Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா!

அனுஷா... ஆதிரா... இனியா!
News
அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘பண்றோம்... பின்றோம்!’’ - டிஜிட்டல் கச்சேரி

ண்களைக் கசக்கிக்கொண்டே சோர்ந்த நிலையில் சோபாவில் உட்கார்ந்திருந்தாள் இனியா.

‘‘என்னடி இனியா... மொபைலும் கையுமா இருப்பியே... இன்னைக்கு என்ன ரொம்ப டயர்டா இருக்கே..?’’

‘‘வாட்ஸ்அப்ல வர்ற மெசேஜ் எல்லாம் பார்த்தா அழுகையா வருதுடி!’’

‘‘அப்படி என்னம்மா பார்த்த..?’’
 
‘‘ரெண்டு மூணு நாளாவே எனக்குக் கண் எரிச்சலா இருக்கு. இந்த நேரத்துல, ‘அதிக நேரம் கேட்ஜட்ஸ் யூஸ் பண்ணினா கேன்சர் வரும்’னு வாட்ஸ்அப்ல ஒரு ஃபார்வேர்டு மெசேஜ் வேற படிச்சேனா... அதான் பயமா இருக்கு.’’

‘‘ஹாஹாஹா!’’

அனுஷா... ஆதிரா... இனியா!

‘‘ஏண்டி... எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்... சிரிக்கிற?’’

‘‘ஒய் பிளட்... சேம் பிளட் ஃபீலிங் இனியா. எனக்கும் இப்படித்தான் கண் எரிச்சல் இருந்தது. டாக்டர்கிட்ட போய் செக்-அப் பண்ணினேன். Anti Reflecting Coating-ல கிளாஸ் கொடுத்திருக்கார்.’’

‘‘ஏய் அனு... இதெல்லாம் எப்ப நடந்துச்சு? சொல்லவே இல்ல..!’’

‘‘இது சம்பந்தமா ஆன்லைன்ல ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன். பல மணி நேரம் கேட்ஜட்ஸ் பயன்படுத்துறவங்க இந்த கிளாஸ் போடுறது நல்லதுனு தெரிஞ்சுக்கிட்டேன். டாக்டர்கிட்ட செக்-அப் செய்தப்போ, அவரும் இதையே சஜஸ்ட் செஞ்சார். அதான்..!’’

‘‘வழக்கமா இந்த மாதிரி ஏதாச்சும் நியூஸ் படிச்சா அதை ஷேர் பண்றதுதானே நம்ம குல வழக்கம். ஆதிரா, நீயே இந்த நியாயத்தைக் கேளு...’’

‘‘அய்யய்யோ, ஆளைவிடுங்க... லிங்க் அனுப்பிட்டேன் இப்போ!’’

‘‘அது..!’’

‘‘சரி... நேத்து சுதர்சனா பர்த்டே பார்ட்டிக்குப் போனப்ப ஒரு பாட்டு பாடினியே ஆதிரா, என்ன பாட்டு அது?’’

‘‘அரோல் கரோலி இசையில கவிஞர் அறிவுமதி எழுதி உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடி வெளிவந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்ப்பா அது!’’

‘‘வழக்கமான ‘ஹாப்பி பர்த்டே டு யூ’ இல்லாம, அந்தத் தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை கேட்க ரொம்ப நல்லாயிருந்ததுடி. ஆதிரா, ஒரு தடவை பாடேன் ப்ளீஸ்...’’

‘‘நீண்ட நீண்ட காலம்
நீ
நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்
நீ
வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்!
அறிவு வேண்டும்!
பண்பு வேண்டும்!
பரிவு வேண்டும்!
எட்டுதிக்கும் புகழ வேண்டும்!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க
உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்!
சர்க்கரைத் தமிழள்ளித்
தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்.
பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!’’


‘‘செம ஆதிரா... க்ளாப்ஸ் க்ளாப்ஸ் க்ளாப்ஸ்! எப்டி லிரிக்ஸை இவ்ளோ மனப்பாடமா வெச்சுக்கிற?’’

‘‘நல்ல பாடல்கள் எதுவா இருந்தாலும் அது எனக்குத் தானா மனப்பாடம் ஆகிடும் அனு. நா. முத்துக்குமாரோட பல பாடல்கள் அப்படி என் நினைவில் இருக்கு. அவர் இவ்ளோ சீக்கிரம் இறந்து போயிருக்கக் கூடாது.

‘ஒரு பாதி கதவு நீயடி..
மறுபாதி கதவு நானடி...’
‘நினைத்து நினைத்துப் பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்’
‘உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்’
இப்படி அவர் எழுதின பாடல்கள் எல்லாம் மனசுல தேங்கி நிக்குது அனு.’’


‘‘உண்மைதான் ஆதிரா. கவிதை, திரைப்பாடல், நாவல்னு அவரோட களம் ரொம்பப் பெருசு. காலன் அவர் காலத்தை சுருக்கிட்டான். 41 வயதில் மாரடைப்பு. உடல்நலத்துல அக்கறை எடுத்துக்க வேண்டிய பாடத்தை நமக்கெல்லாம் சொல்லிட்டுப் போயிருக்கார் முத்துக்குமார்.’’

‘‘சரி... உன்னோட கசினுக்கு ஏதோ ஹெல்த் பிராப்ளம்னு சொன்னியே... என்னாச்சு?’’

‘‘பீரியட்ஸ் நேரத்தில் எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாங்கனு, அவங்க ஹஸ்பண்ட் அவங்களை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருக்கார். ‘இந்த நாட்களில் பெண்களுக்கு மூட் ஸ்விங் ஏற்படுறது இயல்பான விஷயம்தான்’னு டாக்டர் அறிவுறுத்தி அனுப்பியிருக்கார். அது சம்பந்தமா ஒரு லிங்க் அனுப்புறேன். அதை உன் கசினுக்கு ஷேர் பண்ணு.’’

‘‘இன்னைக்குப் பேசின விஷயங்களை எல்லாம் வெச்சுப் பார்க்கும்போது, ஹெல்த்துக்கு முக்கியத்துவம் தரணும்னு புரியுது. நான் இனிமே ஸ்போர்ட்ஸ் கிளாஸ் எதுவும் கட் அடிக்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.’’

‘‘அப்போ அனுதான் அடுத்த பி.வி.சிந்து!’’

‘‘சாக்‌ஷி, தீபா, பி.வி.சிந்து எல்லாம் பார்க்க ரொம்பப் பெருமையா இருக்கு. நாமளும் ஏதாச்சும் சாதிக்கணும் கேர்ள்ஸ்!’’

‘‘பண்றோம்... பின்றோம்!’’

- கச்சேரி களைகட்டும்...

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா!
அனுஷா... ஆதிரா... இனியா!

அறிவுமதி எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்க!
http://bit.ly/2a53nju

அனுஷா... ஆதிரா... இனியா!

`பீரியட்ஸ்’ நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன? # ஆண்களின் கவனத்துக்கு!
http://bit.ly/2bkxEf7

அனுஷா... ஆதிரா... இனியா!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் பற்றி தெரிந்ததும் தெரியாததும்!
http://bit.ly/2bDm2a3

அனுஷா... ஆதிரா... இனியா!

நா.முத்துக்குமாரின் நினைவுகளை மீட்டெடுக்க!
http://bit.ly/2b1eWYf

அனுஷா... ஆதிரா... இனியா!

கேட்ஜட்ஸ்-களிடமிருந்து கண்களைப் பாதுகாக்க 20:20:20 வியூகம்!
http://bit.ly/2bmMrK2