஜர். ஆனால், `சமய ஞான வாயில்’ எனப்படும் தீட்சை, இன்றைய வைணவத்தில் எல்லா சாதியார்க்கும் உரித்தானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா?

திராவிடக் கட்சிகள் வேறு, திராவிட இயக்கங்கள் வேறு எனப் புரிந்துணர்வுடன் அணுகும் தொ.ப., அப்புறம் ஏன் இப்படி ஒரு குளறுபடியான, `திராவிட இயக்கங்களைக் கலைத்துவிடலாம்’ எனும் ஆலோசனையை முன்வைக்கின்றார்? அமைப்புகளைக் கலைக்கச் சொன்னவர் யாவரேனும் அவர்கள் அனைவருமே தத்தம் அமைப்பின் நிறுவனராகவோ, தலைமைப் பொறுப்பினராகவோதாமே இருந்திருக்கின்றனர்? ஓர் அமைப்பின் உறுப்பினராகவே இல்லாத ஒருவர், அதனைக் கலைக்கச் சொல்வதற்கு எவ்வாறு உரிமை பெற்றவராக இயலும்? காந்தியாரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் தத்தம் அமைப்பைக் கலைக்கக் கோரினர். ஆனால், அந்த அமைப்பினர் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. அது மதமோ, கட்சியோ பலாபலன்களை அனுபவித்து, ருசிகண்ட ஒட்டுண்ணிக் கூட்டம்... அதனைக் கலைத்திட ஒருபோதும் அனுமதிக்கவே அனுமதிக்காது.

தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் இன்றளவும் இயங்கிவரும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்கள் மூன்றும் பெரியாரியத்தை வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் காத்திரமாகக் கொண்டுசெலுத்தக்கூடியனவாகத்தானே இயங்கிவருகின்றன?

அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவையின் புரவலர் - தலைவராக, வே.ஆனைமுத்துவே உள்ளார். ‘மண்டல் குழு’ ஏற்படவும் ‘டங்கல்’ பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படவும் அமைப்பு ரீதியாகப் பாடாற்றியவரும் அவரே. ‘பெரியார் சிந்தனைகளை’ 20 தொகுதிகளாக அவரே வெளிக்கொணர்ந்தார்.

‘வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலங்கள்’ 22 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 39 ஆண்டுகளாக ‘சிந்தனையாளன்’ மாத இதழ் வெளிவருகின்றது. ஆனைமுத்துவின் `கருத்துக் கருவூலங்கள்’, அவரின் சமாந்தர வரலாற்று ஆவணங்களாகும்.

கோவை இராமகிருட்டிணன் (த.பெ.தி.க) சூழலியற் போராளிகளையும் ஒருங்கிணைத்து கூட்டியக்கமாகக் கொண்டுசெலுத்துகின்றார். `... கடல் தாண்டித் தமிழீழம் சென்று களத்தில் நின்ற போராளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் கொளத்தூர் மணியும், கோவை இராமகிருட்டிணனும்’ எனக் காசி ஆனந்தன் பதிவுசெய்துள்ளார். (‘காக்கைச் சிறகினிலே’ ஏப். `16). புத்தியக்கங்களை உருவாக்கலாம் என்னும் தொ.ப., அதற்கான குறிக்கோளையும் தத்துவார்த்தப் பின்புலத்தையும் திட்ட வரைவையும் சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism