Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!

கவிதை அரங்கேறும் நேரம்!டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா!

கவிதை அரங்கேறும் நேரம்!டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!


 

‘அடிக்கும் காற்றும்
சில்லென்ற சிறுதூறலும்
மனதை ஏதோ பிசைகிறதே!’


என்று  ஃபேஸ்புக்கில் கவிதை ஒன்றை ஆதிரா போஸ்ட் செய்ய, ‘அடடே ஆச்சர்யக்குறி!’ என்று கமென்ட் செய்தாள் இனியா. `வாட்ஸ்அப்'பில் வந்த அனுஷா, ‘ச்சே... பொண்ணு என்னமா ஃபீல் பண்ணுது’ என்று சொல்லிக்கொண்டே அன்றைய சந்திப்புக்கு நேரம் குறிக்க, அன்று மாலை மூவரும் ஆதிரா வீட்டில் ஆஜர் ஆனார்கள்.

‘‘என்ன ஆதிரா... கவிதை களைக்கட்டுதுபோல.?!’’

‘‘கவிதையா, காதலா அனு?’’

‘‘அச்சச்சோ..! ஒரு கவிதை எழுத முயற்சி பண்ணினது தப்பா மக்களே? ஆடிக் காத்தும் மழையும் சில்லுன்னு ஒரு ஃபீல் கொடுக்க, சும்மா ரெண்டு வரி போஸ்ட் பண்ணினேன்? இதுக்குப் போய் இப்படி வெச்சு செய்றீங்களே ரெண்டு பேரும்?!’’

‘‘ஓவர் தன்னடக்கம்மா உனக்கு! நீ படைப்பாளி மட்டுமா, படிப்பாளியும் இல்லையா?!’’

‘‘என்னவாம்..?’’

‘‘மேடம் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கீங்கள்ல... அதைப் பத்திதான் சொல்றா இனியா!’’

‘‘ஆதிரா... அதெப்படி கவிதையும் எழுதுற, பரீட்சைக்கும் படிக்கிற, அரட்டைக்கும் வந்துடுற? எப்படி நீ இப்படி?!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘என்ன இன்னிக்கு உங்க தோட்டாக்கள் எல்லாம் என்னை நோக்கியே பாயுது..?! நீங்களும்கூட சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்குப் படிக்கலாம் டார்லிங்ஸ். சமீபத்தில் வெளியான `யுபிஎஸ்சி' தேர்வு முடிவுகள்ல முதல் ரேங்க் வாங்கின டெல்லியைச் சேர்ந்த 22 வயசு இளம்பெண் டீனா டாபி, தன் அனுபவத்தை சூப்பர் டிப்ஸா கொடுத்திருக்காங்க. படிச்சா ‘நாமளும் முயற்சி செய்யலாமே’னு உங்களுக்கும் நம்பிக்கை வரும். லிங்க் அனுப்புறேன்.’’

‘‘சரி, அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்... இந்த வாரம் எங்கேயாச்சும் ஜாலியா வெளிய போகலாமா?’’
 
‘‘காத்து ச்சும்மா சில்லுன்னு வீசுது. இந்த க்ளைமேட்டுக்கு எங்க அத்தை ஊருக்குப் போனா, ‘சின்னத்தம்பி’ குஷ்புபோல வயக்காட்டுல இறங்கி விளையாடலாம்!’’

‘‘ஹை கேக்கிறப்பவே சூப்பரா இருக்கே!’’

‘‘கேக்க மட்டும் இல்ல, இந்த வீடியோவுல வர்ற மாதிரி பார்க்கவும் செம சூப்பரா இருக்கும். இருங்க `வாட்ஸ்அப்' பண்றேன்.’’

‘‘இன்னிக்கு நியூஸ் பேப்பர் எடுத்துட்டு வா ஆதிரா... நான் காலையில படிக்கல.’’

‘‘நல்ல மூடுல இருக்கோம். அதைப் பார்த்தா அப்செட் ஆயிடுவோம். அந்தளவுக்கு, சமீப காலமா பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கொடூரமாயிட்டே வருதுப்பா.’’

‘‘உண்மைதான். சுவாதி, வினுப்பிரியா, இப்ப ஒருதலைக் காதலால பலியான நவீனா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட கலைச்செல்வி... பெயர்கள் மட்டும்தான் மாறுதே தவிர, காட்சிகள் எதுவும் மாறல. இந்த அநியாயங்களை எல்லாம் படிக்கிறப்போ, மனசு கொதிக்குது. ஆனா, அதிகபட்சம் ஃபேஸ்புக்ல பொங்கி எழுந்து ஒரு போஸ்ட் போடுறதோட அதையெல்லாம் கடந்து போயிடுறோம். யங்ஸ்டர்ஸ் நாம ஏதாச்சும் வலிமையா எதிர்வினை ஆற்றணும்ப்பா.

‘‘நிச்சயமா எதிர்வினை சீக்கிரமே வந்து தீரும் அனுஷா.''

``சரி, உங்க அண்ணா வேலைக்குப் போகாம வீட்லயே இருக்கார்னு ஃபீல் பண்ணியே... இப்போ எல்லாம் `ஓ.கே' ஆயிடுச்சா ஆதிரா?’’

‘‘வேலை கிடைக்கிறதே கஷ்டம். இதுல ‘கம்பெனியில இது சரியில்ல, அது சரியில்ல’னு எப்பப் பார்த்தாலும் ஏதாவது புலம்பிட்டே இருக்காண்டி.’’

‘‘அவருக்கு என்ன பிரச்னைனு தெரியல. இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது, ஒரு பணியாளர் தன்கிட்ட சரிசெய்துக்க வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்பிட்டு ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன். அதை உனக்கு ஷேர் பண்றேன். நீ உங்க அண்ணனுக்கு ஷேர் பண்ணு. ஒருவேளை அவருக்குப் பயனுள்ளதா இருக்கலாம்.’’

‘‘படிப்பு, வேலையெல்லாம் இருக்கட்டும். இனியா... லேட்டஸ்ட் மியூசிக் ஆல்பம் ஏதாச்சும் வெச்சிருக்கியா?’’

‘‘யுவன் மியூசிக்ல விஜய்சேதுபதியோட ‘தர்மதுரை’ படத்தோட ஆடியோ ரிலீஸ் ஆகியிருக்கு. ஷேர் இட் ஆன் பண்ணு... அனுப்புறேன்.’’

‘‘ரைட்டு... இனி இவ ஹெட்செட் மோடுக்குப் போயிடுவாளே!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

UPSC தேர்வின் டாப்பர் டீனா டாபி சொல்லும் 5 வெற்றி ரகசியங்கள்!
http://bit.ly/29Hb0B5

அனுஷா... ஆதிரா... இனியா!

`இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!' - கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்
http://bit.ly/2aZJoEH

அனுஷா... ஆதிரா... இனியா!

வேலை செய்யும் இடத்தில் இந்த 6 வாக்கியங்களைப் பயன்படுத்தாதீர்கள்!
#DailyMotivation
http://bit.ly/2arziM0

அனுஷா... ஆதிரா... இனியா!

வயல் காத்து வீசுதே... வீடியோவைப் பார்க்க!
http://bit.ly/2aztjpu

அனுஷா... ஆதிரா... இனியா!

எங்களை மன்னிக்காதே நவீனா..!
- ஒரு மரணம் உணர்த்தும் உண்மை
http://bit.ly/2axcv2x

அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

`தர்மதுரை' படத்தின் பாடல்கள் கேட்டு தலையை ஆட்டலாம்.
http://bit.ly/2aB0mYj

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism