பனிமலைதான் என் கனவிலும் நினைவிலும். ஆவலுடன் கேபினைவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தேன். வடக்குத் திசையை ஆவலுடன் பார்த்தேன். மேகம் முழுமையாக மலைகளை மூடியிருந்தது ஏமாற்றமாக இருந்தது. சரி, வெயில் ஏறினால் மேகம் மறைந்துவிடும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என காலைக்கடன் முடிக்க ஏதாவது இடம் கிடைக்குமா எனத் தேடினேன். நாங்கள் நின்றிருந்த மலைப் பகுதி, வெள்ளைக் கூழாங்கற்களால் ஆன மலையைப் போல இருந்தது. அதை நம்பி எந்த சரிவிலும் மேட்டிலும் ஏற முடியவில்லை. காலை வைத்தவுடன் கற்கள் நழுவி உருள ஆரம்பித்தன. சாலையில் நின்றிருந்த லாரிகளின் டிரைவர்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் மேலும் கீழுமாக சாலையில் அலைந்துகொண்டிருப்பதன் அர்த்தம் விளங்கியது. ஒரு வழியாக ஒரு கிராமத்துக்குச் செல்லும் கிளைச் சாலையைக் கண்டுபிடித்து, வாட்டர் பாட்டில்கள் சகிதம் புறப்பட்டோம்.

பூமராங்போல வளைந்திருந்த அந்த மலைச் சாலையின் மறுமுனையில் கடைகள் இருப்பது கண்ணுக்குத் தெரிய... அதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். சுமார் 2 இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கடைகள் இருந்தன. டீ, பிஸ்கெட், கூல் ட்ரிங்ஸ், பிரெட் போன்றவை மட்டுமே அங்கு கிடைத்தன. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் லாரி திரும்பினோம். லாரிகள் செல்ல எப்போது வழி திறக்கும் என்பது தெரியாததால், எந்நேரமும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பரமேஸ்வரன் சமையலுக்கான வேலைகளை ஆரம்பிக்க... நான் அருகே வேறு தமிழக லாரிகள் நிற்கின்றனவா எனத் தேடிப் புறப்பட்டேன். அன்று ஸ்ரீநகரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வதாகச் செய்தி. எப்படியும் நிகழ்ச்சி முடியும் வரை மேலே செல்ல அனுமதி கிடைக்காது என்பது டிரைவர்களின் அனுமானம். வரிசை கட்டி நின்ற லாரிகளில் ஒவ்வொரு மாநிலமாக ஒன்றுகூட ஆரம்பித்தார்கள். பதான்கோட்டில் இருந்து நம்முடன் வந்த லாரிகளை அடையாளம் கண்டு பேசினேன். ஆங்காங்கே இருந்த இடைவெளிகளிலும் மாநில வாரியாக அட்ஜஸ்ட் செய்து லாரிகளை நிறுத்த, தமிழக லாரிகள் நான்கும் ஒன்று சேர்ந்தன. சமையல் பொருட்களும் சமைத்த உணவுகளும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள... தமிழகத்தின் நெடுஞ்சாலை ஓரம் ஒன்றில் நிற்பது போன்ற உணர்வு.

அங்கிருந்த டிரைவர்களில் வாழப்பாடியைச் சேர்ந்த கோவிந்தன் மட்டும்தான் வயதில் சிறியவர். ஆனால், 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஈரோட்டைச் சேர்ந்த பழனிவேலு, பெருந்துறையைச் சேர்ந்த பழனிசாமி, சென்னியப்பன் ஆகியோருக்கு 30 ஆண்டுகள் அனுபவம். கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தோம். எல்லோரும் மையமாகச் சொன்ன விஷயம், டோல்பூத்துகள் பற்றித்தான். சாலை போட்ட கான்ட்ராக்ட்காரர் காசு செலவழித்திருப்பார்தான்; அதைத் திரும்ப எடுக்க வேண்டும்தான். இவ்வளவு செலவு, இவ்வளவு ரூபாய், இத்தனை ஆண்டுகளுக்கு வசூலிக்க வேண்டும் என்ற கணக்கு இருக்குமல்லவா? காருக்கு இவ்வளவு; பஸ்ஸுக்கு இவ்வளவு, லாரிக்கு இவ்வளவு என வகைவாரியாக பட்டியல் போட்டு டோல்பூத்தின் ஒரு கிலோ மீட்டருக்கு நெடுக வைத்திருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு செலவு, எத்தனை நாள் வசூல் செய்வோம் என்ற கணக்கு எங்கேயும் இல்லை. அது மட்டுமா? வரும்போது 350 ரூபாய் கொடுத்த டோல்பூத்தில், திரும்பும்போது 400 ரூபாயாக எப்படி உயர்த்திக்கொள்கிறார்கள் என்பதுதான் புரியவே இல்லை. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வம்பாடுபட்டு மிச்சம் செய்த காசு எல்லாம் இந்த டோல்பூத் பூதங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் இவர்களின் ஆதங்கம்.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை, ஒரு கட்டத்தில் கேளிக்கை மையம் போல ஆகிவிட்டது. சீட்டு, ஆடுபுலி விளையாட்டுகளும், சாலையிலேயே சமையல் வேலைகளும் நடப்பதைப் பார்த்தபோது நம் ஊர்த் திருவிழா போலத் தோன்றியது. இன்று இரவு பாதையைத் திறந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. இரவை எல்லோரும் எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். மெள்ள இருள் கவிந்ததும் கூடவே குளிரும் சூழ்ந்துகொண்டது. அதுவரை சாலையில் சதுரங்கம் ஆடியவர்கள் அனைவரும் கேபினுக்குள் சென்று அடைந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கேபினுக்குள் பொறுமையிழந்து உட்கார்ந்திருந்தோம். ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோய், ‘’சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்; யாராவது ஒருவர் விழித்திருந்தால் போதும்’’ என்று மணி முடிவெடுத்தார். சாப்பிட்டுவிட்டு கம்பளியைப் போர்த்தியதும் தூக்கம் இழுத்துக்கொண்டுவந்தது. லாரி புறப்பட்டால் எழுந்து கொள்ளலாம் என்ற முடிவோடு தூங்கியவன், மீண்டும் காலையில் எழுந்தபோது, லாரி அதே இடத்தில்தான் நின்றிருந்ததைக் கண்டதும் ‘சே’ என்றாகிவிட்டது.

பிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுக்கத் தீர்ந்துவிட்டது. சமையலுக்கும் புழக்கத்துக்கும் சுத்தமாகத் தண்ணீர் இல்லை. அங்கு நின்றிருந்த லாரிகள் அனைத்துக்குமே இந்தப் பிரச்னைதான். ஆளாளுக்கு கையில் கேன்கள் சகிதம் அங்கும் இங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள். இதுதான் நெடுஞ்சாலையில் மிகப் பெரிய பிரச்னை. எதுவுமற்ற வனாந்திரத்தில் பல நாட்கள் காத்திருக்க நேரும்போது, அபூர்வமான பொருளாக தண்ணீர் மாறிவிடுகிறது. தண்ணீர் இல்லையென்றால், எதுவுமே செய்ய முடியாது. இரண்டு நாட்களாக சாலையில் நிற்கிறார்களே என அரசு அமைப்புகள் உதவ முன்வருவது இல்லை. லாரி டிரைவர்கள்தானே என்ற அலட்சியம் இந்தியாவில் உள்ள எல்லா அரசு அமைப்புகளிடமும் இருக்கிறது.

மெயின் ரோட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கீழே இறங்கும் கிராமச் சாலையின் ஓரத்தில், தண்ணீர் பைப் இருக்கும் விஷயத்தை ஒரு பஞ்சாபி டிரைவர் எல்லா டிரைவர்களுக்கும் அறிவித்தார். ஆனால், தலைகீழாக இறங்கும் அந்தச் சரிவான பாதையில் வெறும் ஆளே நடந்து வருவது கஷ்டம். இதில் கேனில் தண்ணீர் நிரப்பித் தூக்கி வருவதை யோசித்தே பார்க்க முடியவில்லை. ஆனாலும் கேன்களைத் தூக்கிக்கொண்டு சிலர் ஓடினார்கள். தமிழக லாரி டிரைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு ஆட்டோவைப் பிடிப்பது; அதில் நான்கு கேன் தண்ணீர் பிடித்துவருவது எனத் திட்டமிட்டு ஆட்டோ ஒன்றை மடக்கினோம். 100 ரூபாய் கேட்டார் அந்த டிரைவர். அதை நால்வரும் பகிர்ந்துகொண்டோம். அந்த ஆட்டோவை தண்ணி வண்டியாக நாள் முழுக்க எல்லா லாரி டிரைவர்களும் பயன்படுத்தினார்கள்.

மீண்டும் சமையல், உணவு, தூக்கம் என சோம்பலாக இரண்டாம் நாளின் ஒளி தீர்ந்து இருள் பூசியது. சேலத்தில் லாரியில் ஏறி மொத்தமாக 11 நாட்கள் ஆகியிருந்தன. குளித்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. குண்டூசியை எலும்பில் குத்துவதுபோல குளிர் ஊடுருவிக்கொண்டி ருந்தது. முதல் நாளும் பகலும் உற்சாகமாக இருந்தவர்கள், சோர்வாக இருந் தார்கள். ‘இன்றும் நாம் ஸ்ரீநகர் செல்லவில்லை என்றால், வந்த வழியே திரும்பிவிடலாம்’ என மணி சொல்ல ஆரம்பித்திருந்தார். ஸ்ரீநகர் எனும் இலக்கை நாம் எட்ட முடியாதோ என்ற எண்ணம் மனதில் எழுந்து பாரமாக அழுத்தியது. இரவு எட்டு மணி ஆனது. மதியம் சமைத்த சாதம் இருந்தது. ஆனால், யாருக்கும் சாப்பிடப் பிடிக்கவில்லை. உற்சாகம் வடிந்து விரக்தியுடன் இருட்டில் அமைதியாக கேபினுக்குள் உட்கார்ந்திருந்தோம்.

திடீரென தூரத்தில் லாரிகள் ஸ்டார்ட் செய்யும் உறுமல் சத்தம் கேட்க... அனைவருமே பரபரப்பானோம். சில நிமிடங்கள்தான். கூச்சல்கள், இன்ஜின் இரைச்சல் என அந்த மலைப் பாதை கிடுகிடுத்தது. முன்னால் நின்றிருந்த லாரிகள் ஒவ்வொன்றாக வேகமெடுக்க ... எதிரே கறுத்து உயர்ந்திருந்த மலையை நோக்கிப் பாய்ந்தன லாரிகள்!

(நெடுஞ்சாலை நீளும்)