Published:Updated:

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14

ருத்துவக் கட்டணம் ராக்கெட் போல உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த அதிகப்படியான செலவில் இருந்து நம்மைக் காப்பது மெடிக்ளெய்ம். இதுபற்றிய விழிப்புஉணர்வு இப்போதுதான் பரவிவருகிறது.

எல்லோருக்கும் எல்லா காப்பீடுகளும் பொருந்தாது என்பதால், வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பாலிசிகளை மெடிக்ளெய்ம் நிறுவனங்கள் அளிக்கின்றன. இளம் வயதில் காப்பீடு எடுத்தால், ப்ரீமியம் குறைவு. அதுவே, வயது அதிகரித்தால், உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், ப்ரீமியம் அதிகம். மாரடைப்பு, வலிப்பு நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மெடிக்ளெய்ம் பாலிசி அளிக்க நிறுவனங்கள் மறுப்பதும் உண்டு. ஆனால், அவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்க, சில பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. அதனால்தான், முதியவர்களுக்கு, புற்றுநோய் பாதுகாப்பு, சர்க்கரை நோய் பாதுகாப்பு, கிரிட்டிக்கல் இல்னெஸ் என்று விதவிதமாக பாலிசிகள் கிடைக்கின்றன. இந்த இதழில் மாரடைப்பு வந்தவர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக, ஆரோக்கியமான நபர் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கிறார் என்றால், அவருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்க்கான கவரேஜ் கிடைத்துவிடும். கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி எடுப்பவர்களுக்கும் முதன்முறையாக மாரடைப்பு வந்தால், கவரேஜ் கிடைத்துவிடும். ஆனால், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கு பாலிசி தர மறுத்துவிடுகின்றன மெடிக்ளெய்ம் நிறுவனங்கள். இதனால், எந்த மருத்துவக் காப்பீடும் இன்றி அவதியுறுகின்றனர் இதய நோயாளிகள்.

இந்தியாவில் இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பாலிசிகளை சில காப்பீட்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இவர்கள், வெறும் இதய நோய்க்கான கவரேஜ் மட்டும் அளிப்பது இல்லை. வேறு வகையான நோய் பாதிப்பு, விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் க்ளெய்ம் அளிக்கின்றனர். பொதுவான மருத்துவக் காப்பீடு போலவே, இந்த பாலிசியிலும் ஏற்கெனவே உள்ள நோய்களுக்குக் காத்திருப்பு காலமும் உண்டு.

இதய நோய்க்கு என்று ஐ.சி.ஐ.சிஐ லும்பார்டு மற்றும் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பிரத்யேக பாலிசிகளை அளிக்கின்றன

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாலிசி அலசல்:

ஸ்டார் கார்டியாக் கேர்


கோல்டு மற்றும் சில்வர் என்று இரண்டு வகையில் வருகிறது. 10 வயது முதல் 65 வயது வரை பாலிசி எடுக்கலாம். அதேபோல, மாரடைப்புக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்தவர்,  சிகிச்சைக்குப் பிறகு ஆறு மாதங்களில் இருந்து மூன்று ஆண்டுக்குள் பாலிசியை எடுக்கலாம். அதன் பிறகு தங்கள் வாழ்நாள் முழுக்க பாலிசியைப் புதுப்பிக்கலாம். மூன்று மற்றும் நான்கு லட்ச ரூபாய்க்கு பாலிசி கிடைக்கிறது. 10 - 60 வயதுக்குட்பட்டவர், நான்கு லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுப்பதாக இருந்தால்,  30,000 ரூபாய் ப்ரீமியம் கட்டினால் போதும். அதுவே, 61 வயதைக் கடந்தவர் என்றால், 34 ஆயிரம் ரூபாய்தான் ப்ரீமியம். உள்நோயாளி மற்றும் புறநோயாளியாக சிகிச்சை பெறலாம். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு 48 மாதங்களுக்குப் பிறகு கவரேஜ் கிடைக்கும். 101 வகையான டே கேர் சிகிச்சைகளுக்கு கவரேஜ் கிடைக்கிறது. பாலிசி எடுப்பதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். 60 வயதுக்கு மேல் செல்லும்போது, 10 சதவிகிதக் கட்டணத்தை நோயாளி செலுத்த வேண்டியிருக்கும். பாலிசி எடுத்த முதல் 90 நாட்களுக்குள் ஏற்படக்கூடிய இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு க்ளெய்ம் கிடையாது. இதய நோய் தவிர்த்து, இதர நோய்களுக்குத் தொடர்ந்து பாலிசி புதுப்பித்து வரும்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே க்ளெய்ம் கிடைக்கும். பொதுவான மருத்துவக் காப்பீட்டில் உள்ளது போன்று, பல் மருத்துவம், காஸ்மெட்டிக் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு க்ளெய்ம் கிடையாது.

- தொடரும்

விபத்துக் காப்பீடு

இங்கு விபத்துக்காப்பீடு பற்றிய விழிப்புஉணர்வும் மிகவும் குறைவாக உள்ளது. இது மருத்துவக் காப்பீடு இல்லை. ஆனால், மருத்துவக் காப்பீட்டைப்போல பெரிய அளவில் உதவக்கூடியது. இதில், அதிக மருத்துவ உதவி தேவைப்படக்கூடிய நாய்க்கடி, பாம்புக்கடிக்குக்கூட நிவாரணம் பெறலாம். விபத்துக் காப்பீட்டை எடுப்பதன் மூலம், விபத்தினால் ஏற்படும் மரணம், முக்கிய உடல் உறுப்புக்களை (கண், கை, கால் முதலியன) நிரந்தரமாக இழத்தல், சேதமடைதல் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குச் செயலற்று இருத்தல் போன்ற இழப்புகளை ஈடுசெய்யலாம். பொதுவாக, உடல் உறுப்புக்கள் இழப்பு ஏற்படும்போது, குறிப்பிட்ட அளவு நிவாரணமும், உயிரிழப்பு ஏற்படும்போது, காப்பீடு செய்த முழுத் தொகையையும் பெறமுடியும்.

இந்தக் காப்பீட்டை சுயதொழில் செய்வோர், பணியாளர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். இதில், தொழில் நிமித்தமான விபத்து மற்றும் இன்றி சாலை விபத்து, நெருப்பு, நீர், மின்சாரம் போன்றவற்றினால் ஏற்படும் விபத்துகளுக்கும் இழப்பீடு உண்டு. ஆனால், விபத்து ஏற்படக்கூடிய விளையாட்டில் ஈடுபடும்போதோ, மது, போதைப்பொருட்கள் பயன்படுத்தியதால் விபத்து ஏற்பட்டாலோ, தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியால் ஏற்படும் விபத்துகளுக்கோ எந்த இழப்பீடும் கிடைக்காது.

பொதுவாக, ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுத்தோம் என்றால், 30, 40 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், இதில் அவ்வளவு ப்ரீமியம் தொகை இல்லை என்பதால், அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். வயது, செய்யும் தொழில், காப்பீட்டு தொகையின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் இதற்கான ப்ரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த காப்பீட்டை அளிக்கின்றன.