Published:Updated:

135 சிசியில் ஒரு 150 சிசி பைக்... பஜாஜ் பல்ஸர் 135LS விற்பனை நிறுத்தம்!

135 சிசியில் ஒரு 150 சிசி பைக்... பஜாஜ் பல்ஸர் 135LS விற்பனை நிறுத்தம்!
135 சிசியில் ஒரு 150 சிசி பைக்... பஜாஜ் பல்ஸர் 135LS விற்பனை நிறுத்தம்!

135 சிசியில் ஒரு 150 சிசி பைக்... பஜாஜ் பல்ஸர் 135LS விற்பனை நிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புனேவைச் சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் புகழை, இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்த்த பல்ஸர் சீரிஸ் பைக்குகளின் ஆரம்பகட்ட மாடலான பல்ஸர் 135LS மற்றும் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 ஆகிய பைக்குகளுக்கு, திடீரென எண்ட் கார்டு போட்டுவிட்டது பஜாஜ். இதன் எதிரொலியாக, அந்த 2 பைக்குகளும் பஜாஜ் இணையதளத்தில் இருந்து  நீக்கப்பட்டுவிட்டன. பஜாஜின் சக்கன் தொழிற்சாலையில் பல்ஸர் 135LS பைக்கின் உற்பத்தி தொடர்ந்தாலும், அவை ஏற்றுமதிக்காக மட்டுமே இருக்கும் எனத் தகவல்கள் வந்துள்ளன.


அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குக்கு மாற்றாக அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். ஆனால், பல்ஸர் 135LS பைக்கை மறுஅறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. என்றாலும், விரைவில் ஸ்ப்ளிட் சீட் - பின்பக்க டிஸ்க் பிரேக் - தடிமனான சஸ்பென்ஷன் மற்றும் டயர்கள்  உடன் விற்பனைக்கு வரப்போகும் பல்ஸர் 150 Twin Disc மாடல், அந்த பைக்கின் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விற்பனை நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன?


அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது ஏப்ரல் 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு  விதிகளை மனதில்வைத்து, வாகனத் தயாரிப்பாளர்கள் அனைவரும் தமது புதிய மாடல்களை வடிவமைத்து வருகின்றனர். எனவே, பஜாஜைப் பொறுத்தமட்டில், அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரப்போகும் முற்றிலும் புதிய பல்ஸர் சீரிஸ் பைக்கில் கார்புரேட்டருக்குப் பதிலாக, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்நிலையில், இம்மாதம் ஏப்ரல் 1, 2018 முதலாக நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய விதியின்படி, 125சிசி-க்கும் குறைவான புதிய டூ-வீலர்களில் CBS (Combined Braking System) மற்றும் 125சிசி-க்கும் மேற்பட்ட புதிய டூ-வீலர்களில் ABS (Anti-Lock Braking System) இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


இதனால் பல்ஸர் 135LS பைக்கில் கூடுதலாக சிங்கிள் சேனல் ABS பொருத்தப்படும்போது, பைக்கின் விலை 6 ஆயிரம் முதம் 8 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்படும். தற்போதைய சூழலிலேயே விற்பனை குறைவாக இருக்கும்போது, விலை உயர்வால் அந்த பைக்கின் விற்பனை மேன்மேலும் சரியும். எனவே, அதிகளவில் விற்பனையாகாத மாடல்களின் உற்பத்தியை, அந்தந்த நிறுவனங்கள் நிறுத்தும் படலத்தை, பஜாஜ் ஆரம்பித்து வைத்திருக்கிறது எனலாம். அதன் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. 


பஜாஜ் பல்ஸர் 135LS பைக்கில் என்ன ஸ்பெஷல்?


கடந்த 2009-ம் ஆண்டின் இறுதியில், 'இந்தியாவின் முதல்  4 வால்வ் DTS-i இன்ஜின் கொண்ட பைக் ' என்ற பெருமையுடன் அறிமுகமான பல்ஸர் 135LS, ஷார்ப்பான டிசைன் - குறைவான எடை - பவர்ஃபுல் 4 வால்வ் இன்ஜின்  - அதிரடியான விலை - சிறப்பான மைலேஜ் எனப் பல ப்ளஸ்பாயின்ட்களைத் தன்வசம்  கொண்டிருந்தது. இதனால் விற்பனைக்கு வந்த 6 மாதங்களிலேயே, இந்த பைக் 1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது. 


மேலும், 125சிசி பைக் விலையில் 150சிசி பைக்கின் பர்ஃபாமென்ஸை வழங்கிய 122 கிலோ எடையுள்ள பல்ஸர் 135LS, 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 5.1 விநாடிகளில் எட்டிப்பிடித்ததுடன், அதிகபட்சமாக 115கிமீ வேகம் வரை சென்றது! ஆனால், பல்ஸர் என்றால் கட்டுமஸ்தான ஸ்போர்ட்ஸ் பைக் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர் பட்டாளம் இருந்ததால், நாளடைவில் இந்த Light Sport பைக்கின் விற்பனை, மெல்லச் சரிவைக் காணத் தொடங்கியது.


கடந்த 2016-ம் ஆண்டின் இறுதியில், 'பேபி பல்ஸர் ' என அழைக்கபட்ட  135LS பைக்கின் BS-4 மாடலைக் களமிறக்கியது பஜாஜ்.  இதன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, முந்தைய  BS-3  மாடலுடன் ஒப்பிடும்போது, பைக்கின் டிஸைனில் இருந்த ஸ்போர்ட்டியான அம்சங்கள் முழுக்கக் காணாமல் போயிருந்தன. சிங்கிள் பீஸ் சீட் & கிராப் ரெயில், Heel Toe முறையிலான கியர் லீவர், உயரமான வைஸர், மேனுவல் சோக் ஆகியவற்றை, இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். 


மற்றபடி மேட் ஃபினிஷ் உடன் கூடிய எக்ஸாஸ்ட் & ஹேண்டில்பார், புதிய பாடி கிராஃபிக்ஸ் & கலர் ஆப்ஷன்கள், அலாய் வீல்களில் Pin Strip, அலாய் பாகங்களில் Gun Metal கலர் ஃபினிஷ், ஃபேஸ்லிஃப்ட்டட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தங்க நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், கிரோம் லோகோ எனச்சில பிரிமியம் அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. என்றாலும், 68கிமீ அராய் மைலேஜ் கொண்ட ஒரு லைட்  ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் பைக்கைப் பிராக்டிக்கலான பைக்காக மாற்றியமைத்த பஜாஜின் முடிவுக்கு, பல்ஸர் ஆர்வலர்கள் போதிய வரவேற்பு அளிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு